Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

நேர்மையின் பயணம் - பா.கிருஷ்ணன்

படிப்பறை

நேர்மையின் பயணம் - பா.கிருஷ்ணன்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

ரவக்குறிச்சிக்குப் பக்கத்தில் இருக்கிற ஆண்டிப்பட்டிக் கோட்டை கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கிறான் ஒரு சிறுவன். திடீரென மழை பெய்கிறது. நெடுநாள்களுக்குப் பிறகு பெய்கிற அந்த மழையில் நனைந்து, குளுமையை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, அருகிலிருந்த பழைய கட்டடமொன்று இடிந்து விழுகிறது. பல ஆடுகள் இறந்து போகின்றன. குடும்பத்தின் ஆகப்பெரிய வாழ்வாதாரம்... மனமுடைந்துபோன அந்தச் சிறுவன் அதன்பிறகு விவசாயக் கூலியாக மாறி களையெடுக்கச் செல்கிறான். அந்தச் சின்ன வயதில் வயலில் சிரமப்படும் அந்தப்பையனைப் பார்த்த ஒரு பெரியவர், `தம்பி, நான் கோயிலில் வைத்து நடத்துகிற திண்ணைப் பள்ளிக்கூடத்துக்கு வா... பாடம் சொல்லித்தருகிறேன்’ என்றார்.

படிப்பறை
படிப்பறை

அப்படிக் கிடைத்த கல்வியைப் பற்றிக்கொண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக, ஆந்திரா, பஞ்சாப் மாநிலங்களின் ஆலோசகராக, அரசின் உயர் அதிகாரிகளைத் தேர்வுசெய்யும் மத்திய பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக வளர்ந்த டாக்டர் இ.பாலகுருசாமியின் வெற்றிக்கதைதான் இந்த நூல். கல்வி ஒரு தலைமுறையின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கான கண்கண்ட உதாரணம். நூலைப் படித்து முடித்ததும், மனதில் படிந்திருக்கிற அயர்ச்சிகள் விலகியோடுகின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்து, பல துயரங்களையும் இடர்களையும் கடந்து மேலெழுந்துவந்த பாலகுருசாமி, தன் பணிக்காலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்த மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நடந்த பல முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். தவறு செய்த கல்லூரிகளின் அங்கீகாரங்கள் பறிக்கப்பட்டன. ஆனாலும், மாணவர்களின் நலன் கெடாமல் பார்த்துக்கொண்டார். தேர்வு முறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். பாடத்திட்டங்களைக் காலத்திற்கேற்றவாறு மாற்றி அமைத்தார். `கேம்பஸ் இன்டர்வியூ’ என்ற பெயர்களில் நடந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் `தமிழ்நாடு மாநில வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற பெயரில் ஒரு திட்டத்தை உருவாக்கி, பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் அனைத்தையும் கொண்டுவந்தார்.

நேர்மையின் பயணம்
நேர்மையின் பயணம்

வழக்கமான ஒரு வெற்றிக்கதையாக இல்லாமல், சுவாரஸ்யமான நாவலைப்போல இந்த நூலை எழுதியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பா.கிருஷ்ணன். எதிர்காலத்தில் நம்பிக்கையற்றுத் தவிக்கும் எல்லோருக்குமான பாடநூல் இது!

நேர்மையின் பயணம்

பா.கிருஷ்ணன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், 177/103, முதல் மாடி, அம்பாள்ஸ் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14

இ-மெயில்: support@nhm.in , விலை: ரூ.400 பக்கங்கள்: 368