Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பேரன்பின் பூக்கள்- மலையாள சிறார் கதைகள்

படிப்பறை

பேரன்பின் பூக்கள்- மலையாள சிறார் கதைகள்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை
தமிழில் சிறுவர் இலக்கியம் தற்போது மிகுந்த கவனிப்புக்குரிய ஒன்றாக மாறிவருகிறது. நேரடியாகவும் மொழிபெயர்ப்புகளாகவும் பல புத்தகங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

‘பேரன்பின் பூக்கள்’ அவற்றுள் மிக முக்கியமான நூல். மலையாளத்தின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர் சுமங்களா.

85 வயதாகும் இவரின் இயற்பெயர் லீலா நம்பூதிரிபாட். சிறுவர்களுக்காகக் கதைகள் எழுதுவதில் தனித்துவம் மிக்கவர். இவர் எழுதிய ‘மிட்டாய் பொது’ எனும் நூல், கேரள சாகித்ய அகாடமியின் சிறந்த சிறுவர் நூலுக்காக விருது பெற்றது. அந்த நூலே தற்போது ‘பேரன்பின் பூக்கள்’ எனத் தமிழில், யூமா வாசுகியால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘குழந்தைகளிடத்தில், ஒட்டுமொத்த உலகமும் ஒரு குடும்பம்தான் எனும் கருத்து வளர்ப்புதான் சுமங்களாவின் நோக்கம்’ என, முன்னுரையில் பேராசிரியர் பிஜூ விஜயன் சொல்வது முற்றிலும் சரி. இதன் அநேகக் கதைகள் வீட்டைச் சுற்றி நிகழக்கூடிய சமபவங்களே. ஆனாலும், நம் கவனத்துக்கு அதிகம் வராத சம்பவங்கள் என்பதால் சுவாரஸ்யம் கூடுகிறது. உதாரணமாக, நாம் காலையில் எழுந்ததும் ஜன்னல் வழியே அணில் ஓடுவதைப் பார்ப்போம், மரத்தில் காகம், புறா உள்ளிட்டவை இருப்பதைப் பார்ப்போம். ஆனால், அவற்றின் ஒருநாள் எப்படிக் கழிகிறது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அதுவொரு தனி உலகம், அதில் இருக்கும் அன்பு, சண்டை, ஏமாற்றம், விட்டுக்கொடுத்தல் என சுவையான கதைகளை நம்முன் விரிக்கிறது இப்புத்தகம்.

பேரன்பின் பூக்கள்- 
மலையாள சிறார் கதைகள்
பேரன்பின் பூக்கள்- மலையாள சிறார் கதைகள்

எளிமையான ஒரு கதைக்கருவை எடுத்துக்கொண்டு, நம் கண்முன் காட்சிகளாக வருவதுபோன்ற எழுத்துநடையில் எழுதியிருக்கிறார் சுமங்களா. அதனால், சிறுவர்கள் படிக்கும்போது அவர்களின் மனதில் காட்சிகளாவும் இக்கதைகள் விரியும். காக்கையன், தோழன், பேரன்பின் பூக்கள், விலங்குகளின் கிராமம் உள்ளிட்ட கதைகள் எல்லோருக்கும் பிடித்துப்போகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொம்மை எனும் கதையில் சாவித்ரி எனும் சிறுமி, ஒரு தச்சரிடம் ‘பொம்மை வீடு’ ஒன்றைக் கேட்கிறாள். எழுத்தாளராக ஆசைப்பட்ட அந்தத் தச்சர், அற்புதமான ஒரு பொம்மை வீட்டைச் செய்துதருகிறார். சாவித்ரியின் கற்பனையில் இருந்ததை விடவும் தச்சர் செய்துதந்த வீடு அழகானதாக இருந்தது. இத்தோடு கதை முடியாமல், இன்னும் நீள்கிறது. அந்தப் பகுதி சிறுவர்களுக்கு, பல்வகையான வாழ்க்கைச் சூழலை உணர்வுபூர்வமாக அறிமுகப்படுத்துகிறது.

சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் அவசியம் படிக்க வேண்டிய பல கதைகள் ‘பேரன்பின் பூக்கள்’ நூலில் உள்ளன.

பேரன்பின் பூக்கள்

மலையாள சிறார் கதைகள்

சுமங்களா - தமிழில்: யூமா வாசுகி

வெளியீடு:

சித்திர செவ்வானம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ட்ரன்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600018

தொலைபேசி:044-24332424, 2433292 4 , விலை: ரூ.350, பக்கங்கள்: 400

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism