Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இச்சா - ஷோபாசக்தி

படிப்பறை

இச்சா - ஷோபாசக்தி

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

லா என்னும் கரும்புலியின் வாழ்க்கை குறித்து விவரிக்கும் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா.’ தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண் தற்கொலைப்போராளியான ஆலாவின் வாழ்க்கை மூன்று பகுதிகளாக விவரிக்கப்படுகிறது. கிழக்கிலங்கையில் உள்ள இலுப்பங்கேணி, சிங்களக்குடியேற்றம் நிகழ்ந்த தமிழர் பகுதி. ஆலாவும் பாடசாலையில் சிங்களமே படிக்கும் சூழல். சிங்களப்பேரினவாதத்தின் தாக்கத்துக்குட்பட்ட ஊர்க்காவல் படையால் ஆலாவின்மீது நிகழ்த்தப்படும் வன்முறை, புலிப்போராளியாக மாறியபிறகு ஆலாவின் வாழ்க்கை, தற்கொலைத்தாக்குதல் தோல்வியடைந்த பிறகு கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் 300 ஆண்டுக்கால தண்டனை விதிக்கப்பட்ட சிறை வாழ்க்கை, சிறையிலிருந்து மீட்டு வாமன் என்னும் புலம்பெயர்ந்த தமிழரால் திருமணம் செய்யப்பட்ட வாழ்க்கை என வெவ்வேறு காலகட்டம், வெவ்வேறு மனநிலைகள், வெவ்வேறு நிலப்பரப்பு என விரிகிறது கதை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கமாகத் தமிழ் நாவலின் ஓர் அத்தியாயம் என்பது பல பக்கங்களாக விரிவதே வழக்கம். ஆனால் இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் முடியும் சின்னச் சின்ன அத்தியாயங்கள், புனைவின் நம்பகத்தன்மையைக் கூட்டுவதைப்போல் பின்னட்டையில் முதன்மைப் பாத்திரத்தின் புகைப்படம் ஆகியவை புதிய உத்திகள் எனலாம். நாவல் முழுதும் விரியும் ஈழத்தமிழ் மற்றும் சிங்களத்துப் பழமொழிகளும் சொலவடைகளும் வாசிப்பில் ஈர்க்கின்றன. உதாரணம்: ‘படுத்துக்கொண்டே பிரார்த்தனை செய்தால் கடவுளும் உறங்கிக்கொண்டேதான் கேட்பார்.’

இச்சா -
ஷோபாசக்தி
இச்சா - ஷோபாசக்தி

ஆனால் வழக்கமாக ஷோபாசக்தியின் எழுத்துகளில் காணப்படும் மெல்லிய பகிடி, மரபான கதைசொல்லல் முறையிலிருந்து விலகி வாசகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் புதிரெழுத்துப்பாதை ஆகியவை ‘இச்சா’வில் மிகக்குறைவு. சுல்தான் பப்பாமீது ஆலா கொள்ளும் ஒருதலைக்காதல் குறித்த பகுதியும் வாமனுடனான திருமண வாழ்க்கைப் பகுதியும் வழக்கத்திற்குமாறாக இலக்கிய அம்சம் குறைவாகவும் செயற்கைத்தன்மை அதிகமும் கொண்டு விளங்குகின்றன. சிங்களக் குடியேற்றம் நிகழும் பகுதியில் ஏற்படும் தமிழ் - சிங்களப் பண்பாட்டுப் பரிவர்த்தனைகள், கண்டி அரசன் கூத்து குறித்த விவரணை, சிறுமி ஆலாவின் மீது நிகழும் பாலியல் அத்துமீறல், ஆலாவின் சிறை வாழ்க்கை, இலங்கையில் சமீபத்தில் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்பை முன்வைத்துக் கதை தொடர்வதன்மூலம் நம்பகத்தன்மை பாவனை கொண்ட புனைவு ஆகியவற்றில் ஷோபாசக்தி என்ற தனித்துவமிக்க படைப்பாளியின் எழுத்து வலிமை வினைபுரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இச்சா

ஷோபாசக்தி

வெளியீடு: கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005. பக்கங்கள்: 304, விலை: 270 ரூபாய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism