Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தலித் சினிமா தொகுப்பு: எஸ்.தினேஷ்

படிப்பறை

தலித் சினிமா தொகுப்பு: எஸ்.தினேஷ்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மாற்று சினிமா, அரசியல் சினிமா ஆகியவை குறித்துத் தமிழில் குறிப்பிடத்தக்க புத்தகங்களை வெளியிட்டிருக்கும் ‘பேசாமொழி’ பதிப்பகத்தின் வெளியீடு ‘தலித் சினிமா.’ இந்தியா ஒரு சாதியச் சமூகம் என்பதால் சினிமாவும் அந்த யதார்த்தத்திலிருந்து தப்ப முடியாது. இன்னும் சொல்லப்போனால் சாதியத்தை வளர்த்தெடுத்ததில் சினிமாவுக்கு முக்கியப் பங்குண்டு என்பதற்கு கடந்தகாலம் தொட்டு சமகாலம் வரை ஏராளமான உதாரணங்களைச் சொல்லலாம். சமீபகாலங்களாக சாதி, தீண்டாமை குறித்து வெளிப்படையான பதிவுகளும் விமர்சனங்களும் இந்திய சினிமாக்களில் முன்வைக்கப்படுகின்றன. 90களில் அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் கலை, தலித் இலக்கியம் ஆகியவை எழுச்சிபெற்றதைப்போலவே சற்றுத் தாமதமாகவேனும் தலித் சினிமாக்கள் உருவாகியுள்ளன. அதுகுறித்த வெவ்வேறு பார்வைகளை முன்வைக்கும் பதிவுகளின் தொகுப்பு இது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாதியப் படங்களாக விமர்சிக்கப்பட்ட கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’, ‘விருமாண்டி’ ஆகியவற்றின்மீது மாற்றுப்பார்வைகளை முன்வைக்கும் யமுனா ராஜேந்திரனின் கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்று. ‘மெட்ராஸ்’ திரைப்படத்துக்கு வழக்கமான திராவிட சினிமா சட்டகம் பொருந்தாது என்று சொல்லும் யமுனா ராஜேந்திரன், அதேநேரத்தில் நாகராஜ் மஞ்சுளேயின் ‘பன்றி’ படத்தைப்போல் அல்லாமல் ‘மெட்ராஸ்’ ஏன் ஒரு சாகசப்படமாக இருக்கிறது என்றும் அலசுகிறார். இந்தக் கேள்வி இயக்குநர் பா.இரஞ்சித்திடமே முன்வைக்கப்பட்ட நேர்காணலும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. ‘கடவுளின் பெயரால்’, ‘போரும் அமைதியும்’, ‘ஜெய்பீம் காம்ரேட்’ போன்ற முக்கியமான ஆவணப்படங்களை எடுத்த ஆனந்த் பட்வர்தனின் நேர்காணல் பன்முகப்பார்வைகளை முன்வைக்கிறது.

தலித் சினிமா
தலித் சினிமா

ஆனந்த் பட்வர்தன், ‘பன்றி’ பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே, ‘அம்பேத்கர்’ பட இயக்குநர் ஜாபர் படேல், பா.இரஞ்சித், ‘தலித்முரசு’ இதழாசிரியர் புனிதப்பாண்டியன், அம்ஷன்குமார், ஆர்.பி.அமுதன் என்று முக்கியமான நேர்காணல்கள் அமைந்திருந்தாலும் கட்டுரைகளைவிட நேர்காணல்கள் அதிகம் என்ற தோற்றம் உருவாகி விடுகிறது. மேலும் ‘ஜெய்பீம் காம்ரேட்’ ஆவணப்படத்தை இயக்கியிருந்தாலும் ஆனந்த் பட்வர்தனை தலித் சினிமா என்னும் வரையறைக்குள் அடக்கிவிட முடியாது. ‘மெட்ராஸ்’ வெளியான காலகட்டத்தில் உருவான நூல் என்பதால் தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ பற்றியே இந்நூலில் பேசப்பட்டுள்ளது. அதற்குப்பிறகு கபாலி, காலா, பரியேறும் பெருமாள், அசுரன் என்று சாதியம் குறித்து விமர்சனம் வைத்த சினிமாக்கள் குறித்த கட்டுரைகளும் அடுத்தடுத்த பதிப்பில் சேர்க்கப்பட்டால் செழுமையான நூலாக விளங்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலித் சினிமா தொகுப்பு: எஸ்.தினேஷ் வெளியீடு: பேசாமொழி பதிப்பகம், 1, ஸ்ருதி அப்பார்ட்மென்ட், காந்தி நகர், முதல் குறுக்குத்தெரு, அடையாறு, சென்னை - 600020. பக்கம்: 256, விலை: ரூ.220

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism