Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

வாழ்க வாழ்க - இமையம்

ப்போதோ நடந்த வரலாற்றிலும் நடந்ததா, இல்லையா என்று தெரியாத புராணங்களிலும் கதைகளைத் தேடிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் மத்தியில், நம்மைச் சுற்றி நிகழும் வாழ்க்கையிலிருந்து கதைகளை உருவாக்குபவர் எழுத்தாளர் இமையம். அதிலும் சமகால நிகழ்வுகளையோ அரசியலையோ எழுத்தில் கொண்டுவந்தால் அது இலக்கியமே ஆகாது என்ற சானிட்டைசர் விமர்சகர்களைப் புறக்கணித்து விட்டு சமகால நிகழ்வுகளையே கதைகளாக மாற்றுபவர் இமையம். அந்தவகையில் இந்த ‘வாழ்க வாழ்க’ குறுநாவலும் ஒரு சமகாலக் கதைதான்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தன் தலைவியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு, ஆளுக்கு 500 ரூபாய், ஒரு புடவை என்று தன் ஊரிலிருந்து ஆள்களை அழைத்துச் செல்கிறார் கட்சிக்காரர் வெங்கடேசப் பெருமாள். காலை வெயிலில் பெண்கள் கூட்டம் காத்திருக்க, மதியத்துக்கு மேல் சாவகாசமாய் ஹெலிகாப்டரில் இறங்கி, எழுதிவைத்த பேப்பரை மேடையில் தலைவி படிக்கத் தொடங்குகிறார். தலைவியின் வருகைக்காகக் கூட்டம் காத்திருக்கும்போது நிகழும் உரையாடல்களும் சம்பவங்களும்தான் ‘வாழ்க வாழ்க.’

படிப்பறை

அறுபதாண்டுகள் திராவிடக் கட்சி ஆட்சியில் இருக்கும் தமிழகத்தின் நல்லது, கெட்டது இரு கட்சிகளைச் சுற்றியே இருக்கின்றன. இவற்றைத் தொடர்ச்சியாகத் தன் எழுத்தில் உண்மையாகவும் துணிச்சலுடனும் பதிவு செய்துவருகிறார் இமையம். ஒருகாலத்தில் தலைவர்களைப் பார்ப்பதற்காக, அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காகக் கொள்கைப்பிடிப்புடனும் கட்சி அபிமானத்துடனும் குடும்பத்துடன் மக்கள் வந்தது போய், இப்போது பணம் கொடுத்துக் கூட்டம் சேர்க்க வேண்டிய அவலத்தை முன்வைக்கிறது நாவல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொதுக்கூட்டத்தில் காத்திருக்கும்போது நடைபெறும் உரையாடல்கள் எல்லாம் நமக்குப் பரிச்சயமானவைதான். ஆனால் அதைத் தொகுத்து நம்முன் வைக்கும்போதுதான் அது சமூக விமர்சனமாக மாறுகிறது. கோடிக்கணக்கில் கட்-அவுட்கள், அலங்கார வளைவுகள், கொடித் தோரணங்கள், மேடைகள் உருவாக்கப்பட்ட பொதுக்கூட்டத்தில் பெண்கள் சிறுநீர் கழிக்க இடமில்லை. காசு கொடுத்துக்கூட்டப்பட்ட கூட்டம் என்றாலும், அங்கேயே சாதியும், யாருக்கு அருகில் யார் அமர்வது என்ற சாதிக்கட்டுப்பாடும் இருக்கின்றன. மேடையில் நடனமாடும் பெண்களைப் பற்றிய கூட்டத்துப்பெண்களின் பார்வையிலிருந்து மக்களைப் பற்றிக் கவலைப்படாத தலைவியின் எதேச்சாதிகாரம் வரை மிக நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார் இமையம்.

நூற்றுக்கும் குறைவான பக்கங்களைக் கொண்ட குறுநாவல். ஆனால் அரைநூற்றாண்டுக்கும் மேலான தமிழக வாழ்க்கையை விமர்சனபூர்வமாக முன்வைக்கிறது.

வாழ்க வாழ்க இமையம்

வெளியீடு : CRE-A, New no 2, Old no 25, 17th East street, Kamarajar nagar, Thiruvanmiyur, Chennai - 600 041.

Email : crea@crea.in, பக்கங்கள் : 93, விலை : ரூ. 125