‘வைக்கம்’ கேரளத்தில் இருந்தாலும் தமிழர்களால் அதிகம் அறியப்பட்ட ஊர். ‘வைக்கம் வீரர்’ என்று போற்றப்படும் பெரியாரால் தமிழகத்துக்கு வைக்கமும் அங்கு நடந்த போராட்டமும் பதிவானது, ஆனால் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்துத் திரிபுகளும் அவதூறுகளும் முன்வைக்கப்படும் காலத்தில், பொருத்தமாக வெளியாகியிருக்கும் புத்தகம், பெரியார் பற்றி மட்டுமல்லாமல், வைக்கம் போராட்ட வரலாறு குறித்து ஆவணங்களுடன் விரிவாக விளக்குகிறது.

காந்தி வைக்கம் போராட்டத்தின் வழிமுறைகள், வடிவம் குறித்துத் தொடர்ந்து போராட்டத்தலைவர்களுடன் கடிதங்கள் வழி உரையாடிக்கொண்டே இருக்கிறார். அதேசமயம், தீண்டாமை, நெருங்காமைக்கு எதிரான போராட்டமாக அவர் பார்க்காமல் கோயில் நுழைவுப்போராட்டமாக அவர் பார்த்ததையும், அதனால், இந்து அல்லாத பிற தலைவர்களைப் போராட்டக்களத்தில் இருந்து அவர் விலக்கியதையும், இந்தச் சத்தியாக்கிரகத்தை அகில இந்தியப் போராட்டமாக அவர் கருதாததையும் உரிய சான்றுகளுடன் விவரிக்கவும் புத்தகம் தவறவில்லை.

வைக்கம் போராட்டக் களத்தின் முன்னணித் தலைவர்கள் கைதானபோது, தலைமையேற்க தமிழகத்திலிருந்து பெரியார் வைக்கத்துக்குச் செல்கிறார். வைக்கத்தை அடுத்துள்ள பகுதிகளில் மக்களிடையே பேசி மக்கள் ஆதரவைத் திரட்டுகிறார். இந்தப் பகுதிகளில் பெரியாரின் பேச்சுகளுக்கான ஆதாரங்களில் அதிகம் இடம்பெறுவது காவல்துறையினரின் குறிப்புகள். வைக்கத்தில் அவர் மக்களைத் திரட்டிய, போராடிய நாள்களைவிடவும் அதிகமான நாள்கள் அவரைச் சிறைக்குள் இருக்க வைக்க இதுவும் ஒரு காரணம். மக்களிடையே பேசும்போது அவர் பயன்படுத்திய தர்க்கங்களும் கருத்துகளும் பிற்காலப் பேச்சுகள் எழுத்துகளுக்கான முன்னோட்டம்தான். இப்பகுதிகளை அடுத்து, பின்னிணைப்புகளாகவும் காந்தி, பெரியார் இருவர் தொடர்புடைய பல சான்றுகள் விரிகின்றன. இந்தக் காரணத்தினால், கூறியது கூறல் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிடுகிறது. ஒரு வரலாற்று ஆய்வில் அதனை ஒரு குறையாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

வரலாற்றில் ஓராண்டுக் காலம் மட்டும் நடைபெற்ற ஒரு போராட்டத்தைப் பற்றிய ஆய்வை எழுதிமுடிப்பதற்குப் பழ.அதியமானுக்குப் பத்தாண்டுகளுக்கும் மேல் தேவைப்பட்டிருக்கிறது என்றால், அவருடைய உழைப்பையும் இந்தப் புத்தகத்தின் முக்கியத்துவத்தையும் அறியலாம்.

வைக்கம் போராட்டம்

ஆய்வு நூல்

பழ.அதியமான்

வெளியீடு: காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629001

விலை: ரூ.325,

பக்கங்கள்: 648