Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கு, தமிழக ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடம் மலையளவு.

படிப்பறை

தமிழ்த் திரையிசைப் பாடல்களுக்கு, தமிழக ரசிகர்கள் கொடுத்திருக்கும் இடம் மலையளவு.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

நூறு பாடல் வரிகளை, சின்னக் குறிப்புகூட இல்லாமல் நினைவில் வைத்திருக்கும் பலரைப் பார்க்கமுடியும். அதேபோல, எந்தப் படத்தில் இந்தப் பாடல், யார் பாடியது, யார் நடித்தது உட்பட பல தகவல்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இயல்பாகவே நமக்கு உண்டு. அவர்களுக்குப் பெருந்தீனி, கவிஞர் யுகபாரதி எழுதியிருக்கும் `பின்பாட்டு' நூல். ஒரு பாடல் உருவாவதற்குப் பின்னணியில் நடைபெறும் சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகளின் தொகுப்பு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யுகபாரதியே எழுதிய பாடல்களின் பின்புலம் பற்றிய விவரிப்பாக நூலின் தொடக்கக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. அதிலும், தன் வரிகளின் ரிஷிமூலம் எதுவென அடையாளம் காட்டுவதில் எந்தத் தயக்கமும் அவரிடம் இல்லை. உதாரணமாக, `திருமலை'யில் இவர் எழுதிய `நீயா பேசியது' என்ற பாடலின் உந்துவிசையாக, `நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தின் `சொன்னது நீதானா' எனச் சொல்வதோடு, தர் பற்றிய ஒரு சித்திரமும், அந்தப் பாடல் உருவாக்கத்தில், எம்.எஸ்.விஸ்வநாதன் - கண்ணதாசன் இருவருடையே நடந்த `செல்ல' சண்டையையும் சொல்கிறார். அந்தத் தகவலுக்குப் பிறகு, `சொன்னது நீதானா' பாடல் வரிகள், வேறொரு நிறம் கொண்டுவிடுகின்றன.

படிப்பறை

ஒருசில கட்டுரைகளுக்கு அடுத்து, நேரடியாகவே இசை ஜாம்பவான்களைப் பற்றிய ஆச்சர்யமான விஷயங்களை விவரிக்கத் தொடங்கிவிடுகிறார். பாரதிதாசனின் சீடரான உடுமலை நாராயண கவி, கடவுள் மறுப்புக் கொள்கையுடையவர். ஆனால், திரைக்காகச் சில சமரசங்கள் செய்து எழுதினார். சொந்த ஊர் திருவிழாவுக்கு நன்கொடை கொடுத்தார். ஆனால், அதே ஊரில் இவரின் குடும்பம் சாதி விலக்கம் செய்யப்பட்டது எனும் செய்தி வியப்பளிக்கிறது. அதனால், திரையிசைப் பாடல்கள் பற்றியது என்பதிலிருந்து சமூகத்தின் மிக முக்கியமான நடைமுறைகளைப் போகிற போக்கில் அலசுகிறது.

இந்த நூல் படையல் செய்யப்பட்டிருக்கும் வயலின் இசைக்கலைஞர் செங்கல்வராயன் பற்றிய கட்டுரை அளிக்கும் அதிர்ச்சியை நம்மால் சட்டென்று எதிர்கொள்ள முடியாது. `கண்களின் வார்த்தை புரியாதோ' என்று இன்றளவும் பலரால் விரும்பிக் கேட்கப்படும் பாடல் உருவானதன் தொடக்கம், செங்கல்வராயனின் வயலின் என்பதும், நீண்ட காலம் ஓர் இசைக்கருவியை இசைப்பவராக இருந்த அவருக்குத் தனித்த அடையாளத்துடன் பெரிய வாய்ப்பு கிடைக்கும்போது மரணம் அவரைக் கவ்வியதுதான் தாளமுடியாத சோகம். இப்படி, பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

நாம் கவனிக்காமல் விட்ட சில பாடல்களைத் தேடிக் கேட்கவும், சில பாடல்களுக்குப் புதிய அர்த்தமும் கொடுக்கிறது இந்தப் புத்தகம்.

பின்பாட்டு யுகபாரதி

நேர்நிறை, 181, இரண்டாம் தளம், சி.வி.ராமன் தெரு, ராமகிருஷ்ணா நகர், ஆழ்வார்திருநகர், சென்னை - 600 087

தொடர்புக்கு: 9841157958 விலை : ரூ.250