Published:Updated:

படிப்பறை

சூழலும் சாதியும்
பிரீமியம் ஸ்டோரி
சூழலும் சாதியும்

சூழலும் சாதியும்

படிப்பறை

சூழலும் சாதியும்

Published:Updated:
சூழலும் சாதியும்
பிரீமியம் ஸ்டோரி
சூழலும் சாதியும்

சாதியம் என்பது ஓர் ஆபத்தான மனநோய், அது மனித வரலாற்றின் எந்தப் புள்ளியில் உருவாகி வளர்ந்தது; ‘பிறரைவிட தாங்கள் உயர்ந்தவர்கள்’ என்கிற மனநிலைக்கு ஒரு குறிப்பிட்ட இனக்குழு எப்படி, ஏன் வந்தது; அந்த மனநிலையைத் தனக்குச் சாதகமாக, பிறருக்குள் எப்படிக் கட்டமைத்தது; அதில் சூழலியல் எப்படித் தொடர்புபட்டிருக்கிறது என்பவற்றை நுட்பமாக ஆராய்கிறது நூல்.

சாதியம் என்ற நச்சு உளவியல், நம்மிலும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு உயிர்ப்பொருளிலும் எப்படி ஏற்றப்பட்டிருக்கிறது என்பதை நெற்றிப்பொட்டில் ஆணியை இறக்குவதுபோல ‘நச்சென’ முன்வைக்கிறார் நக்கீரன். மனிதர்களுக்குள் உயர்வு x தாழ்வு எப்படியெல்லாம் கற்பிதம் செய்யப்பட்டது, அதன் உச்சமாகத் தீண்டாமை எனும் இழிநிலை ஏற்பாடு எவ்வாறு கொண்டுவரப்பட்டது என்பதோடு நிலம், நீர், தீ, காற்று, வானம் என்கிற ஐந்து இயற்கை நிலைகளிலும் எவ்வளவு ஆழமாகத் தீண்டாமை படிந்துள்ளது என்பதை முன்வைக்கிறது நூல். உண்ணும் உணவில் சாதியம் கலந்திருப்பது நாம் அறிந்த கதையே. ஆனால், தாவரங்களில், விலங்குகளில், பறவைகளில், நீர் உயிரிகளில்... அவ்வளவு ஏன், புற்களிலும் திசைகளிலும்கூட சாதியம் புனைந்து ஏற்றித் திணிக்கப்பட்டிருக்கும் விபரீத அரசியலைத் தகுந்த தரவுகளோடு முன்வைக்கிறார் நூலாசிரியர்.

படிப்பறை

சூழலியலில் துப்புரவு விலங்குகள் பெறும் முக்கியத்துவத்தையும் - மனிதச் சமூகத்தில் துப்புரவுப் பணி செய்வோர் பெறும் இழிநிலையையும் எதிரெதிரே வைத்து, கவலைகொள்ளும் நூல், மதமும் தத்துவங்களும் சாதியை வளர்ப்பதில் எப்படிப் பங்காற்றிவருகின்றன என்பதை விளக்குகிறது.

சூழலியலுக்குள் சாதியத்தை வைத்து அல்லது சாதியத்துக்குள் சூழலியலை வைத்து நுட்பமான உரையாடலைச் சாத்தியப்படுத்தியிருக்கும் இந்நூல், தமிழ் அறிவுச்சூழலில் ஒரு காத்திரமான முன்வைப்பு. சாதிய, மதவாத அரசியலைப் பற்றிப் பேசாமலே மேலோட்டமான சூழலியல் பேசுபவர்கள் மத்தியில் தெளிவான அரசியல் பார்வையுடன் எழுதப்பட்டுள்ள நூல். பெரியாரால் பெயர் சூட்டப்பட்ட நக்கீரன், சாதியத்துக்கும் சூழலுக்குமான தொடர்பு குறித்த இந்நூல் மூலம் தன் பெயருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

சூழலும் சாதியும்

- நக்கீரன்

வெளியீடு:
காடோடி பதிப்பகம்
6, விகேஎன் நகர்,
நன்னிலம் - 610 105.
திருவாரூர் மாவட்டம்.
தொடர்பு எண்: 8072730977

பக்கங்கள்: 88
விலை: ரூ. 80

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism