Published:Updated:

படிப்பறை

நாக்கை நீட்டு
பிரீமியம் ஸ்டோரி
நாக்கை நீட்டு

மொழிபெயர்ப்புப் படைப்புகள் புதிய வாழ்வியலையும் பண்பாடுகளையும் நமக்கு அறிமுகப்படுத்துபவை.

படிப்பறை

மொழிபெயர்ப்புப் படைப்புகள் புதிய வாழ்வியலையும் பண்பாடுகளையும் நமக்கு அறிமுகப்படுத்துபவை.

Published:Updated:
நாக்கை நீட்டு
பிரீமியம் ஸ்டோரி
நாக்கை நீட்டு
படிப்பறை
படிப்பறை

ன் சொந்த வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளின் காரணமாக திபெத்தை நோக்கிப் பயணிக்கிறார் சீன எழுத்தாளர் மா ஜியான். அங்கு கிடைத்த அனுபவங்களின் வாயிலாக நிஜம் எது, புனைவு எது எனப் பிரித்தறிய முடியாத வகையில் எழுதப்பட்ட கதைகள் அடங்கிய தொகுப்பே ‘நாக்கை நீட்டு.’ திபெத்திய வாழ்வியலைக் கொச்சைப்படுத்தி யிருப்பதாகக் கூறி 1987-ம் ஆண்டில் சீனாவில் இந்தப் புத்தகம் தடைசெய்யப்பட்டது. அதனால் இதன்மீது எல்லோரின் கவனமும் திரும்பியது. சீன மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகளை, தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் அகிலன் எத்திராஜ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொகுப்பில் மொத்தம் ஐந்து கதைகள்தாம். ஆனால் அவை, கொட்டும் பனியின் குளிர்ச்சியைக் கடத்தி நம்மை உறைய வைக்கும் கதைகளாக இருக்கின்றன. ‘நீலவானும் அந்தப் பெண்ணும்’ எனும் கதையில், தந்தையின் பாலியல் தொந்தரவிலிருந்து தப்பித்து, இரண்டு பேருக்கு மனைவியாகிப் பிரசவத்தில் இறந்துபோகும் பெண்ணொருத்தியின் இறுதிச் சடங்கைக் காட்சியாக்குகிறார் மா ஜியான். விண்ணடக்கம் எனும் அந்தச் சடங்கில், உடலைப் பல துண்டுகளாக்கிப் பருந்துகளுக்கும் வல்லூறுகளுக்கும் இரையாக்குகிறார்கள் திபெத்தியர்கள். இக்கதை மட்டுமல்ல, ஒவ்வொரு கதையும் அதிர்ச்சி ரகம்.

naakkai neettu
naakkai neettu

‘துரோல்முலா ஏரியின் புன்னகை’ கதையில், கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்ற இளைஞனுக்கு நகர்வாழ்வின் மீதான மயக்கத்தைப் பற்றியது. நகரத்தில் தான் கண்டவற்றை, குடும்பத்தினரிடம் சொல்ல விரையும் அவனின் கற்பனைகளும் வியப்பானவை. தகாத உறவொன்றின் பாவத்தைக் கரைக்க யாத்திரை செல்லும் ஒரு நாடோடியுடன் தங்கும் கதையாசிரியரின் மனப்பதிவே ‘எட்டு நச்சுப் பற்கள் கொண்ட கரப்பான்’ கதை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு கதையும் ஒருவித வெறுமையையும் மன இறுக்கத்தையும் வாசிப்பவருக்கு அளிக்கக்கூடியவையே. எளிமையான மொழியாக்கம், கதைக்களத்தின் தன்மையை உணர்த்தும் விதத்தில் நேர்த்தியாக இருப்பது சிறப்புக்குரியது.

நாக்கை நீட்டு

மா ஜியான்

தமிழில்

அகிலன் எத்திராஜ்

வெளியீடு : அடையாளம்,1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621310; பக்கங்கள் : 88 , விலை : 90, தொடர்புக்கு: 04332 273444

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism