ஜி.கார்ல் மார்க்ஸின் எழுத்துகளுக்கும் அந்தத் தன்மை உண்டு.
மொத்தம் 11 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘ராக்கெட் தாதா.’ உள்ளே இருக்கும் கதைகளில் பெண் கதாபாத்திரங்களை கார்ல், கையாண்டிருக்கும் விதத்தை சந்தோஷ் நாராயணனின் அட்டைப்படமே அழகாகப் பேசிவிடுகிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
‘சுமித்ரா’ கதையில் கோவிந்தன் மனைவி ராசத்தைப் பற்றி எழுதுகையில் ‘பின்னிரவுகளில் அவரருகில் படுத்துக்கொண்டு கால்களை அவர்மீது போட்டுக்கொண்டு அவரது நெஞ்சைத் தடவிக்கொடுத்துக்கொண்டு, மின்னும் அவரது கண்களைப் பார்த்தபடியே அவருடன் பேசிக்கொண்டிருக்கும் ராசத்துக்கு அத்தகைய நேரங்களில் புருசனின் இந்த குணத்தின்மேல் உன்மத்தம் பெருகும்’, கற்படிகள் கதையில் ராமமூர்த்தியின் மனைவி பற்றிக் குறிப்பிடுகையில் ‘கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த அதே நாளில் கொண்டிருந்த மையலில் ஓர் இழையைக்கூடத் தவற விடாமல் இப்போதும்கூட அவரை அதே கண்களுடன் அவளால் பார்க்க முடியும்’ ஆகிய வரிகளாகட்டும், ‘சித்திரங்கள்’ கதையில் திவ்யாவின் தவிப்பு, ‘சுமை’ கதையில் ஜெயந்தியின் ஆற்றாமை என்று பல இடங்களில் பெண்களின் உணர்வுகளை அழகாக எழுதியுள்ளார் கார்ல்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மற்ற கதைகளிலிருந்து ‘ராக்கெட் தாதா’ கதையின் உள்ளடக்கமும், வடிவமும் தனித்து நிற்கிறது. மனைவி மெஹ்ருன்னிஸா மீது, தாவூத்துக்கு இருக்கும் தீராக்காதலை வரிக்கு வரி கோடிட்டுக் காட்டியிருக்கிறார். பணிநிமித்தம் வெளிநாட்டில் இருக்கும் தாவூத்தின் ‘ராக்கெட் தாதா’ பெயர்க்காரணம் முதல் ஊருக்கு வந்து திரும்பிப்போகும்போது மெஹ்ருன்னிஸாவுக்கு வைக்கும் நீண்ட முத்தம்வரை பிரிவின் துயரும், பிரிவினால் அடர்ந்த அவர்கள் காதலும் கார்லின் எழுத்துகளால் மிளிர்கின்றன. இன்னொரு முக்கியமான கதையாக ‘லட்டு’வைக் குறிப்பிடலாம். புனித பிம்பத்தில் சிக்குண்டு கிடக்கும் பலவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தோலுரிக்கிறது இவரின் எழுத்துகள். கலவி குறித்த வர்ணனைகளில் இருக்கும் விவரிப்பில் பெண்களின் அகவுலகை, அவர்களின் எதிர்பார்ப்பை எளிதாகத் தொட்டுவிடுகிறார். புனைவு ஒரு புறம் நிகழ்ந்துகொண்டிருக்க, கதையின் வசதிக்காக எழுத்தாளரும் கதையினூடே பேசிச் சஞ்சரித்திருப்பது இந்தக் கதையை இன்னுமொரு படி மேலே வைக்கிறது.

தீவிரமான கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பிலேயே காபி ஷாப், கிறக்கம் என்று சிரிப்புக் கதைகளும் உண்டு. வலிந்து பெண்களின் உணர்வுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறாரோ என்று சில கதைகளில் எண்ண வைக்கிறார். முதல் வாசிப்பிலேயே வசீகரிக்க வைக்கிற எழுத்துக்காக நிச்சயம் ராக்கெட் தாதாவைப் புரட்டலாம்.
ராக்கெட் தாதா
ஜி. கார்ல் மார்க்ஸ்
எதிர் வெளியீடு
நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642002. தொடர்புக்கு: 04259 - 226012, 99425 11302 விலை: ரூ. 190