Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

சமகாலத்தின் சமூக நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை தமிழ் இலக்கியத்தில் போதுமான அளவில் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் சொல்லப்படுவது வழக்கம்.

னால், சமகால அரசியல் நிகழ்வுகளைப் படைப்பாக்குவதில் கவனம் செலுத்தும் படைப்பாளி அ.கரீம். ‘சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை’ இவரின் இரண்டாம் சிறுகதைத் தொகுப்பு.

படிப்பறை

ஒரு பிரச்னையில் எல்லோருக்கும் தெரிந்த அரசியல் பக்கங்களை நேரடியாகப் பேசாது, அதில் சிக்குண்ட எளிய மனிதர்களின் வலிகளின் வழியாக அச்சிக்கலின் ஆபத்தை உணர வைக்கிறார். உதாரணமாக, ‘இருள்’ எனும் கதை, மாநகரத்தில் ஓர் இரவில், ஒரு பெண் தங்குவதற்கு இடமின்றி அறிமுகம் இல்லாத வீட்டுத் திண்ணையில் ஒளிந்துகொள்வதாகத் தொடங்குகிறது. அவள் தன் கிராமத்திற்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதற்குக் கோவையில் குண்டுவெடித்த நாளின் பின்னணியை வைக்கிறார். அந்தப் பெண்ணின் வழியே அங்கு நடந்த கோரச்சம்பவங்கள் பற்றிய மாற்றுப்பார்வையைப் பகிர்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

சென்ற ஆண்டில் இந்தியாவையே உலுக்கியது காஷ்மீர் சிறுமி மீதான பாலியல் வன்முறை. அந்தக் கொடூரத்தைப் பற்றிப் பல விஷயங்கள் தெரிந்தும் பேச முடியாத ஒரு ஜீவன் அவள் மேய்க்க அழைத்துச்சென்ற குதிரை. அது, தோழியாகப் பழகிய அச்சிறுமியின் வலியை நம்மிடம் சொல்லும் விதமாக எழுதப்பட்டிருக்கும் கதை, ‘சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை.’ பெரும் அலைக்கழிப்புக்குப் பிறகு ஊரையே காலி செய்யும் குடும்பத்துடன் பயணிக்கும் அக்குதிரை திரும்பிப் பார்க்கையில், “ஆனால், அங்கே அசினாவைப் போல சின்னக் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் குடியிருக்கிறார்கள்” என்று கதை முடிகிறது. உண்மையில், அந்தச் சிறுமிக்காக வேதனைப்பட்ட நம் மனநிலை, இவ்வரிகளைப் படித்ததும் மீதமுள்ள சிறுமிகளுக்காகக் கவலைப்படத் தொடங்கிவிடுகிறது. நல்ல படைப்பு கடத்தும் உணர்வு இதுவே.

படிப்பறை

பழங்குடி மக்களின் நிலத்தைக் கையகப்படுத்துவது, பேத்தியை வன்கொடுமை செய்யும் தாத்தா, வட்டிக்குப் பணம் கொடுக்கும் கிழவி என, நம்மிடையே வாழும் நாம் கவனிக்கத் தவறிய மனிதர்களைப் பற்றி யதார்த்தத்துடன் கதைகளாக்கியுள்ளார் கரீம்.

பெரும் வெளிச்சத்தின் ஓர் ஓரத்தில் இருட்டில் மறைந்துகிடக்கும் மனிதர்கள் பற்றிய கதைகளை மிக நேரடியான மொழிநடையில் எழுதியிருக்கும் இக்கதைகள், சமகாலத்தைப் பற்றிய அழுத்தமான பதிவுகள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘சிதார் மரங்களில் இலைகள் பூப்பதில்லை’

சிறுகதைகள்

எழுதியவர்: அ.கரீம்

வெளியீடு:பாரதி புத்தகாலயம்,7 இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18, பக்கங்கள்: 104 , விலை: ரூ.90