Published:Updated:

ஔவை என்றொரு பெண் இருந்தாளா? | Parveen Sulthana | சொல் புதிது

சொல் புதிது
சொல் புதிது

ஒளவை என்பது குறியீட்டு சொல். ஒளவை என்பது ஆதிப்பெண் என்பதன் பெயர்ப்பு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சேவை அனைவருக்கும் தேவைப்படுகிறது. நமக்குச் சேவை செய்வதற்கென சேவகர்களை வைத்துக் கொண்டு, நாம் அதிகாரத்தில் இருக்கக்கூடிய அந்த மனநிலை இருந்தால் தான் மனிதனுக்கு அவ்வளவு பிடிக்கிறது. சேவை என்கிற சொல் தமிழில் தொண்டு என்கிற சொல்லால் குறிக்கப்படுகிறது. ஒரு நல்ல தொண்டனால் தான் நல்ல தலைவனாக இருக்க முடியும். ஒளவை என்பது குறியீட்டு சொல். ஒளவை என்பது ஆதிப்பெண் என்பதன் பெயர்ப்பு. ஆதிப்பெண் ஒளவை பல நூறாண்டுகளுக்கு எழுதியிருக்கிறாள். அதில் எது தொண்டு என்பதைப் பற்றி ஒளவை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். கடவுளைக் கொண்டுவந்து தொண்டருள் வைத்துவிட்டுப் போனதுதான் ஒளவையின் தமிழ்ச் சிந்தனை. 

தொண்டுள்ளம் இருந்தால் தான் வள்ளல் தன்மையே வரும். மிச்சமாக இருப்பதை அள்ளிக் கொடுப்பது இல்லை சேவை; கிள்ளிக் கொடுப்பதுதான் சேவை. கிள்ளிக் கொடுக்காவிட்டாலும் அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது தவறான வார்த்தை. வலிக்க வலிக்க யார் கிள்ளிக் கொடுக்கிறார்களோ, அவர்களே தொண்டர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட தொண்டர்களால் தான் இந்த உலகம் இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்தில் நமக்காக தொண்டு செய்த அனைவருக்கும் இந்தச் சிந்தனை சமர்ப்பணம்

'ஔவை என்றொரு பெண் இருந்தாளா' என்பதைச் ‘சொல் புதிது' என்னும் கீழ்க்காணும் காணொளியில் அழகாக விளக்குகிறார் பர்வீன் சுல்தானா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு