இன்றோடு திருமணமாகி இருபதாண்டுகள் ஆகிவிட்டன. கோயிலில் அர்ச்சனை முடித்து பிரகாரத்தில் உடன் நடக்கிறாள் என் தேவதை. வீட்டில் கேக் வெட்டியபோது பரிசளித்த பட்டுப் புடவை, வைர நெக்லசில் உற்சாகம் மிதக்க ஜொலிக்கும் மனைவியை நுரைத்துப்பொங்கும் பெருமிதத்துடன் பார்த்து, ``ஒரு உண்மை சொல்லணும் டியர்” என்றேன். ``என்ன அர்ஜுன்’’ என்றாள் புன்னகையுடன்.

மஞ்சள் தேய்த்துக் குளித்திருந்த நியூயார்க் சிட்டி டாக்ஸி, கொசுவலைபோல எங்கும் தொங்கிய மெலிதான பனித்திரையை ஊடுருவிக்கொண்டு விரைந்தது.

ஜே.எஃப்.கே சர்வதேச விமான நிலையத்தில் இறங்கிக்கொண்டு லேப்டாப் மற்றும் ட்ராலி சூட்கேசுடன் டெர்மினல் நோக்கி விரைந்தபோது குளிர் பதினான்கு டிகிரி செல்ஷியஸ் என்று சுவரில் ஒரு திரை காட்டிவிட்டு கார் விளம்பரத்திற்குத் தாவியது.

செக்-இன் செய்து, செக்யூரிட்டி செக் முடித்து என் கேட் வந்து எக்ஸ்பிரஸோ காபி மற்றும் ஓசி செய்தித்தாளுடன் விமானத்தின் அறிவிப்பிற்காகக் காத்திருந்தபோது அம்மாவுக்கு போன் செய்தேன். தஞ்சாவூரிலிருந்து ஆங்கிலத்தில் பதறினார் அம்மா.

“செக் இன் செய்துவிட்டாயா அர்ஜுன்?”

“ஆமாம் அம்மா’’ என்று டைப் செய்து அனுப்பினேன்.

“நன்றி கடவுளே.”

“இதற்கெல்லாம் மதிப்பான நன்றியை வீணடிக்காதே அம்மா.”

“நல்லது நடக்கும்போது நன்றி சொல்லாவிட்டால், கெட்டது நடக்கும்போது திட்டும் உரிமை நமக்குக் கிடையாது அர்ஜுன்!”

“கடவுளைத் திட்டுவாயா என்ன?”

“கண்டிப்பாக! நன்றி சொல்லவும் திட்டவும் தினமும் ஏதாவது நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது!”

“சமீபத்தில் எப்போது திட்டினாய்?’’

“பத்து நிமிடம் முன்பு.’’

“என்ன தப்பு செய்தார்?''

“உன் பிடிவாதத்தை உடைக்க மாட்டேன் என்கிறாரே!''

“ஆரம்பித்துவிட்டாயா?”

``நீ இந்தியாவில் தங்கும் நாள்களில் இரண்டு பெண்களைப் பார்க்கிறாய். அதில் ஒருத்தியைத் தேர்வு செய்கிறாய்.''

“நல்லவேளை... இன்னும் விமானத்தில் ஏறவில்லை. டிக்கெட்டை கேன்சல் செய்யவா?’’

“அர்ஜுன்! என்ன இது?”

“பின்னே? இப்படி உத்தரவிட்டால் எப்படி?”

“வயதாகிவிட்டது அர்ஜுன்.”

“முப்பத்தொன்று பெரிய வயதில்லை அம்மா.”

“உனக்கில்லை. எனக்கும் அப்பாவுக்கும்! அறுபது நெருங்குகிறது. பேரன், பேத்தி பார்க்க வேண்டாமா நாங்கள்? நான் வெளியே சொல்கிறேன். அப்பா ரகசியமாக அழுகிறார்.’’

“உங்களுக்காக நான் பலிகடா ஆக வேண்டுமா?”

“திருமணம் என்பது சிறை இல்லை.’’

“சரி, வலை! நண்பர்கள் விழிபிதுங்குவதைப் பார்க்கிறேன். எனக்கு சிங்கிள் வாழ்க்கை பிடித்திருக்கிறது. மனைவி வந்தால் மூளையில் பாதியை அவளை நிர்வாகம் செய்யவே ஒதுக்க வேண்டும்.”

``மனைவியை அலுவலக ரீதியாக அணுகுவது அபத்தம்! அப்பா தன் திருமணம் பற்றி எப்போதாவது புலம்பியிருக்கிறாரா?''

“தங்கம் மாதிரி நீ அமைந்தாய்! இப்போது கவரிங்தான் அதிகமாய் இருக்கிறது.”

“உனக்கும் அப்படித்தான் பார்க்கிறேன்!”

“குணத்தில் அப்படியே உன் ஜெராக்ஸ் பிரதியாகத் தேடிப்பிடிக்க முடியுமா உன்னால்? ஜாதகம் பார்ப்பாய். ஜோதிடரை நம்புவாய், புற அழகை ஆராதிப்பாய். கடைசியில் ஏமாந்துவிடுவாய்!’’

“காதல், கீதல் கிடையாது என்று முன்பே சொல்லிவிட்டாய். ஒரு அம்மா கேட்கக்கூடாதுதான். ஆனாலும் கேட்கிறேன். நீ... நீ...''

“நான்?”

“இல்லை. வேண்டாம், விடு.”

“புரிகிறது. நான் ஓரினச் சேர்க்கையாளன் இல்லை. போதுமா?”

“நீ வா. நேரில் பேசுவோம். பரிகாரம் செய்தால் சரியாகிவிடும் என்று அரியலூர் ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.”

“தண்டச் செலவு! என் விமானம் அறிவித்து விட்டார்கள்’’ என்று கட் செய்தேன். ஆனால் அரை மணிக்குப் பிறகுதான் அறிவித்தார்கள்.

புறப்படுவதற்கான முன்னேற்பாடுகளில் எமிரேட்ஸ் விமானம். ஹோஸ்டஸ் விமானத்தின் அவசர வழிகளைச் சொல்ல... நான் பாலித்தீன் பை கிழித்து ஹெட்போன் மாட்டிக்கொண்டு முன் இருக்கை முதுகில் இருந்த குட்டித்திரையில் இசை தேர்வு செய்தபோது, என் பக்கத்து இருக்கையில் வாசனையாக வந்து அமர்ந்தாள் அவள்.

தமிழ்ப்பெண் என்று உடனே தெரிந்தது. இரண்டு கைகளிலும் அழகான டிசைன்களில் மெஹந்தி. மிக ஆச்சர்யமாக புடவை, ஸ்லீவ் லெஸ். குட்டியாக ஸ்டிக்கர் பொட்டு. காதுகளில் ஆண்ட்டிக் தோடுகளின் தொங்கல் மூன்று இஞ்சிற்கு ஊஞ்சலாடின. அடிக்காத சிவப்பில் லிப்ஸ்டிக். நூல் மாதிரி சங்கிலியில் குட்டி ஈபிள் டவர் டாலர்.

விமானம் ஓடுபாதையிலிருந்து தாவி விண்ணைத் தொட்டதுமே அவள் மேஜை அமைத்துக்கொண்டு, லேப்டாப்பை அதில் வைத்தாள். அதன் மேலிருந்த `S.A' என்கிற ஸ்டிக்கர் எழுத்துகளில் `A' க்கு அஞ்சலி, அபிராமி, அகல்யா, அனிதா என்று நான் யூகித்துக்கொண்டிருக்க...

``ஹாய்... அர்ச்சனா” புன்னகைத்து சுலபமாய் கைகொடுத்தாள்.

``ஹாய்... அர்ஜுன்” என்றேன்.

``எய்ட்டீன் ஹவர்ஸ் டிராவல்ல பக்கத்து பேசன்ஜர் சரியா அமையலைன்னா செம போருங்க. நல்லவேளை. நீங்களும் தமிழ்.’’

``கரெக்ட்டுதான். இங்க என்ன பண்றிங்க?’’

``ஐ.டி.தான். ஹெச்.ஆர்ல இருக்கேன். நீங்க?’’

“சீனாக்காரனோட எலெக்ட்ரிகல் கம்பெனில பிரான்ச் மேனேஜர் ஃப்ரம் தஞ்சாவூர்.’’

``எனக்கு சேலம். அஃபிஷியல் ட்ரிப்பா?’’

``பர்சனல் ட்ரிப். அக்கா பையனுக்கு அடுத்த வாரம் கல்யாணம்.’’

``நானும் பர்சனல் ட்ரிப். எனக்கே கல்யாணம்.’’

``ஓ! கங்கிராட்ஸ். அதான் மெஹந்தியா?’’

``யெஸ். நாளன்னைக்கு காலைல கல்யாணம். அங்க டைம் இருக்காது!’’

``இன்ட்ரெஸ்ட்டிங்! என்ன பண்றார் உங்க வுட் பீ?’’

``சென்னைல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனில வொர்க் பண்றார். சுவாமிநாதன். ஐ கால் ஹிம் ஆஸ் சாம்.’’

``லவ்?’’

``அரேன்ஜ்ட். ஆனா இப்ப பேசிப்பேசி லவ் வந்திருச்சி.’’

லேப்டாப்பில் `சாம்' புகைப்படம் காட்டினாள்.

கொஞ்சம் குண்டாக இருந்தான். கன்னங்கள் அழித்து இன்னொரு ஜோடி செய்யலாம். கழுத்தில் தடியாக தங்கக் கயிறு. நிக்கோடின் கறை படிந்த உதடுகள்.

முதல் பார்வையிலேயே, ‘பொருத்தம் இல்லையே’ என்று தோன்றியது. அழகான பூங்கொத்தை பிவிசி பைப்பில் செருகி வைத்தது போல இருக்குமே!

என் எண்ணத்தைப் புரிந்ததுபோல, ``என் ஜாதகத்துல ஏதோ தோஷம். ரெண்டு வருஷமா பார்த்தாங்க. மூணு இடம் தட்டிப்போச்சு. சாமோட ஒம்போது பொருத்தம் இருக்காம். ரெண்டு வீடு, ரெண்டு கார் இருக்கு’’ என்றாள்.

``டு யூ பிலிவ்?’’ என்றேன்.

“ம்?”

“ஜாதகம் அண்ட் ஆல் தட்”

“பேரண்ட்ஸ் பிலிவ். ஐ பிலிவ் மை பேரண்ட்ஸ்.”

சிரித்தபோது தெற்றுப்பல் அழகாய் இருந்தது.

அடேய்! இன்னும் இரண்டு நாளில் அடுத்தவன் மனைவி!

“போன்ல பேசுனதுலயே நல்லா புரிஞ்சிக்கிட்டிங்களா?”

“யெஸ். மூணு தடவை விடிய விடிய பேசினோம். சாம்கிட்ட மைனஸ் கொஞ்சம் இருக்கு. ஆனா ப்ளஸ் அதிகமா இருக்கு. யார்கிட்ட இல்ல மைனஸ்?”

“சும்மா ஒரு க்யூரியாசிடி. எதெல்லாம் மைனஸ்?”

“ஸ்மோக்கர். கொஞ்சம் கொஞ்சமா குறைச்சி நிறுத்திடறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கார்.”

“நம்பாதீங்க! கொஞ்ச கொஞ்சமா விடறதுக்கு சான்சே இல்ல. பண்றப்பவே பறக்கவிடற ப்ராமிஸ் இது!”

“என்னால நிறுத்த வைக்க முடியும்னு நம்பறேன். சோஷியல் ட்ரிங்கராம். அஃப் கோர்ஸ் நான்கூட அப்படித்தான். வைன் பிடிக்கும்.”

“அப்புறம்?’’

“காலேஜ் டேஸ்ல ஒரு லவ் அஃபேர் இருந்திருக்கு. அவங்க அம்மா அந்தப் பொண்ணோட ஜாதகம் பார்த்துட்டு செட்டாகாதுன்னுட்டாங்க. பிரேக் அப் பண்ணிட்டு பத்து நாள் அழுதாராம்.”

“உங்க சாம் தப்பு பண்ணிட்டாரு. மொதல்ல அவ ஜாதகத்தை அம்மாட்ட காட்டி ஓக்கே பண்ணிட்டு, அப்புறம்தான் ப்ரொப்போஸ் பண்ணியிருக்கணும்.”

மீண்டும் சிரித்தாள். மீண்டும் தெற்றுப் பல், மீண்டும் மனசாட்சி.

உணவு வந்தபோது கண்மூடி பிரார்த்தனை செய்துவிட்டு மூடியைத் திறந்தாள்.

“நல்லா டைஜஸ்ட் ஆகணும்னு பிரேயரா?”

“சேச்சே! எப்பவும் ‘இது வேணும், அது வேணும்’னு கேட்டதில்ல. இன்னிக்கு நான் இருக்கிற இந்த நிலைமைக்கு நன்றி, இந்த நாளுக்கு நன்றி! காலைல எந்திரிச்சதுமே இப்படி நினைச்சுக்குவேன்.”

“நன்றி சொல்றதுக்கே பாதி நாள் போயிடும் போலிருக்கே!”

“நன்றி சொன்னாதான் திட்றதுக்கும் உரிமை இருக்கு.”

ஜூஸ் குடித்துக்கொண்டிருந்தவன் சட்டெனத் திரும்பிப் பார்த்தேன். பளிச்சென்று மனதுக்குள் ஒரு சுவாரசியம் மின்னலடித்தது.

அவள் தன் அலுவல் வேலையில் மும்முரமாக... என்னால் இசையில் நனைய முடியவில்லை. திடுக் திடீரென்று இவள்மீது ஒரு ஈர்ப்பு! அழகாக இருக்கிறாள். இயல்பாக பண்பாகப் பேசுகிறாள். என் அம்மாவின் குண அடையாளம் ஒன்று இவளிடம்... ச்சே! கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாளே!

காதலித்து பிரேக் அப் செய்து, தண்ணியடிக்கும், தம்மடிக்கும் XXL சாமிநாதா... அலுமினியத் தட்டில் தங்கக்கட்டியை வைக்கக் கூடாதடா படவா!

அடுத்த விநாடியே சுவாமிநாதனிடம் மன்னிப்பு கேட்டேன். ஸாரி ப்ரோ! உங்களை விமர்சிக்க, திட்ட எனக்கென்ன உரிமை? நீங்கள் தங்கமான குணத்துடன் இருக்கலாம். வெரி ஸாரி ப்ரோ.

“ஆர் யு மேரிட் அர்ஜுன்?”

“நாட் யெட்!”

“லவ் பண்ணியிருக்கிங்களா?”

“இனக் கவர்ச்சியையும், காமத்தையும் காதல்ல சேர்க்கக்கூடாதுன்ற விதிப்படி பார்த்தா... அதுவும் நாட் யெட்!”

“இந்த ஃபீல் சூப்பர் அர்ஜுன். லவ் பண்ணி கல்யாணம் பண்ணுங்க.”

“கல்யாணமே வேணாம்னு இருக்கேன்’' என்பதை விமான நிலையத்தில் அம்மாவிடம் சொன்ன உறுதித்தன்மையில் 25 சதவிகிதம் குறைத்துத்தான் சொல்ல முடிந்தது.

“ஏன்?”

“அடுத்தவங்க அனுபவத்திலேர்ந்து பாடம் கத்துக்கிட்டேன்.”

“புரியல...”

“என் நாலு பிரண்ட்ஸ் டைவர்ஸ்க்கு கோர்ட்ல நிக்கிறாங்க.”

அவள் சிரித்தாள். தெற்றுப் பல், மனசாட்சி.

“அஃப்கோர்ஸ். விட்டுக்கொடுக்கறது குறைஞ்சி போச்சி. ஆனா உலகம் பூரா கல்யாணம் பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க அர்ஜுன். எல்லாக் கல்யாணமும் தோக்கலை. இந்தியால ஆயிரம் கல்யாணத்துல பதிமூணுதான் டைவர்ஸ்ல முடியுது. பர்சென்ட்டேஜ்ல பார்த்தா நூத்துல ஒன் பாய்ன்ட் த்ரீ. ரெண்டுன்னே வெச்சிக்கங்களேன். மிச்சம் 98 பேர் உங்க கண்ல படலையா?”

“மனசுக்குள்ள டைவர்சாகி வேற வழி இல்லாம வாழலாம்.”

“உங்க பதில் அரகண்ட்டா இல்ல? நான் எப்பவும் விளக்கோட வெளிச்சத்தைப் பார்க்கறவ. எல்லா விளக்கு அடிலயும் கொஞ்சம் நிழல் இருக்கும். நீங்க அதைப் பார்க்கறிங்க.”

நான் இமைக்காமல் அவளையே பார்த்தேன். அன்று போனில் கிட்டத்தட்ட இப்படியே சொன்னார் அம்மா.

‘குத்து விளக்கு அடில ஒரு கறுப்பு இருக்கும்டா. உன் கண்ணுக்கு அது தெரியுது. நான் திரில வர்ற சுடரைப் பார்க்கறேன்.’

``என்னாச்சு?” என்றவள், “தப்பா சொல்லிட்டனா?'' என்றாள்.

“இல்ல, மெச்சூர்டா பேசறீங்க.”

நான் புத்தகம் படிக்கத் துவங்கினேன்.

திடீரென்று விமானத்தின் கேப்டன் இப்படியாக அறிவித்தார்.

“தவிர்க்க முடியாத காரணங்களால் விமானம் மொராக்கோ நாட்டின் கசபிளாங்கா நகரத்தின் மொகம்மது V சர்வதேச விமான நிலையத்தில் இறக்கப்படுகிறது.”

‘கசபிளாங்கா’ என்று திரைப்படம்தான் கேள்விப்பட்டிருக்கிறேன். மேப்பில்கூட எதற்காகவும் தேடியதில்லை. எங்கே இருக்கிறது, என்ன மாதிரி நகரம், என்ன மாதிரி நாடு எதுவும் தெரியவில்லை.

தெரிந்துகொண்டோம். விமான நிறுவனம் எங்களைத் தங்கவைத்த ஏர்போர்ட் அருகிலிருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு வந்தபிறகு கூகுள் செய்து பார்த்து, 99 சதவிகிதம் இஸ்லாமியர்கள் வாழும் வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவின் தலைநகரம் ரபாட். முக்கியமான நகரம் கசபிளாங்கா. விமானத்தில் பறந்த நாங்கள், கசபிளாங்காவின் நட்சத்திர ஹோட்டலுக்கு ஏன் வந்தோம் என்பதன் முன் கதைச்சுருக்கம் இதுவே.

எங்கள் விமானத்தில் உடன் வந்த இரண்டு பயங்கரவாதிகள் காக் பிட் உள்ளே நுழைந்து விமானிகளை மிரட்டி விமானத்தைக் கடத்தி இங்கே இறக்கிவிட்டார்கள். மொராக்கோ காவல்துறை உயரதிகாரிகள் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதில், பயணிகளை மட்டும் விடுவிக்க பயங்கரவாதிகள் சம்மதித்ததால் நாங்கள் இறக்கிவிடப்பட்டோம். இரண்டு பேருக்கு ஒரு அறை என்று ஒதுக்கி இங்கே தங்கவைத்திருக்கிறார்கள்.

எதற்கான கடத்தல்? அவர்களின் கோரிக்கைதான் என்ன? எங்களுக்கு யார் சொன்னார்கள்? இங்கே உள்ள தொலைக்காட்சியிலும் புரிகிற மொழியில் ஒரு சேனலும் இல்லை.ஹோட்டல் ஊழியர்கள் பேசிய அரபிக் மொழியிலும் ஒரு வார்த்தையும் புரியவில்லை.

ஹோட்டல் மேனேஜருக்கு பிரெஞ்சு தெரிந்திருந்தது. எங்களுடன் வந்த ஒரு பயணி பிரெஞ்சு பேசினர். அவர் எங்கள் சந்தேகங்களைக் கேல்விகளாக்கி பதில்களை வாங்கிச் சொல்ல... ஓரளவு சூழ்நிலை புரிந்தது.

பக்கத்தில் இன்னொரு ஆப்பிரிக்கன் நாட்டில் இயங்கும் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்களாம். 560 பேரை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமாம். நான்கு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டுமாம். இது கோரிக்கை. பேச்சுவார்த்தை முடியும் வரை விமான நிலையத்தில் வேறு விமானங்கள் புறப்படவும், இறங்கவும் கூடாதென்று மிரட்டல்!

இந்தப் பிரச்னை முடிந்து விமான நிலையம் செயல்பட்டு அதன் பிறகு எங்களுக்கு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தது இரண்டு நாள்கள் ஆகலாம்.

எனக்கு உடனே ஊர் போய்ச்சேரும் அவசரமில்லை. ‘மொராக்கோ நாட்டின் நாணயம் மொராக்கோ திர்ஹாம், பாஸ்போர்ட் போதும், விசா தேவையில்லை, பொது இடத்தில் முத்தமிட்டால் போலீஸ் பிடித்துக்கொண்டு போய்விடும்’ போன்ற தகவல்களை நான் படித்துக்கொண்டிருந்தேன்.

ஆனால் அர்ச்சனாவுக்கு உடனே போயாகவேண்டுமே. பதறிப் போனாள் அவள். ஹோட்டல் லாபியில் அமர்ந்து, போனை வசப்படுத்தி கைகள் நடுங்க அவள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாள்.

‘‘எங்களை ஹோட்டல்ல தங்க வெச்சிட்டுப் போய்ட்டாங்க. வேற விமானம் எப்ப ஏற்பாடு செய்வாங்கன்னு எதுவும் தெரியலைப்பா. இப்ப என்ன செய்றதுன்னு புரியல. இங்க சேஃப்டி பிரச்னை எதுவும் இல்ல. நல்லவேளையா ஒரு தமிழ் ஃபிரெண்டு என்னோட இருக்கறது தெம்பா இருக்கு.’’

அந்த முனையில் சுவாமிநாதன் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. ஆனால் முழு டென்ஷனில் பேசினான் என்பது மட்டும் புரிந்தது. காரணம், பேசி முடித்ததும் அர்ச்சனா கண்களில் கண்ணீர்.

நான் காபி வரவழைத்து, ஒரு கப்பில் ஊற்றி அவளிடம் நீட்டிவிட்டு, “மொதல்ல கூலா இருங்க அர்ச்சனா. இது நாமு கொஞ்சமும் எதிர்பார்க்காத சூழ்நிலை. பிரச்னைக்குத் தீர்வு நம்ம கைல இல்லை. கல்யாணத்தை ஒரு வாரம் தள்ளி வைக்கிறதுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லுங்க அர்ச்சனா. வேற வழியில்லை” என்றேன்.

“எப்படிங்க அர்ஜுன்... எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு. மண்டபத்துல டெக்கரேஷன் நடக்குது. பாதி சொந்தக்காரங்க வந்தாச்சு.”

“புரியுதுங்க. வேற வழி இல்லையே.”

“எங்களுக்குப் புரியுது. ‘நீயே மாப்பிள்ளை கிட்ட பேசி பர்மிஷன் வாங்கு’ன்னு சொல்றாங்க எங்க வீட்ல. சாம் புரிஞ்சிக்க மாட்டேங்கறான்'' என்றாள்.

``மறுபடி பேசுங்க... படிச்சவர்தானே... புரிஞ்சுக்குவார்.”

அர்ச்சனா மீண்டும் சுவாமிநாதனை அழைத்தாள். அவள் பிரைவசியைக் கெடுக்க விரும்பாமல் நான் சற்றே தள்ளிச் சென்று நின்றாலும் அவளின் குரல் கேட்டது.

“சாம்... இதான் சிச்சுவேஷன். நான் என்ன செய்றது?''

“ஏய்..... என்னப்பா சொல்றே?”

“உங்கம்மா சொன்னா உனக்கு வாய் இல்லையா? எடுத்துச் சொல்ல மாட்டியா?”

“சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு சாம்! எந்தக் காலத்துல இருக்காங்க? சகுனம் அண்ட் ஆல் தட்! இடியாட்டிக்! நீ எடுத்துச் சொல்லு சாம்! நீ முடிவெடு! அம்மாவைக் கன்வின்ஸ் பண்ணிட்டு போன் பண்ணு.’’

போனை வைத்துவிட்டு வந்து நின்ற அர்ச்சனாவின் விழிகளில் கண்ணீர் வழிந்தது.

``என்னாச்சுங்க அர்ச்சனா” என்றேன் பதறிப்போய்.

“முகூர்த்தத்துக்குள்ள நான் போய்ச் சேர்ந்துட்டா கல்யாணமாம். இல்லன்னா நிச்சயத்தையே கேன்சல் பண்ணிடலாம்னு சொல்றாங்களாம். கெட்ட சகுனமா நினைக்கிறாங்களாம். தள்ளி வைக்க முடியாதாம்.’’

“வாட் நான்சென்ஸ்” என்றேன்.

“எனக்கு ஏன் இப்படி நடக்கணும்?'' குமுறி அழுத அவளை எப்படியாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுப்பிவைக்கும் உத்வேகத்துடன் சொன்னேன்.

“அர்ச்சனா... வெய்ட் பண்ணுங்க. இப்ப என்ன... முகூர்த்த நேரத்துக்குள்ள நீங்க சேலத்துல இருக்கணும். நான் ஹோட்டல் மேனேஜர்கிட்ட விசாரிச்சுட்டு வர்றேன்.”

விசாரித்துவிட்டு வந்து சொன்னேன்.

“இங்கேர்ந்து நியரஸ்ட் ஏர்போர்ட், மொராக்கோவோட தலைநகர் ரபாட்ல இருக்க, சலே இன்டர்நேஷனல் ஏர்போர்ட். 120 கிலோ மீட்டர். அங்க கார்ல போறதுக்கு மூணு மணி நேரமாகும். அங்கேர்ந்து துபாய்க்கு ப்ளைட் பிடிக்கணும். துபாய்லேர்ந்து சென்னை. ஆனா கனெக்ட்டிங் ப்ளைட்ஸ்ல டிக்கெட்ஸ் இல்லை. எப்படியும் முகூர்த்த டயத்துக்குள்ள போகவே முடியாது அர்ச்சனா.’’

அவள் சோபாவில் தொப்பென்று அமர்ந்து வெறித்த பார்வை பார்த்தாள். “இன்னொரு கடைசி சான்ஸ். டெரரிஸ்ட்ஸ் பிரச்னை முடிஞ்சி இன்னும் மூணு மணி நேரத்துக்குள்ளே நமக்கு ப்ளைட் பிளான் பண்ணி புறப்பட முடிஞ்சாலும், பாசிபிள்!”

ஆனால் மூன்று மணி நேரத்திற்குள் எதுவும் நடக்கவில்லை.

இன்றோடு திருமணமாகி இருபதாண்டுகள் ஆகிவிட்டன கோயிலில் அர்ச்சனை முடித்து பிரகாரத்தில் உடன் நடக்கிறாள் என் தேவதை. வீட்டில் கேக் வெட்டியபோது பரிசளித்த பட்டுப் புடவை, வைர நெக்லசில் உற்சாகம் மிதக்க ஜொலிக்கும் மனைவி நுரைத்துப் பொங்கும் பெருமிதத்துடன் பார்த்து, “ஒரு உண்மை சொல்லணும் டியர்” என்றேன்.

“என்ன அர்ஜுன்?’’ என்றாள் புன்னகையுடன். ``அர்ச்சனா... அன்னிக்கு கசபிளாங்கா ஹோட்டல் மேனேஜர்ட்ட விசாரிச்சப்ப நீ ரபாட் ஏர்போர்ட் போயி அங்கேர்ந்து துபாய் போயி துபாய்லேர்ந்து திருச்சி போறதுக்கு அவகாசமும் இருந்திச்சி. எல்லா ப்ளைட்ஸ்லயும் டிக்கெட்டும் இருந்திச்சி. என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையும் நல்லாருக்கும்னு தோணினதால வாய்ப்பே இல்லன்னு பொய் சொல்லிட்டேன்’’ என்று சொல்ல நினைத்தும் இப்போதும் சொல்லவில்லை. “அர்ச்சனா, உன் கல்யாணம் நின்னுபோன வெறுப்புல இருந்த நீ, பத்து நாளைக்கப்புறம் நான் போன்ல ப்ரொப்போஸ் செஞ்சப்போ என் காதலை ஏத்துக்குவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றேன்.