Published:Updated:

பூமாதேவியின் களப்பலி!- கவிதை #MyVikatan

தெக்கத்தி கந்தக பூமியில் வானம் வஞ்சித்து வயலும் காய்ந்த பின்..

Representational Image
Representational Image

நடவு வயலின் வரப்பில்

நண்டு வளைகளைப் பூசி

நீர்கட்டி நெல் விளைத்தவர்தான்

லட்சுமி வெடியின் தூர்களில்

செம்மண் பூசி அடைக்கின்றார்.

Representational Image
Representational Image

இடக்கையால் இறுக்கிப்பிடித்த

கேப்பை நாற்றை

வலக்கையால் கிள்ளி

பொடுபொடுவென நடும்

லாவகம் தெரிந்தவள்தான்

குருவி வெடியின் தலையில்

திரி நடுகின்றாள்.

பூச்சிக்கொன்றாய்

நாலு மருந்தை

சரிவிகிதமாய் கலந்து தெளித்து

பயிர் காத்தவன்தான்

அலுமினிய பவுடரில் குளித்து

வானவெடி உமிழும் வண்ணங்களுக்கு

கலவை சேர்க்கின்றான்.

Representational Image
Representational Image

தெக்கத்தி கந்தக பூமியில்

வானம் வஞ்சித்து

வயலும் காய்ந்த பின்

வாழ்ந்தாக வேண்டி

வன்பசி கூட்டிய தைரியத்தில்

நொடிப்பொழுதில் கொல்லும் மரணத்தை

நாள் முழுவதும் கைகளில் உருட்டி

தீபாவளிக்கு வேடிக்கைப் பொருளாய்

மாற்றித்தந்தாவது

தன்னை நம்பியவர்கள் பொழைக்கட்டுமென

மகன் நரகாசுரனை

முன்பொரு நாள்

காவு கொடுத்திருக்கலாம்

பூமாதேவி.

-நாராயணபுரம் கணேசவீரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/