சும்மாப் போன நாயின் மேல்

சும்மா ஒரு கல்லெறிந்தேன்

சும்மா என்று புரியாமல்

ஒரு கடி ஆழமாகக் கடித்து ஓடியது

சும்மா வருமா தனு?

சும்மா வருமா பிணி?

சும்மாவா துக்க இன்பம்?

எல்லாம் பிராரத்த வினையப்பா

வினையை அனுபவிக்கும் வினை இருக்க

ஆகாமிய வினைக்கேன் அலைகிறாய்

சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்

குருமவுனி

ஜிட்டுவும்

இதையே குழப்பிக் குழப்பிச்

சொன்னார்

சொந்த சும்மா வேண்டாம்

சுத்த சும்மா ஷேமமென்று

குந்தியிருந்தால்

நாயே கவ்வி வந்து

கல்லைத் தருது

இந்த நிலைதான்

எந்த வினையோ?

சும்மாப் போன நாயின் மேல்

சும்மா ஒரு கல்லெறிந்தேன்

சும்மா என்று புரியாமல்

ஒரு கடி ஆழமாகக் கடித்து ஓடியது

சும்மா வருமா தனு?

சும்மா வருமா பிணி?

சும்மாவா துக்க இன்பம்?

எல்லாம் பிராரத்த வினையப்பா

வினையை அனுபவிக்கும் வினை இருக்க

ஆகாமிய வினைக்கேன் அலைகிறாய்

சொல்லிச் சொல்லிச் சிரிக்கிறார்

குருமவுனி

ஜிட்டுவும்

இதையே குழப்பிக் குழப்பிச்

சொன்னார்

சொந்த சும்மா வேண்டாம்

சுத்த சும்மா ஷேமமென்று

குந்தியிருந்தால்

நாயே கவ்வி வந்து

கல்லைத் தருது

இந்த நிலைதான்

எந்த வினையோ?