1.உறங்காத நினைவுகளின் மேல்

விழுந்து தெறித்தது

சுவர்க் கடிகாரத்தின்

பின்னிரவு மணிச்சத்தம்

ஆடிக்கொண்டே இருக்கிறது

மையத்தில் நிறுத்த முடியாத

மனத்தின் பெண்டுலம்

2.விரிசல் விழுந்த

கடிகாரக் கண்ணாடி

நினைவுபடுத்துகிறது

யாருமில்லாத கிழவரின்

மூக்குக் கண்ணாடியை

எங்கு நிற்பதெனத் தெரியாமல்

சுற்றிச் சுற்றி வரும்

அந்தப் பெரியமுள்

அவர்தான் போல

3.“சின்னமுள் எங்கே இருக்கு

பெரியமுள் எங்கே இருக்கு"

பார்க்கச் சொன்னாள் அம்மா

“இரண்டு முள்ளும்

கடிகாரத்துக்குள்தாம்மா இருக்கு”

என்றான் குழந்தை

காலம்

அப்போது

அவன் கண்களில் இருந்தது

4.விடைபெறும் நேரம்

கடைசியாக

அவனும் அவளும்

தங்கள் கடிகாரத்தைப்

பார்த்துக்கொண்டார்கள்

வட்டமடித்த காலம்

தொடங்கிய புள்ளியில்

உள்வாங்கிக்கொண்டது

இருவரையும்

5.தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல

வாய்த்தது

வட்டப்பாதைதான்

கடிகாரங்களுக்கு

6.ஒவ்வொரு கடிகாரமும்

ஒவ்வொரு நேரத்தைக் காட்டுகிறது

எந்தக் குழப்பமுமில்லாமல்

கால எந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்

பழுது பார்ப்பவர்

7.“உன் கண்மணிகள்

காதலின் பெண்டுலங்கள்”

என்றான் அவன்

“என் உடலே

கடிகாரமாக

சுழல்கிறது உன் மோக முள்”

என்றாள் அவள்

அவர்கள் நின்றிருந்த சாலையில்

மணிக்கூண்டுக் கோபுரத்தை

ஒரு கிழவி

நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்

கண் மங்கிய தூரத்தில்

கலங்கித் தெரியும் நேரத்தை

8.நின்றுபோன கடிகாரத்தின்

முட்களை

முன்னும் பின்னும் நகர்த்தி

விளையாடுகிறது குழந்தை...

குழந்தைக்காக

முன்னும் பின்னுமாக

நகர்ந்து கொடுக்கிறது

காலம்

9.எண்களும் இல்லை

முட்களும் இல்லை

எண்களுக்கும் முட்களுக்கும்

இடையில்தான்

பார்த்துக்கொள்கிறோம்

அவரவர் நேரத்தை

10.ஜவ்மிட்டாய்க் கடிகாரத்தைச்

சுவைத்தபடி

சிரிக்கிறாள் சிறுமி

அவளது காலத்தின் சுவையை

அவள் மட்டுமே

அறிந்தவளாக

11.நீங்கள்

கவனிக்கலாம்

கவனிக்காமல் போகலாம்

எல்லோரையும்

எல்லாவற்றையும்

கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது

கடிகாரம்

12.மெதுவாக ஓடுகிறது

அம்மாவின் கடிகாரம்

வேகமாக ஓடுகிறது

மனைவியின் கடிகாரம்

இரண்டுமாக ஓடுகிறது

பிள்ளையின் கடிகாரம்

எது சரியெனத் தெரியாமல்

நின்றுபோயிருக்கிறது

அவனது கடிகாரம்!

1.உறங்காத நினைவுகளின் மேல்

விழுந்து தெறித்தது

சுவர்க் கடிகாரத்தின்

பின்னிரவு மணிச்சத்தம்

ஆடிக்கொண்டே இருக்கிறது

மையத்தில் நிறுத்த முடியாத

மனத்தின் பெண்டுலம்

2.விரிசல் விழுந்த

கடிகாரக் கண்ணாடி

நினைவுபடுத்துகிறது

யாருமில்லாத கிழவரின்

மூக்குக் கண்ணாடியை

எங்கு நிற்பதெனத் தெரியாமல்

சுற்றிச் சுற்றி வரும்

அந்தப் பெரியமுள்

அவர்தான் போல

3.“சின்னமுள் எங்கே இருக்கு

பெரியமுள் எங்கே இருக்கு"

பார்க்கச் சொன்னாள் அம்மா

“இரண்டு முள்ளும்

கடிகாரத்துக்குள்தாம்மா இருக்கு”

என்றான் குழந்தை

காலம்

அப்போது

அவன் கண்களில் இருந்தது

4.விடைபெறும் நேரம்

கடைசியாக

அவனும் அவளும்

தங்கள் கடிகாரத்தைப்

பார்த்துக்கொண்டார்கள்

வட்டமடித்த காலம்

தொடங்கிய புள்ளியில்

உள்வாங்கிக்கொண்டது

இருவரையும்

5.தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல

வாய்த்தது

வட்டப்பாதைதான்

கடிகாரங்களுக்கு

6.ஒவ்வொரு கடிகாரமும்

ஒவ்வொரு நேரத்தைக் காட்டுகிறது

எந்தக் குழப்பமுமில்லாமல்

கால எந்திரத்தில் அமர்ந்திருக்கிறார்

பழுது பார்ப்பவர்

7.“உன் கண்மணிகள்

காதலின் பெண்டுலங்கள்”

என்றான் அவன்

“என் உடலே

கடிகாரமாக

சுழல்கிறது உன் மோக முள்”

என்றாள் அவள்

அவர்கள் நின்றிருந்த சாலையில்

மணிக்கூண்டுக் கோபுரத்தை

ஒரு கிழவி

நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தாள்

கண் மங்கிய தூரத்தில்

கலங்கித் தெரியும் நேரத்தை

8.நின்றுபோன கடிகாரத்தின்

முட்களை

முன்னும் பின்னும் நகர்த்தி

விளையாடுகிறது குழந்தை...

குழந்தைக்காக

முன்னும் பின்னுமாக

நகர்ந்து கொடுக்கிறது

காலம்

9.எண்களும் இல்லை

முட்களும் இல்லை

எண்களுக்கும் முட்களுக்கும்

இடையில்தான்

பார்த்துக்கொள்கிறோம்

அவரவர் நேரத்தை

10.ஜவ்மிட்டாய்க் கடிகாரத்தைச்

சுவைத்தபடி

சிரிக்கிறாள் சிறுமி

அவளது காலத்தின் சுவையை

அவள் மட்டுமே

அறிந்தவளாக

11.நீங்கள்

கவனிக்கலாம்

கவனிக்காமல் போகலாம்

எல்லோரையும்

எல்லாவற்றையும்

கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது

கடிகாரம்

12.மெதுவாக ஓடுகிறது

அம்மாவின் கடிகாரம்

வேகமாக ஓடுகிறது

மனைவியின் கடிகாரம்

இரண்டுமாக ஓடுகிறது

பிள்ளையின் கடிகாரம்

எது சரியெனத் தெரியாமல்

நின்றுபோயிருக்கிறது

அவனது கடிகாரம்!