Published:Updated:

கவிதை: அதனதன் இருப்பு

அதனதன் இருப்பு
பிரீமியம் ஸ்டோரி
அதனதன் இருப்பு

- சக்தி ஜோதி

கவிதை: அதனதன் இருப்பு

- சக்தி ஜோதி

Published:Updated:
அதனதன் இருப்பு
பிரீமியம் ஸ்டோரி
அதனதன் இருப்பு

வீட்டின்

முன் நிற்கும் வேம்பு

பூக்கத் தொடங்கும் பருவத்தில்

உச்சிக்கிளை அசைய

உதறியெழுந்து

பறக்கத் தொடங்கும் கிளிக்கூட்டம்

கோடைக்காலத்தை

அழைத்து வரும்

ஒருநாள்

விடியற்பொழுதில்

உதிர்ந்திறங்கிய வெண்மலர்களோடு

முழுவதும் வளராத சிறகுகளையுடைய

கிளிக்குஞ்சொன்றும்

தடுமாறி

தரையில் விழுந்தது

கவிதை: அதனதன் இருப்பு
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடிபட்டு

உடைந்த அலகும்

உடலில் காயமுமாய்

பறக்கவியலாமல்

தடுமாறிக்கொண்டிருந்ததை

அள்ளியெடுத்து

வந்தவள்

புண்ணுக்கு மருந்திட்டு

உண்பதற்குப் பழங்களும் தந்து

சிறு கூண்டில் வைத்து

அப்பருவம் முழுக்கக் காத்து வந்தாள்

கோடை வந்தது

வேம்பில் உதிர்ந்தது போக

மிச்சமிருந்த பூக்களத்தனையும்

பழுத்துக்கனியாகி

வாசம் பரப்பத் தொடங்கியிருந்த

தினமொன்றில்

அக்கூண்டினைத் திறந்து விட்டாள்

தான்

ஒருபோதும் விட்டகலாத

தன் வீட்டினைத் திரும்பிப் பார்த்தபடி.