டூவீலர் ஓட்டத் தெரிந்ததும்

முதலில் உன் வீட்டுக்குக் கிளம்பினேன்

வரும் வழியெல்லாம் ஒரே குஷி

மிரட்சியிலும் பிரமிப்பிலும்

நீ பேசப்போகும் சொற்களை

எனக்கு நானே கற்பனை செய்தேன்

தெரிந்ததைக் காட்டிவிடும் பரபரப்பில்

ஓவர் ஸ்பீடில் கையைத் திருகினேன்

முடியுமானால்

உன்னையும் உட்காரவைத்து

ஊரை ஒரு சுற்றுச் சுற்றவும் திட்டமிருந்தது

போதுமான பெட்ரோல்

இருக்கிறதா என யோசித்த நான்

உன் வீடுவந்து சேர்வதற்குள்

பிரேக் ஒயர் பிடுங்கிக்கொள்ளுமென்று

நினைக்கவே இல்லை

பார்த்தாயா எந்திரங்களே இப்படித்தான்

ஒன்றும் வருத்தமில்லை

அடுத்தமுறை குதிரையில்

வருகிறேன், போலாம் ரைட்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்து

என்னுடன் படிக்கும் வாய்ப்பை

உன் வீட்டில் யாரோ

தடுத்திருக்கிறார்கள்

கல்லூரியை நீயே தேர்ந்தெடுத்து

அப்போதும் உடன்பயிலும்

வாய்ப்பைக் கோட்டைவிட்டிருக்கிறாய்

எதிர்வீட்டிலோ பக்கத்துவீட்டிலோ

இருந்திருக்கலாம் அதுவுமில்லை

எங்கள் எளிய மற்றும் வறிய குடும்பம்

பத்து பதினைந்து வீடுகளில்

வாடகைக்கு இருந்தோமே அந்த

வீடுகளின் வீட்டு ஓனர்மகளாகவோ

ஓனர் மகளுக்குப் பிரெண்டாகவோ

இருந்திருக்கலாம் அதுவும் நடக்கவில்லை

வழக்கமாக பலசரக்குக் கடையில்

ஒரு பெண்ணிருப்பாளே அவளாகக்கூட

இருந்திருக்கலாம் அதற்கும் வழியில்லை

இப்படி என்னுடன் பழக

உனக்கிருந்த ஈசியான முன்வாய்ப்புகளை

இழந்த உன்னை

இனிமேலும் விட்டுவிடலாமென்று

மனப்பால் குடிக்காதே

உலகம் ஒரு வட்டம்.

என்னிடம்

உன் தெருவிலுள்ள குழந்தைகளில் சில

பட்டம் செய்து தரக் கேட்டன

ஒரு வார்த்தை மறுக்காமல்

அழகழகாய் செய்து

நடுவிலே ஹார்ட்டீன் சிம்பலுடன்

அனுப்பிவைத்தேன்

ஆனாலும் பாரேன்

அந்தப் பிசாசுகளில் ஒன்றுகூட

கடைசிவரை அப்பட்டங்களை

நான்தான் செய்தேனென உன்னிடமும்

சொல்லாமல் இருந்திருக்கின்றன

உன் தெருவிலுள்ள குழந்தைகள்

டேஞ்சரானவை. நீயாவது

ஜாக்கிரதையோடிரு.

டூவீலர் ஓட்டத் தெரிந்ததும்

முதலில் உன் வீட்டுக்குக் கிளம்பினேன்

வரும் வழியெல்லாம் ஒரே குஷி

மிரட்சியிலும் பிரமிப்பிலும்

நீ பேசப்போகும் சொற்களை

எனக்கு நானே கற்பனை செய்தேன்

தெரிந்ததைக் காட்டிவிடும் பரபரப்பில்

ஓவர் ஸ்பீடில் கையைத் திருகினேன்

முடியுமானால்

உன்னையும் உட்காரவைத்து

ஊரை ஒரு சுற்றுச் சுற்றவும் திட்டமிருந்தது

போதுமான பெட்ரோல்

இருக்கிறதா என யோசித்த நான்

உன் வீடுவந்து சேர்வதற்குள்

பிரேக் ஒயர் பிடுங்கிக்கொள்ளுமென்று

நினைக்கவே இல்லை

பார்த்தாயா எந்திரங்களே இப்படித்தான்

ஒன்றும் வருத்தமில்லை

அடுத்தமுறை குதிரையில்

வருகிறேன், போலாம் ரைட்.

பள்ளிக்கூடத்தில் சேர்த்து

என்னுடன் படிக்கும் வாய்ப்பை

உன் வீட்டில் யாரோ

தடுத்திருக்கிறார்கள்

கல்லூரியை நீயே தேர்ந்தெடுத்து

அப்போதும் உடன்பயிலும்

வாய்ப்பைக் கோட்டைவிட்டிருக்கிறாய்

எதிர்வீட்டிலோ பக்கத்துவீட்டிலோ

இருந்திருக்கலாம் அதுவுமில்லை

எங்கள் எளிய மற்றும் வறிய குடும்பம்

பத்து பதினைந்து வீடுகளில்

வாடகைக்கு இருந்தோமே அந்த

வீடுகளின் வீட்டு ஓனர்மகளாகவோ

ஓனர் மகளுக்குப் பிரெண்டாகவோ

இருந்திருக்கலாம் அதுவும் நடக்கவில்லை

வழக்கமாக பலசரக்குக் கடையில்

ஒரு பெண்ணிருப்பாளே அவளாகக்கூட

இருந்திருக்கலாம் அதற்கும் வழியில்லை

இப்படி என்னுடன் பழக

உனக்கிருந்த ஈசியான முன்வாய்ப்புகளை

இழந்த உன்னை

இனிமேலும் விட்டுவிடலாமென்று

மனப்பால் குடிக்காதே

உலகம் ஒரு வட்டம்.

என்னிடம்

உன் தெருவிலுள்ள குழந்தைகளில் சில

பட்டம் செய்து தரக் கேட்டன

ஒரு வார்த்தை மறுக்காமல்

அழகழகாய் செய்து

நடுவிலே ஹார்ட்டீன் சிம்பலுடன்

அனுப்பிவைத்தேன்

ஆனாலும் பாரேன்

அந்தப் பிசாசுகளில் ஒன்றுகூட

கடைசிவரை அப்பட்டங்களை

நான்தான் செய்தேனென உன்னிடமும்

சொல்லாமல் இருந்திருக்கின்றன

உன் தெருவிலுள்ள குழந்தைகள்

டேஞ்சரானவை. நீயாவது

ஜாக்கிரதையோடிரு.