நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப்போல்

அவ்வளவு சிறியவையல்ல

காற்றாலையில் சுற்றிக்கொண்டிருக்கும் அதன் விசிறிகள்,

ஒரு வெளியை வெட்டித்திரும்பும் நொடியை

திரும்பத் திரும்ப,

மிக சாதாரணமாக

செய்துகொண்டிருப்பது அவற்றுக்கு மிக எளிதாகயிருக்கிறது.

மிகவும் நம்பும் ஒரு சொல்லைத்தான் எப்போதும்

நினைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது,

ஒவ்வொரு துக்கமாகவும்

ஒவ்வொரு சந்தோசமாகவும்

ஒவ்வொரு பரிசாகவும்

ஒவ்வொரு பறந்து வரும் சிறிய இறகாகவும்

பிரித்துக்கொண்டிருக்கும் இம்மாலையைச் சிறிது ஈரம் நிறைந்ததாக்குகின்றன

ஒவ்வொரு பொரியாக இழுத்துச்செல்லும் மீன்கள்.

இவ்வாறாகயில்லாமல் சிறிது சிறிதாக வெறுத்திருக்கலாம்

கொஞ்சமாகத் திறந்து உணர்ந்திருக்கலாம்

அச்சிறிய நேசங்களின் சொற்களை.

கொஞ்சமாக நகர்ந்து அவ்வுறவை இன்னும்

சற்று ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.

எப்போதும்போல் கொஞ்சமாக ஏமாற்றிவிட்டுக்

கடந்திருக்கலாம்.

இந்தக் கயிற்றின் சுருக்கத்தை மேலும் சோதித்திருக்கலாம்

சிறிய கைகளில் வந்துசேர்ந்திருக்கும் இச்சிறிய இறகுகளை

மீண்டும் ஒவ்வொன்றாகப் பறக்கவிட

நானென்னதான் செய்ய வேண்டும்.

மீதமிருக்கும் எல்லா நிராகரிப்புகளையும்

ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

தன் மடியில் துவண்டுகிடக்கும் ஓர் உயிருக்காக

மிகச் சீக்கிரமாக சங்கீதத்தைத் துவங்க வேண்டும்.

எதற்காகவோ கைவிடப்பட்ட ஒரு சொல்

தினந்தோறும் வந்து நிற்கும் அவ்வாசலைத் திறந்துவைக்க வேண்டும்.

இவற்றுக்கருகிலேயே எப்போதுமிருப்பதாய்

அவற்றை நம்பவைக்க வேண்டும்.

ஆக முதலில்,

பறந்து வரும் சிறிய இறகிற்கு அதன் திசை

மிகப்பிரமாண்டமானதுதான்.

அங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்,

உன் நிலம் சுதந்திரமானதுதான்.

உன் மரணம் இங்குதான் நிகழவேண்டும்,

எல்லா நீதி மாண்புகளுக்கு முன்பாக.

எல்லா எளிய மக்களுக்கு முன்பாக,

அங்கேயே ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்.

நாம் சிறிது சிறிதாக,

நமக்குப் பிடித்தமான காலமாக இதை மாற்றிக்கொள்ளலாம்.

ஏன் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறாய்,

பாதி சிரித்த முகத்துடன் எப்போதுமிருப்பவர்

தான்

கடவுள்

இங்கு.

ஒரு ஞாபகத்தை ஆகக்கடைசியில்

புதைக்கும்போது அது புதைந்துகொள்கிறது

அல்லது

எரிக்கும்போது எரிந்தும்கொள்கிறது

அது எப்போதும் இப்படித்தான்,

கடைசி வார்த்தையை அவ்வளவு நெருக்கமாக

சொல்லிக்கொண்டேயிருக்கும்.