
அவ்வப்போது `காரு’க்கு றெக்கை பூட்டி
வானில் பறந்துவிடுவதுண்டு
காரை வானில் செலுத்த பெட்ரோல் தேவைப்படுவதில்லை
காரும்கூட தேவையில்லை
ஒரு கார் ஆனது மழை என்றும் பொருள்படும் என்பதால்
தக்க இடத்தில் அதை நிறுத்தி
மாரியென அதனைப் பெய்வித்துவிடுதல் வழக்கம்
கார் மாரி பொழி நீரை
உறிஞ்சி வளர்ந்த
மரங்களடர் தோட்டமொன்று எனக்கு உண்டு
அதில் விளையும் வாகனங்களை ஓட்ட
பெட்ரோல் தேவையில்லை
நானும் இப்பூமியும் கொஞ்சம்போல் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism