Published:Updated:

கவிதைகள்

கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

எனக்கென்று அவ்வளவு அவசரமில்லை... ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்

கவிதைகள்

எனக்கென்று அவ்வளவு அவசரமில்லை... ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்

Published:Updated:
கவிதைகள்
பிரீமியம் ஸ்டோரி
கவிதைகள்

சிறப்புப் பரிசு குக்கர்

காத்தலும் அழித்தலும்...

பூனையொன்று

தன் குட்டியைக்

கவ்விப்பிடித்தலுக்கும்

எலிக் குட்டியைக்

கவ்விப்பிடித்தலுக்குமான

சிறு இடைவெளியில்

நடந்தேறுகிறது

காத்தலும் அழித்தலும்!

- தனம் கண்ணன், புதுக்கோட்டை

***

ரொக்கப் பரிசு ரூ.300

இயல்பு

எனக்கென்று அவ்வளவு அவசரமில்லை...

ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்

மீனுக்கும் எனக்கும்

பரிச்சயம்கூட இல்லை...

ஆனாலும்

அதனிடம் கூற என்னிடம்

எத்தனையோ வார்த்தைகளைச்

சேகரித்தும் வைத்திருக்கிறேன்...

அதனுடன் நீண்ட தூரம்

அக்கரைக்குப் பயணம்

செய்திடக்கூட நினைத்திருந்தேன்...

ஆனால்,

அதைக் கண்ட விநாடியே

நீண்ட அலகால் தீண்டிப்

பசியாற்றிக்கொள்ளவே

ஒற்றைக் காலில்

தவமாகக் காத்திருப்பது

என் இயல்பாகிப்போனது.

- சசிகலா எத்திராஜ், கரூர்

***

கவிதைகள்

ரொக்கப் பரிசு ரூ.300

மழை

எவ்வளவுதான் பெய்தாலும்

நம் மீது பொழிவது

நமக்கான பங்கு மட்டும்தான்.

- எம். கலையரசி, சேலம்-7

***

ரொக்கப் பரிசு ரூ.300

தீக்குச்சியில்

ஹார்மோனியக் கட்டைகள்

சிவகாசி சிறுமி.

- ஜானகி பரந்தாமன், கோவை-36

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை

வண்ணங்களாக்கி எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் கவிதைகளுக்குக்

காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com