
எவர் துயரிலும் பங்கேற்கப்
பொழுதில்லை எவர்க்கும்
அவரவர் சீவன் அனைவர்க்கும் கருப்பட்டி
எரியும் கொள்ளிகள் யாங்கணும்
பீடி கொளுத்தக் கொள்ளி எடுத்தால்
கொளுத்தப் படுவது உம் குடில்
அரவம் ஆடேல் எனப்
பாம்பின் மீது பெரும்பழி உண்டு
குலவிக் கொண்டிருப்பதோ
கோள்ளை நோய்களுடன்
பிள்ளைக்கறி என்றால் பொரிப்பதற்காகும்
தள்ளைக்கறியும் தள்ளிட மாட்டார்
காப்பார் என்று காத்திருக்காதீர்
கடைசி அறுப்பை அவரே செய்வார்
வரலாறு என்பது துரோகத்தின் மிச்சம்
வாழ்க்கை என்பது துயரத்தின் மிச்சம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism