புகைச்சுருளென நினைவு

நீண்ட நெடுமரமாய் காலம்

உச்சந்தலையில் சொட்டென்று விழுகிறது மழை

யுரேகா என்று கத்துகிறார் ஐன்ஸ்டீன்.

இல்லையில்லை...

ஏதோ ஒன்று இடிக்கிறது.

மீண்டும்...

நீண்ட நெடுமரமென நினைவு

புகைச்சுருளாய் காலம்

ஐன்ஸ்டீன் தலையில் சட்டென்று விழுகிறது மழை

யாரோ யுரேகா என்கிறார்கள்.

இது பரவாயில்லை.

மேலும்...

ஐன்ஸ்டீனின் மூளையென அடர்ந்த நினைவு

நெடுமரத்தின்மேல் பட்டென்று விழுகிறது மழைத்துளி

காலம் யுரேகா என்கிறது.

காலவெளித் தொடர்ச்சி

வெறும் அயற்சியாக...

சற்றுமுன்:

ஐன்ஸ்டீன் சுருளெனப் புகைபிடிக்கிறார்

நெடுமரம் மழையில் முறிந்தேவிட்டது

யு.ரேகா பள்ளிக்குப் போயிருக்கிறாள்.

புகைச்சுருளென நினைவு

நீண்ட நெடுமரமாய் காலம்

உச்சந்தலையில் சொட்டென்று விழுகிறது மழை

யுரேகா என்று கத்துகிறார் ஐன்ஸ்டீன்.

இல்லையில்லை...

ஏதோ ஒன்று இடிக்கிறது.

மீண்டும்...

நீண்ட நெடுமரமென நினைவு

புகைச்சுருளாய் காலம்

ஐன்ஸ்டீன் தலையில் சட்டென்று விழுகிறது மழை

யாரோ யுரேகா என்கிறார்கள்.

இது பரவாயில்லை.

மேலும்...

ஐன்ஸ்டீனின் மூளையென அடர்ந்த நினைவு

நெடுமரத்தின்மேல் பட்டென்று விழுகிறது மழைத்துளி

காலம் யுரேகா என்கிறது.

காலவெளித் தொடர்ச்சி

வெறும் அயற்சியாக...

சற்றுமுன்:

ஐன்ஸ்டீன் சுருளெனப் புகைபிடிக்கிறார்

நெடுமரம் மழையில் முறிந்தேவிட்டது

யு.ரேகா பள்ளிக்குப் போயிருக்கிறாள்.