கனவு நிகழ்வுகளில்

மனம் புண்படுவதில்லை

எல்லாம் செல்லத் துன்பங்கள்

கனவில் நிகழ்வு என்பது

செத்த எலியைக் காக்கை

கொத்திக் குதறுவதுபோல..

நனவில் நினைவு என்பது

உயிரோடு ஓடும் எலியை

பூனை துரத்துவதுபோல..

நல்லவேளை

இதெல்லாம்

கனவுதான்

எனப் பல நாட்கள்

விடிகிறது...

உன் உடல் உறங்கி எழும்

உன்னோடு

ஒன்றை ஈனும்

நன்றாய் வளர்க்கும் கொஞ்சம்

என்றும்

புறம் உண்டு அகம் கழிக்கும்

ஊறவைத்துக் கசக்கிப் பிழிந்து உதறி

காயப்போட்டுக் கொடியில் உலரும்

உன் துணிமணிகள்

அவ்வளவுதான்

உன் காலப் பொருட்சேகர

வாழ்வாங்கு வாழ்வு

மீண்டும்

போய்த் தூங்கு பேசாமல்.

கனவு நிகழ்வுகளில்

மனம் புண்படுவதில்லை

எல்லாம் செல்லத் துன்பங்கள்

கனவில் நிகழ்வு என்பது

செத்த எலியைக் காக்கை

கொத்திக் குதறுவதுபோல..

நனவில் நினைவு என்பது

உயிரோடு ஓடும் எலியை

பூனை துரத்துவதுபோல..

நல்லவேளை

இதெல்லாம்

கனவுதான்

எனப் பல நாட்கள்

விடிகிறது...

உன் உடல் உறங்கி எழும்

உன்னோடு

ஒன்றை ஈனும்

நன்றாய் வளர்க்கும் கொஞ்சம்

என்றும்

புறம் உண்டு அகம் கழிக்கும்

ஊறவைத்துக் கசக்கிப் பிழிந்து உதறி

காயப்போட்டுக் கொடியில் உலரும்

உன் துணிமணிகள்

அவ்வளவுதான்

உன் காலப் பொருட்சேகர

வாழ்வாங்கு வாழ்வு

மீண்டும்

போய்த் தூங்கு பேசாமல்.