Published:Updated:

பொயட்டு! - கவிதை #MyVikatan

விகடன் வாசகர்

``அறுவடை செய்தவன் வரிசையில் காத்திருக்கிறான் இலவச அரிசிக்கு''

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

பேருந்து பயணத்தில் மனதின் முதல் தேடல்...

`இருக்கையின் மீது’,

நீ என்னை பயன் படுத்தாத ஒவ்வொரு கணநேரமும் நான் இறந்து விடுகிறேன் "காலம்."!

கணவன் இருக்கும்போதே தாலி இழக்கிறாள் பெண் "வழிப்பறி."

கடற்கரையில் பதித்த அவளின் கால்தடத்தை முத்தமிட்டு அபகரித்துச் சென்றன அலைகள்,

பிச்சைக்காரன் தட்டில் காக்கையின் எச்சம் யாரும் முன்வராததால்,

அடுத்த வேளை கேள்விக்குறியானது விலைவாசி,

மது - வறுமையைக் கொண்டு வந்தது வீட்டுக்கு,

அறுவடை செய்தவன் வரிசையில் காத்திருக்கிறான் இலவச அரிசிக்கு,

Representational Image
Representational Image
Credits : Pixabay

உழைப்பை திருடிச் சென்றது அரசின் இலவசத்திட்டம்,

தாகம் தீர்க்க வரிசையில் காத்திருந்தது தண்ணீர்க் குடம்,

ஏழைக்குடிசையில் வந்து போனது நிலா!

"வறுமை" படித்தபின்பும் பிச்சை எடுக்கிறார்கள்,

"கையூட்டு"என்ற பெயரில்,

நடைப்பாதை தொலைந்தது, குடிமகனுக்கு

வற்றிய நீரோடை, நிரம்பி வழிகிறது நீர், விவசாயியின் கண்களில்;

உதவித்தொகை லஞ்சத்தில் அடிபட்டு கிடைக்கிறது பயனாளிக்கு,

வெட்டப்பட்ட மண்புழு கவ்விப்பிடிக்கிறது; தூண்டில் மீன்கள்,

பூக்கள் மொட்டு விடும் முன்பே இங்கு அழிக்கப்படுகிறது... "பாலியல் வன்கொடுமை",

இலவச தரிசனம் மங்கலாக கிடைத்தது இலவச வரிசையில் "கோவில்",

திருமணம் ஆனதும் தனிக்குடித்தனம் ஆனார்கள் பெற்றோர்கள் "பிரிவு"

Representational Image
Representational Image
Credits : Pixabay

ரூபாய் நூறு இருந்தால் எந்நாட்டவரும் இங்கே குடிமகன் ஆகலாம் "அரசுமதுபான கடை"

காலத்தின் கட்டாயத்தால் முதுமையடைந்தேன்!

முதுமையால் சிறைப்பட்டுப் போனேன்"முதியோர் இல்லம்",

"தலைக்கவசம் கட்டாயம்’’, விபத்தில்லா சாலைகள் அமைப்பது எப்போது ? "அரசின் தவறு"

- அந்தோணி ராஜ்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/