Published:Updated:

மகளதிகாரம்! – கவிதை #MyVikatan

விகடன் வாசகர்

மஞ்சள் பட்டில் சாமந்தியாய் நிற்கும் மகளின் பொய்க்கோபம்..

Representational Image
Representational Image

தலையின் இருபுறமும்

மொட்டு காளான்களாய் நிற்கும்

இரு சடைகளை,

ஆட்டி, ஆட்டி,

உக்கிரமாய்

இடுப்பில் கைவைத்து,

முட்டை விழிகளை

உருட்டி, மிரட்டி

தண்டட்டி அப்பத்தாவின்

உடல் மொழியோடு,

மஞ்சள் பட்டில்

சாமந்தியாய் நிற்கும்

மகளின்

பொய்க்கோபம்

கண்டு,

உறுமாலை கழட்டி

இடுப்பில் கட்டி,

பயந்து சரிந்தான்

``கடா மீசை" அப்பன்.

Representational Image
Representational Image

சிக்கனம்!

நூற்றுக்கணக்கான

பக்கங்களை

கசக்கி

எறிந்த பிறகு

வாய்த்தது

``சிக்கனம்"

குறித்த

அந்த

இரு வரி ``கவிதை"

.......................

......................

``சொற்களைச் சேமிப்போம்".......!!!!

- திருப்பதி வாசகன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/