Published:Updated:

கெளரி அக்கா வெச்ச கொலு! - கவிதை #MyVikatan

பத்து கொய்யாப்பழங்கள் எட்டணா... எங்களுக்கு மட்டும் நாலணா.

Representational Image
Representational Image ( Credits : Unsplash )

அவளிடம்

ஒரு நூறு பொம்மைகளாவது இருந்திருக்கும்.

ஒவ்வொரு பொம்மைக்கும் ஒன்றிரண்டு கதைகளும்

வைத்திருந்தாள்.

ஒருக்களிச்ச புள்ளையார் சீரங்கத்து அத்திம்பேர் குடுத்தது.

அத்திம்பேர் கல்யாணத்து அக்காரவடிசல்

அவளால் மறக்கவே முடியாது.

தஞ்சாவூர் கோபுரம் ஒரு வருடம் உண்டியல் சேர்த்து

அவள் வாங்கியது.

Golu Dolls
Golu Dolls

பத்து கொய்யாப்பழங்கள் எட்டணா... எங்களுக்கு மட்டும் நாலணா

கறாரா காசு வாங்கி உண்டியல் சேர்ப்பாள்

அவள் பொம்மைகள் கழுவி வண்ணங்கள் மாற்றுவது

ஒரு வைபவம்.

அவளோடு அமர்ந்திருந்து கதைகள் கேட்பது

அவ்வளவு பரவசம்.

ஒவ்வொரு வருடமும் ஓரிரண்டு படிகள் கூடும் குறையும்

அவள் மனம் போல்.

பொம்மைக் கொலு பஜனை... வேண்டும் எங்க தட்சணை

கேட்டு வாங்கும்

ஒவ்வொரு வீட்டு சுண்டலும் அவள் தாவணியில் முடிந்து

பிறகு பங்கிடப்படும்.

Representational Image
Representational Image

பாலாறு ஓடி வர தேனாறும் சேர்ந்துவர பதினாறு செல்வமும் கூடிவர

அவள் குரலுக்கு

அவ்வளவு பொம்மைகளுக்கும் உயிர் வந்திருக்கும்.

ஒவ்வொரு கொலுவிலும்

அவளே என்னுள் வியாபித்திருக்கிறாள்.

ஆழிசூழ் அபிராமி போல்

எங்காவது அவள் நிச்சயம் கொலு வைத்திருப்பாள்

இந்தப் பத்து நாட்கள்.

அவ்வளவு பொம்மைகளுக்கும் உயிர் வந்திருக்கும்

அவள் கரம் பட்டு குரல் கேட்டு மகிழ்ந்திருக்கும்

அவளும் மகிழட்டும்!

-ரமேஷ் கோபாலகிருஷ்ணன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/