Published:Updated:

வெற்றிலைப் பெட்டி! - வாசகி பகிர்வு #MyVikatan

சிறிய வயதில் தன்னை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொண்ட பாட்டி குறித்து வாசகி பகிர்ந்த நெகிழ்ச்சியான கவிதை...!

Representational Image
Representational Image

விவரம் அறியா வயதில்

கண்ணும் கருத்துமா

பார்த்துக்க பிள்ளைன்னு

காசாம்பு கையில விட்டுட்டு

பெத்தெடுத்த தாய் தந்தை

வேலை தேடி

வெளி ஊரு போக

காசாம்புடன் கட்டில்

உறக்கம் ஆரம்பம்

Representational Image
Representational Image

வயசுதான் எண்பதாச்சி

விடியலுக்கு முன்ன எழுந்து

வீட்டு வேலை தொடங்கிடுவா

கோழி கூவுனப் பொறவு

தூக்கமானு பொலம்பித்

தீத்திடுவா

பல்லு துலக்கி வர

கருப்பெட்டி சாயத்த

கையில கொடுத்துடுவா

Representational Image
Representational Image

களிக்கிண்டி சாப்பிட்டு

வரையாடு பசி தீர்க்க

வயலுக்குப் போவோம்

புல் அறுக்க

சிறு பிள்ளப் புத்தி

களிமண்ணைக் கண்டதும்

அடம்பிடிக்க

கூட்டாஞ்சோறு சாமான்

அவள் செஞ்சு தந்திடுவாள்

Representational Image
Representational Image

புல்லு மூட்ட தலையில

கையில என்னப் பிடிச்சி நடக்க

விலகிப் போ வேலையப் பாத்துனு

வெயில் காயும்

சாரப்பாம்ப திட்டுவா

பனங்கிழங்கு வாசம்

பார்வதிக் கிழவிப்

பதியம் போட்டிருக்க

காசாம்பு சிநேகிதி

நின்னத பார்த்து

பனங்கிழங்கு நோண்டி கொடுக்க

Representational Image
Representational Image

ஒரு வழியாக

வீடு வந்து சேர்ந்தோம்

உரல்ல பாக்கு இடித்தபடி

வெற்றிலை வாங்கிவான்னு

சில்லறை கொடுக்க

வாங்கிக் கொடுத்து விட்டு

நான் அமர

சுண்ணாம்பு வாங்கி வா

எதித்த வீட்டு ராமையா

தாத்தாவிடம் என்று

அனுப்பினாள்

Representational Image
Representational Image

புளிச் புளிச்சென்று

எச்சிலைத் துப்புவாள்

வெற்றிலையை மென்று

பார்க்கவோ பிடிக்காது எனக்கு

அவளுக்கு வெற்றிலைப்

பெட்டிதான் கல்லாப் பெட்டி

கர்ணன் கவச குண்டலம்

போல் கையிலே இருக்கும்

திண்பண்டம் நான் கேட்க

தொம்பை புதையல்

வெளியே வரும்

Representational Image
Representational Image

நாழிகை போதும் விறகில்

அவிச்ச பாசிப்பயறு, தட்டைப்பயறு

ஆவியோடும் வாழிலையில்

அவிச்ச முட்டக் கொதி நீரில்

நரம்பு சுட நாவும் ருசிக்கும்

ஏப்பம் விட இன்னும்

கேக்கும் வயிறும்

ஊர் அரவம் அடங்கும் நேரம்

மேல சத்தம் படப்படப்புத் தந்தது

ராமையா தாத்தா

அடைந்துவிட்டார்

சிவலோகப் பதவி

பயத்துடன் கட்டிக்கொண்டேன்

முதல்முதலாய் பாட்டியை

என்னை விட்டு சென்றிட மாட்டாயே

எனக் கண்ணீரும் கேட்டது

ஒரு புறம்

Representational Image
Representational Image

அதுவரை பிடித்திருந்தாலும்

அன்றுதான் விளங்கியது

அவள் அருமை

சேர்ந்து விட்டேன்

வெற்றிலை போடும்

பாட்டியுடன்

காம்பு மெல்லும்

பேத்தியாக..!

ச.பிரபாவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/