Published:Updated:

செரட்டையும் செங்காயும்! - கவிதை #MyVikatan

Representational Image
Representational Image

வத வத ன்னு காச்சு தொங்கிட்டு இருக்க இந்தப் புளியமரத்துல செங்காயா தேடி அடிச்சு திங்கிற சுகமே அலாதிதான் ...

பள்ளியோடம் விட்டாச்சுன்னா வைக்கப்போறே கதின்னு கடக்கும் நாங்க

இந்த முழுப்பரிச்ச லீவு விட்டாச்சுன்னா கவட்ட கம்போட கம்மாக்கரையில தான் முழுநேரமும்

கரையொட்டி இருக்கும் தென்னந்தோப்பு

அதவிட்டா கரை மத்தியில் இருக்கும் புளியந்தோப்பு இதான் எங்க டாப்பு

Representational Image
Representational Image

கிடைக்கிறதெல்லாம் வேட்டையாடி திங்கவேண்டியதுதான் கூட்டாஞ்சோராய் கரட்டாவண்டியைத் தவிர....... ஆனா

வத வத ன்னு காச்சு தொங்கிட்டு இருக்க இந்தப் புளியமரத்துல செங்காயா தேடி அடிச்சு திங்கிற சுகமே அலாதிதான்...

ஊறக் கடந்து போகும்போதே ஒத்தையா கிழவி கடையில கூறு மாங்காய்க்கு வச்சுருக்க உப்புல ஆளுக்குக் கொஞ்சமா அள்ளிக்கிட்டு வந்திடுவோம்

இதுனாலேயே உப்புதின்னிங்கன்னு பேரு எங்களுக்கு அந்தக் கிழவிகிட்ட

சட சடையா தொங்கிட்டு இருக்க புளியங்காய்ல

முழுசா காயும் இல்லாம பழுத்து புளியா இருக்கும் பழமும் இல்லாம முக்கால் வாசி வெளிர்ப்பச்சை கலர்ல மாறி கொஞ்சமா பழுத்து லைட்டா கொலகொலன்னு இருக்க செங்காயா பாத்து எடுத்து

கொஞ்சமா உப்ப பழம் முழுசும் தடவி நடுநாக்குல வச்சு ஒரு உறுஞ்சு உறுஞ்சினா அந்தப் புளிப்பும் உவர்ப்பும் சேர்ந்து கழுத்துக்குக் கீழ இன்பமான சுவையும் கண்ணுக்கும் காத்துக்கும் புளிப்பின் உணர்வு பட்டுன்னு போகும் கரன்ட் அடிச்ச மாதிரி

Representational Image
Representational Image

நாலு காய் தின்னு முடிக்குறதுக்குள்ள பல்லு அத்தனையும் புளிப்பேறி கூச ஆரமிச்சுரும்

புளி ஒரு சுகம்னா அதோட சிரட்டை தனிச் சுவை

நல்லா முழுசா பதமாகிட்ட புளியைப் பாத்ததுமே தெருஞ்சுடும் அத மெதுவா காம்பு இருக்க பக்கமா தட்டி கொஞ்சமா உடச்சு உருகுனா

கொஞ்சம் கூட புளியே ஒட்டாம கூடு மட்டும் தனியா வந்திடும் அதாங்க செரட்டை

சும்மா வாயில போட்டு அப்பளம் மாதிரி நொறுக்கி மென்னுகிட்டே இருந்தா புளிப்பும் தொவப்பும் சேந்த சுவையா செமையா இருக்கும் எங்களுக்கெல்லாம் பூமர் வர்றதுக்கு முன்னாடி அதாங்க பப்லிக்காமே...

ப்ப்ப்ப்ப்பப்பா இப்ப நினச்சா கூட மொத்த உடம்பும் கூசுது .....

ஞாபகங்கள் என்றுமே பொக்கிஷங்கள்!

- கிராமத்தான் மாடக்குளம்.இரா.மு.தனசேகரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு