ஆயிரம் நிலாக்களை அழைத்துவந்தவன் நீ!

இயற்கை என்னும் இளைய கன்னி

எப்போதும் உன் குரலுக்கு

வயசாகாத வரம் தந்தாள்.

தாய்ப்பறவையின் முட்டையைக்

காக்கும் கவனத்துடன்

தலைமுறை தாண்டி உன் குரல் ஏந்தினோம்!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

பிறந்தோம்...

‘கற்பூர பொம்மை ஒன்று... கைவீசும் தென்றல் ஒன்று ’ என

தாயின் விரலாய்த் தலைகோதினாய்!

வளர்ந்தோம்...

‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’

‘பருவமே... புதிய பாடல் பாடு’ என்றாய்!

இணைந்தோம்...

‘காதலின் தீபம் ஒன்றை’

இதயத்தின் அறைகளில் ஏற்றிவைத்தாய்!

பிரிந்தோம்...

‘உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன்’

என்று உருகவைத்தாய்!

மணந்தோம்...

‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்’ணுக்கும்

‘அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே’ என வாழும் ஆணுக்கும்

பாடல்களால் பூச்செண்டு தந்தாய்!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

ஒலிநாடா, குறுவட்டு, பென்டிரைவ்,

வயலின் முதல் எலெக்ட்ரானிக் கீ போர்டு வரை

எத்தனை கருவிகள் மாறியிருக்கும்!

உன் குரலுக்கு உதடசைத்து

எத்தனை நாயகர்கள் உருவாகியிருப்பார்கள்!

உன் குரலுக்காய்

எத்தனை இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்!

நீ பாடுவதற்காய்

எத்தனை விரல்கள்

எத்தனை வரிகளை எழுதிக்குவித்திருக்கும்!

எல்லாம் மாறியது...

எங்களைக் கரையவைத்த உன் குரல் மட்டும்

எப்போதும் உடையாத

பனிக்கட்டிதானே பாலு!

எத்தனை பழரசம்

பிழிந்து தந்திருப்பாய்!

எத்தனை தேனடை

பிளந்து தந்திருப்பாய்!

எத்தனை கனவுகளை

எங்கள் கோப்பைகளில் மிதக்க விட்டிருப்பாய்!

‘திருமுகம் வந்து பழகுமோ

அறிமுகம் இன்றி விலகுமோ...

பொன்னிநதி கன்னிநதி ஜீவநதி...’

வீணை நரம்புகள் அறுபட...

கொலுசு மணிகள் தெறித்துவிழ

அந்த மண்டபத்தில் நீ

ஆடிப்பாடியபோது

உடைந்து அழுதோமே!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

ஒவ்வொரு ஒலிப்பதிவின்போதும்

இளையராஜாவின் கைகள் உயர்ந்து தாழ்ந்தபோது

அதன் ஆணைக்கேற்ப

உற்சாக நீரூற்றாய்

உன் குரல் உயர்ந்து ஒலித்ததே பாலு!

சிலசமயம் அவர் சொல்பேச்சையும் மீறி

பாடலின் இடுப்பைக் கிள்ளி

சிணுங்கிச் சிரிக்கவைத்து

சிருங்காரம் கூட்டினாய்!

இசையை

இளையராஜா குரல் முன்மொழிந்தது

உன் குரல் வழிமொழிந்தது!

இளையராஜா சொன்னதையெல்லாம் கேட்டாயே பாலு!

‘எழுந்து வா பாலு, எழுந்து வா பாலு’

என்று அவர் சொன்னதை மட்டும்

ஏன் கேட்க மறுத்தாய் பாலு?

ஆயிரம் நிலாக்களை அழைத்துவந்தவன் நீ!

இயற்கை என்னும் இளைய கன்னி

எப்போதும் உன் குரலுக்கு

வயசாகாத வரம் தந்தாள்.

தாய்ப்பறவையின் முட்டையைக்

காக்கும் கவனத்துடன்

தலைமுறை தாண்டி உன் குரல் ஏந்தினோம்!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

பிறந்தோம்...

‘கற்பூர பொம்மை ஒன்று... கைவீசும் தென்றல் ஒன்று ’ என

தாயின் விரலாய்த் தலைகோதினாய்!

வளர்ந்தோம்...

‘இது ஒரு பொன்மாலைப்பொழுது’

‘பருவமே... புதிய பாடல் பாடு’ என்றாய்!

இணைந்தோம்...

‘காதலின் தீபம் ஒன்றை’

இதயத்தின் அறைகளில் ஏற்றிவைத்தாய்!

பிரிந்தோம்...

‘உன்னை நினைச்சேன் பாட்டுப்படிச்சேன்’

என்று உருகவைத்தாய்!

மணந்தோம்...

‘கல்யாண மாலை கொண்டாடும் பெண்’ணுக்கும்

‘அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே’ என வாழும் ஆணுக்கும்

பாடல்களால் பூச்செண்டு தந்தாய்!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

ஒலிநாடா, குறுவட்டு, பென்டிரைவ்,

வயலின் முதல் எலெக்ட்ரானிக் கீ போர்டு வரை

எத்தனை கருவிகள் மாறியிருக்கும்!

உன் குரலுக்கு உதடசைத்து

எத்தனை நாயகர்கள் உருவாகியிருப்பார்கள்!

உன் குரலுக்காய்

எத்தனை இசைக்குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும்!

நீ பாடுவதற்காய்

எத்தனை விரல்கள்

எத்தனை வரிகளை எழுதிக்குவித்திருக்கும்!

எல்லாம் மாறியது...

எங்களைக் கரையவைத்த உன் குரல் மட்டும்

எப்போதும் உடையாத

பனிக்கட்டிதானே பாலு!

எத்தனை பழரசம்

பிழிந்து தந்திருப்பாய்!

எத்தனை தேனடை

பிளந்து தந்திருப்பாய்!

எத்தனை கனவுகளை

எங்கள் கோப்பைகளில் மிதக்க விட்டிருப்பாய்!

‘திருமுகம் வந்து பழகுமோ

அறிமுகம் இன்றி விலகுமோ...

பொன்னிநதி கன்னிநதி ஜீவநதி...’

வீணை நரம்புகள் அறுபட...

கொலுசு மணிகள் தெறித்துவிழ

அந்த மண்டபத்தில் நீ

ஆடிப்பாடியபோது

உடைந்து அழுதோமே!

நீ எங்கள் வாழ்வு அல்லவா பாலு?

ஒவ்வொரு ஒலிப்பதிவின்போதும்

இளையராஜாவின் கைகள் உயர்ந்து தாழ்ந்தபோது

அதன் ஆணைக்கேற்ப

உற்சாக நீரூற்றாய்

உன் குரல் உயர்ந்து ஒலித்ததே பாலு!

சிலசமயம் அவர் சொல்பேச்சையும் மீறி

பாடலின் இடுப்பைக் கிள்ளி

சிணுங்கிச் சிரிக்கவைத்து

சிருங்காரம் கூட்டினாய்!

இசையை

இளையராஜா குரல் முன்மொழிந்தது

உன் குரல் வழிமொழிந்தது!

இளையராஜா சொன்னதையெல்லாம் கேட்டாயே பாலு!

‘எழுந்து வா பாலு, எழுந்து வா பாலு’

என்று அவர் சொன்னதை மட்டும்

ஏன் கேட்க மறுத்தாய் பாலு?