‘நீரின்றி அமையாது உலகு’ என்றார்.

நீங்கள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்தீர்கள்.

‘வானின்று உலகம் வழங்கி வருதலால்’

மழை அமிர்தம் என்றார்.

நீங்களோ பிச்சைப்பாத்திரங்களோடு

வான் நோக்கி நிற்கிறீர்கள்.

‘கற்க கசடற’ என்றார்.

நீங்களோ கல்வி வியாபாரத்தின்

கசடுகள் கற்றீர்கள்.

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்’ என்றார்.

விவசாயிகள் தற்கொலை

செய்துகொள்வதற்கான கயிறுகளைத்

தயாரித்தீர்கள்.

‘கண்ணோடு கண்நோக்கினால்

வாய்ச்சொற்கள் பயனற்றவை’ என்றார்.

காதலர்களைப் பிணங்களாக்கி

பேச்சற்று ஆணவக்கொலை செய்தீர்கள்.

‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார்.

நாக்குகளை விற்றவர்களே

நாற்காலிகளைக் கைப்பற்றினீர்கள்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார்.

ஊரும் சேரியும் இன்னமும் இருக்கின்றன.

‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார்.

நீங்கள் வள்ளுவரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்து

அவருக்கான மதச்சடங்கு செய்தீர்கள்.

நீங்கள் எப்படி இருக்கவேண்டும்

என்பதைச் சொன்னவர் வள்ளுவர்.

நீங்களோ வள்ளுவர் எப்படி இருந்தார் என்று

வாதம் செய்கிறீர்கள்.

இப்போது இருந்திருந்தால்

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று

வள்ளுவர் வாளாதிருந்திருக்க மாட்டார்.

உங்கள் குற்றம் கடிந்து

‘பரந்து கெடுக இந்தப் பதர்கள்’ என்று

அறம் பாடியிருப்பார்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்றார்.

நீங்கள் சாயக்கழிவுகளை ஆற்றில் கலந்தீர்கள்.

‘வானின்று உலகம் வழங்கி வருதலால்’

மழை அமிர்தம் என்றார்.

நீங்களோ பிச்சைப்பாத்திரங்களோடு

வான் நோக்கி நிற்கிறீர்கள்.

‘கற்க கசடற’ என்றார்.

நீங்களோ கல்வி வியாபாரத்தின்

கசடுகள் கற்றீர்கள்.

‘சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்’ என்றார்.

விவசாயிகள் தற்கொலை

செய்துகொள்வதற்கான கயிறுகளைத்

தயாரித்தீர்கள்.

‘கண்ணோடு கண்நோக்கினால்

வாய்ச்சொற்கள் பயனற்றவை’ என்றார்.

காதலர்களைப் பிணங்களாக்கி

பேச்சற்று ஆணவக்கொலை செய்தீர்கள்.

‘யாகாவாராயினும் நா காக்க’ என்றார்.

நாக்குகளை விற்றவர்களே

நாற்காலிகளைக் கைப்பற்றினீர்கள்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்றார்.

ஊரும் சேரியும் இன்னமும் இருக்கின்றன.

‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார்.

நீங்கள் வள்ளுவரின் சாதிச்சான்றிதழை ஆராய்ந்து

அவருக்கான மதச்சடங்கு செய்தீர்கள்.

நீங்கள் எப்படி இருக்கவேண்டும்

என்பதைச் சொன்னவர் வள்ளுவர்.

நீங்களோ வள்ளுவர் எப்படி இருந்தார் என்று

வாதம் செய்கிறீர்கள்.

இப்போது இருந்திருந்தால்

‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று

வள்ளுவர் வாளாதிருந்திருக்க மாட்டார்.

உங்கள் குற்றம் கடிந்து

‘பரந்து கெடுக இந்தப் பதர்கள்’ என்று

அறம் பாடியிருப்பார்.