Published:Updated:

அறியாமையை அகற்று! - கவிதை #MyVikatan

விகடன் வாசகி

எழுதுகோலைத்தொட்டு எத்தனையோ நாள்களாயிற்று.

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

எனக்குள் ஓர் ஆசை இருந்தது

எழுத்தாளராக வேண்டும் என்று.

எழுதலாமென்று எத்தனித்தபோதெல்லாம்

எதைப்பற்றி எழுதுவது என்று

என்னுள் ஒரு குழப்பம்.

Representational Image
Representational Image

எழுதுகோலைத் தொட்டு

எத்தனையோ நாள்களாயிற்று.

எதுவுமே புரியாமல்

எதைப்பற்றி சிந்திக்கிறோம்

என்று அறியாமல்

எட்டுத்திக்கில் எந்தத் திக்கு எனதெனத் தெரியாமல்

எதை நோக்கி என் எழுத்துப் பயணம்

என்று எனக்கே தெரியவில்லை.

அடுக்களையின் அகப்பைக்கு

சற்று ஓய்வு கொடுத்துவிட்டு

எழுத ஆரம்பிக்கின்றேன்.

காகிதத்தில் எழுத்துகள் பதியவில்லை

காரணத்தை ஆராய்கின்றேன்.

Representational Image
Representational Image

எழுதுகோலில் மை தீர்ந்துவிட்டதா-இல்லை‌,

மை ஒட்டாத காகிதத்தில்

நாம் எழுதுகிறோமா என்று.

கண்டுகொண்டேன் காரணத்தை

தீர்ந்தது மையல்ல

சிறியன சிந்திக்காத என் மூளையின் சிந்தனை மையம் என்று‌.

காலஓட்டத்தில் என் எண்ணங்கள் வண்ணமிழந்துவிட்டனவா

கற்பனைகள் காணாமல் போய்விட்டனவா

விடிந்தது முதல் அடைவது வரை

வீட்டு வேலைகளிலேயே

என் வேளைகள் கரைந்துவிட்டனவா.

Representational Image
Representational Image

என்னால் ஏன் எழுதமுடியவில்லை

என்று எனக்குள் நானே

கேள்விகணைகளைத்தொடுத்து

சிறகடித்து பறந்த

என் சிந்தனைகள்

ஏன் சிறுத்துவிட்டது என்று

விண்ணோடு விரக்தியாய் உரையாடுகின்றேன்.

மழை பொழிகிறது.

மண்வாசம் நாசியில் ஏறுகிறது.

மழைத்துளி என் மனதோடு பேசுகிறது.

அறியாமையை அகற்று! - கவிதை #MyVikatan

சிகரம் தொட நினைத்த உன்

சிந்தனை சிறுத்துவிடவில்லை.

உயர்தலும் அயர்தலும்

உன் கையில்தான்.

உறங்கியது போதும்.

உன்னை நீயே ஊக்கப்படுத்து.

உன்னுள் எழும் உத்வேகம்

உன் மூளையில் எழுத்துகளை உயிர்ப்பிக்கும்.

அகராதியைப் படி.

அறிவை அகலப்படுத்து.

அறியாமையை அகற்றிவிடு.

அறியாமையை அகற்று! - கவிதை #MyVikatan

முயலாமையும் இயலாமையும்

உன்னுள் இல்லேல் என்று

உனக்குள்ளே கூறு என்றது.

மழை என் மயக்கத்தைப் போக்கி

எனக்கு மார்க்கத்தைக் காட்டியது.

இதோ

துயில் களைந்த என்

தூவல் துடிப்போடு எழுதத்தொடங்குகிறது.

- அனிதா மோகன்

அறியாமையை அகற்று! - கவிதை #MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/