பிரீமியம் ஸ்டோரி

அறுந்து தொங்கும்

அன்பின் கொடியை

எந்தச் சாளரத்தில் ஏற்றி வைப்பதெனத் தெரியாமல்

அல்லாடிக்கொண்டிருந்த தருணம்

தோற்றுப்போகும் நொடிகளில் எல்லாம்

தேற்றிக்கொள்ள என

சில காரணங்கள்

தேவைப்பட்ட தருணம்

அரிதாரங்களின்

அச்சுறுத்தலில் இருந்து

விடுவிக்காத இக்காலத்தை

சபித்துக்கொண்டிருந்த தருணம்

பனிக்காடும் எரிகாடும்

எண்ணக் கழுத்தை இறுக்கிப்பிடிக்க அடைத்துக்கொண்டிருக்கும்

உயிர்க்காற்று அகாலத்திலேனும்

நீங்கித் தொலையாதா என பரிதவித்திருந்த தருணம்

மதியும் கவியும் - கவிதை

என் சிறிய கனவில்

பெருந்தோட்டத்தைப் பரப்பி

இறுக சாத்தப்பட்ட கதவுகளை

அடைதற்கரிய தம்

அன்பின் கரங்களால் திறந்தனள்

என் நேசிப்பின் பெருஞ்சுடர்கள்

மதியும் கவியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு