Published:Updated:

கவிதைகள்

நீ விருப்பப்படும்போதே என்னை அணைக்கிறாய் உனக்கு தோதுப்படும்போதே

பிரீமியம் ஸ்டோரி

சிறப்புப் பரிசு குக்கர்

முகம்

இரண்டாம் மாடியின் பால்கனியில் நின்று
நிலா பார்க்கச் சொல்லித் தருகிறீர்கள்
எனக்கு மழை ஊறிய பின்னிரவில்
கிளைகளுக்கிடையே பார்க்கும்
மனம் வாய்த்திருக்கிறது
மண் படாத நடை போதிக்கிறீர்கள்
களிமண் பொம்மை செய்பவளிடம்
பதில் என்ன கிடைக்கும்
உங்கள் வட்ட சட்டங்களுக்குள்
என் முகம் ஒருபோதும் பொருந்தாது
அடுத்த ஏழு நாள்களுக்கும்
குழம்பு யோசித்து வைத்திருக்கும்
உங்களுக்குத் தர என்னிடம்
ஒரு நாட்டு கொய்யா உண்டு.
- @இந்துமதி

*****

பரிசு ரூ.300

கற்றல்

நீ விருப்பப்படும்போதே
என்னை அணைக்கிறாய்
உனக்கு தோதுப்படும்போதே
என்னை குளிர்விக்கிறாய்
நினைத்தபோதெல்லாம்
என்னை ஆசுவாசப்படுத்துகிறாய்
சொல்... இதையெல்லாம்
என் காதலனிடம்
கற்றுக்கொண்டாயா மழையே!
- எஸ்.சித்ரா, புதுச்சேரி

கவிதைகள்

பரிசு ரூ.300

அறிவு

உனக்கு
அம்மாவை பிடிக்குமா...
அப்பாவை பிடிக்குமா..?
கேட்ட கேள்விக்கு
சட்டென பதில் சொன்னது குழந்தை...
அடிக்காத அம்மா..!
குடிக்காத அப்பா..!
- வி.கீர்த்தனா, தஞ்சாவூர்

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி,

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறதுரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி:
கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு