Published:Updated:

கவிதை: யாது எம் ஊரே...

யாது எம் ஊரே
பிரீமியம் ஸ்டோரி
News
யாது எம் ஊரே

இளம்பிறை

ஞ்சியிருக்கும்

பால்ய கால நினைவுகளின்

மூலதனச் சுமையுடன்

திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்

அந்நியமாகிப்போன

சொந்த ஊர்களுக்கு

கெட்டும் பட்டணம் வந்தவர்கள்

இறந்தவர்களுக்கு மட்டும்

வாய்க்கட்டுப்போட்டு

பழக்கப்பட்டவர்கள்

உயிரோடிருக்க

மூக்கையும் சேர்த்துக்

கட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயம்

வயிற்றைக் கட்டிக்கொள்ள முடியாத

வாழ்வின் வேட்டைநாய் துரத்தலில்

உயிரைத் தக்கவைப்பதற்கான ஓட்டம்

கவிதை: யாது எம் ஊரே...

எல்லா நிச்சயமின்மைகளுக்கும்

தான் மட்டும் காரணமில்லையென

பெருகித்திளைக்கும்

பெருந்தொற்று வெப்பம் தாளாது

பிரிந்துபோய்க்கொண்டிருக்கிறார்கள்

எல்லோரையும் அரவணைக்கும்

சென்னைத்தாயின்

கண்ணீர்த்துளிகளாக...