பிரீமியம் ஸ்டோரி

சிறப்புப் பரிசு குக்கர்

தாய்மை

மண்டிக் கிடந்த
புதர்ச்செடியை வெட்டி வீச
அரிவாளை ஓங்கிய நான்,
அசையாமல் அப்படியே நின்றேன்...
அழகான கூட்டில்
ஐந்தாறு குஞ்சுகளுக்கு
இரையூட்டி மகிழ்கிறது தாய்க்குருவி
இரை கொடுத்து முடித்து
எனை அண்ணாந்து பார்த்த அதன் கண்களில்
இன்னும் கொஞ்சநாள் எனும் கெஞ்சல் தெரிய
மெள்ள நழுவி விழுந்தது
என் கைகளிலிருந்த அரிவாள்.

- வ.வெற்றிச்செல்வி, வேதாரண்யம்.

கவிதைகள்

பரிசு ரூ.300

கடமை


லாக்டௌன் காலத்தில்
காலையில் எழ வைத்து
கடன்களை முடிக்க வைத்து
சாப்பிட அவசரப்படுத்தி
ஷூ எடுத்துக் கொடுத்து
டாட்டா காண்பித்து
வேலைக்கு அனுப்புவது
பெரும்பாடாய் இருக்கிறது
குழந்தைகளுக்கு
அப்பா அம்மாக்களை!

- ஆர்.பிரீத்தி ஏஞ்சல், தஞ்சாவூர்.

****

பரிசு ரூ.300

நம்பிக்கை

கவிதை அனுப்பும்போதே
வங்கிக் கணக்கு எண்ணையும்
சேர்த்து அனுப்புவது.

- கி.சரஸ்வதி, ஈரோடு.

கவிதை படைப்பவரா நீங்கள்..?

உங்கள் எண்ணங்களை வார்த்தை வண்ணங்களாக்கி எழுதி அனுப்புங்கள்...

பிரசுரமாகும் கவிதைகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு! சிறந்த கவிதைக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: கவிதைகள், அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு