Published:Updated:

கவிதை: மணல்ச் சிற்பம்

மணல்ச் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
மணல்ச் சிற்பம்

கலாப்ரியா

கவிதை: மணல்ச் சிற்பம்

கலாப்ரியா

Published:Updated:
மணல்ச் சிற்பம்
பிரீமியம் ஸ்டோரி
மணல்ச் சிற்பம்

சிற்பி கல்லைத் தேர்வதுபோல

வாகான மணலைத்

தேர்ந்தெடுக்கிறான்

மணற் சிற்பக் கலைஞன்

அவனது சின்ன மூளைக்குள்

சிந்திக்கும் கருவிற்கேற்பக்

குழைந்து குவிகிறது

சிறுமலையென ஈர மணல்

கவிதை: மணல்ச் சிற்பம்

கடலிலிருந்தும்

காண்பவர்களிடமிருந்தும்

பாதுகாப்பான தூரத்தில்

சுத்தியலின் தேவையின்றி

உருவாகிறது சிற்பங்கள்

வந்து பார்த்து ரசித்து

அப்படியே கரையளந்து

கால் நனைக்க வருகிறவர்களிடம்

எங்களுக்கு அந்தச் சிற்பங்கள்

முகம் காட்டுவதுமில்லை

முழுதாய்ப் பார்க்க நேரமுமில்லை

குழந்தைகளின் காலடித்தடங்களைக்

காப்பாற்றும் வேலையில்

அலைகளைக் கட்டுப்படுத்துவதே

பெரும்பாடாக இருக்கிறது

சொல்லிச் சொல்லி அலுக்கிறது

அலை கடல்