Published:Updated:

ஈரநிலம்! - கவிதை #MyVikatan

விகடன் வாசகர்

கருமேகம் பொழிந்த மழைத்துளியாய் நினைவு உயிர்பெறுகிறது.

ஈரநிலம்
ஈரநிலம்

கனவெல்லாம் செண்பகபூக்களாய் மலர்கிறது

கருமேகம் பொழிந்த மழைத்துளியாய் நினைவு உயிர்பெறுகிறது

பாத்திரம் நிரம்பி நுரை பொங்கி வழிந்த பாலின் வாசம் நினைவின் முதல்

வரிசையில் நிற்கிறது

வீடு முழுதும் நிலக்கடலையை பரப்பிய நேரங்கள் வாசல் முழுதும் நெற்

குவியலை குவித்த தருணங்கள் பசுமையாய் இருக்கிறது

ஆலை கரும்பை கடித்து உரித்த பல்லின் வலி உயிர் பெறுகிறது

முன்று தலைமுறையாய் நின்று கொண்டே இருக்கும் தேக்கு மரத்தின் உயரம்

குறைந்துவிடவில்லை

வாய்க்கால் ஓரம் மட்டும் வளர்ந்து நிற்கும் பச்சை புற்களை நோக்கி

மட்டும் தன் மேய்ச்சலை திருப்பும் செவலை மாடும் அதன் வெள்ளை கன்றும்

கத்திக்கொண்டே இருக்கிறது

உயரமான தென்னை மரங்கள் உதிர்த்துகொண்டே இருக்கிறது தனது காய்ந்த

செக்கு மட்டைகளைப் பெருத்த சத்தத்துடனே

மழையும் மண் வாசமும் வீசும் பெருங்காற்றால் நெருங்கி வருகிறது

பற்பசையும் பாக்கெட் பாலுடன் துவங்கும் தினசரி வாழ்வு

இரவு வாட்ஸ்அப்பை லாக்அவுட் செய்வதுடன் முடிகிறது

ஈரநிலத்தின் நினைவுகளோடு

உயிர்வேதியியல் ரசாயன உணவுகளோடு கரைகிறது வாழ்வு

கனவெல்லாம் செண்பகப்பூக்களாய் மலர்கிறது

கருமேகம் பொழிந்த மழைத்துளியாய் நினைவு உயிர்பெறுகிறது

பாத்திரம் நிரம்பி நுரை பொங்கி வழிந்த பாலின் வாசம் நினைவின் முதல்

வரிசையில் நிற்கிறது

Representational Image
Representational Image

வீடு முழுதும் நிலக்கடலையை பரப்பிய நேரங்கள் வாசல் முழுதும் நெற்

குவியலை குவித்த தருணங்கள் பசுமையாய் இருக்கிறது

ஆலை கரும்பை கடித்து உரித்த பல்லின் வலி உயிர் பெறுகிறது

முன்று தலைமுறையாய் நின்றுகொண்டே இருக்கும் தேக்கு மரத்தின் உயரம்

குறைந்துவிடவில்லை

வாய்க்கால் ஓரம் மட்டும் வளர்ந்து நிற்கும் பச்சை புற்களை நோக்கி

மட்டும் தன் மேய்ச்சலை திருப்பும் செவலை மாடும் அதன் வெள்ளைக் கன்றும்

கத்திக் கொண்டே இருக்கிறது

உயரமான தென்னை மரங்கள் உதிர்த்துக் கொண்டே இருக்கிறது தனது காய்ந்த

செக்கு மட்டைகளைப் பெருத்த சத்தத்துடனே

மழையும் மண் வாசமும் வீசும் பெருங்காற்றால் நெருங்கி வருகிறது

பற்பசையும் பாக்கெட் பாலுடன் துவங்கும் தினசரி வாழ்வு

இரவு வாட்ஸ்அப்பை லாக்அவுட் செய்வதுடன் முடிகிறது

ஈரநிலத்தின் நினைவுகளோடு

உயிர்வேதியியல் இராசயன உணவுகளோடு கரைகிறது வாழ்வு

- கணேஷ்

MyVikatan
MyVikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/