Published:Updated:

"இத்தகைய விருது கிடைத்து 40 வருஷம் ஆகிவிட்டது" - `செவாலியே' விருது பெறும் காலச்சுவடு கண்ணன்

காலச்சுவடு கண்ணன்

இந்திய பதிப்புச் சூழலுக்கும், பிரெஞ்சு பதிப்புச் சூழலுக்கும் உள்ள உறவை மேம்படுத்தியதற்காக விருது கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பின்புலம். - கண்ணன்

"இத்தகைய விருது கிடைத்து 40 வருஷம் ஆகிவிட்டது" - `செவாலியே' விருது பெறும் காலச்சுவடு கண்ணன்

இந்திய பதிப்புச் சூழலுக்கும், பிரெஞ்சு பதிப்புச் சூழலுக்கும் உள்ள உறவை மேம்படுத்தியதற்காக விருது கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பின்புலம். - கண்ணன்

Published:Updated:
காலச்சுவடு கண்ணன்
பதிப்புத் துறையில் இந்தியா - பிரான்சு இடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக பிரான்சு நாட்டின் உயரிய விருதான 'செவாலியே' விருதை பெற்றிருக்கிறார் காலச்சுவடு கண்ணன். முக்கியமான தமிழ் நூல்களை தனது காலச்சுவடு பதிப்பகத்தின் வழியே வெளியிட்டுவருகிறார் கண்ணன். கடந்த 27 வருடங்களாக இந்த பணியைச் செய்துவரும் அவரிடம் இந்த விருது குறித்துப் பேசினோம்.

"பதிப்பாளர் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சியே. இந்தியாவில் ஒரு பதிப்பாளருக்கு இத்தகைய விருது கிடைத்து 40 வருஷம் ஆகிவிட்டது. என்னிடம் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை. எதையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து நல்ல படைப்புகளை கொண்டு வருவது தான் என் பணியாக இருந்தது. என்னிடம் இந்த விருது அளிப்பதற்கு முன்னால் எந்தத் தகவலும் கேட்டுப் பெறவில்லை. ஒரு ஈமெயில் மூலம் அறிவித்தார்கள். செப்டம்பர் அல்லது அக்டோபரில் டெல்லியில் பிரஞ்சு தூதர் வீட்டில் வைத்து விருது வழங்கும் நிகழ்ச்சி இருக்கும் என்றார்கள். பிரெஞ்சு அதிபரின் பெயரால் இந்த விருது தரப்படுகிறது. இந்தியாவில் வேறு வேறு துறைகளில் இருக்கிற ஒருவருக்கு தருகிறார்கள். இம்முறை எனக்கு அளித்திருக்கிறார்கள்.

காலச்சுவடு கண்ணன்
காலச்சுவடு கண்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் நெடு நாட்களாக பிரெஞ்சு பதிப்பு துறையினரிடம் தொடர்பில் இருக்கிறேன். பாரீசுக்கு போய் அங்குள்ள பதிப்பாளர்களோடு உரையாடி இருக்கிறேன். பிரெஞ்சு புத்தகங்களை தமிழில் பதிப்பித்திருக்கிறேன். தமிழ் நூல்கள் பலவற்றை பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறேன். இந்திய பதிப்புச் சூழலுக்கும், பிரெஞ்சு பதிப்புச் சூழலுக்கும் உள்ள உறவை மேம்படுத்தியதற்காக விருது கொடுத்திருக்கிறார்கள். இதுதான் பின்புலம். என் பதிப்புலக முயற்சிகளுக்கான அங்கீகாரம் என எடுத்துக் கொண்டேன். இதை ஒரு கௌரவமாக நினைத்துக் கொள்கிறேன்" என்றார் கண்ணன். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், மற்றும் தமிழ் இலக்கிய உலகத்தின் குறிப்பிட்ட ஆளுமைகளும் கண்ணனுக்கு பாராட்டுதலையும், அன்பையும் தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகள் கண்ணன்.