Published:Updated:

முற்போக்கு எழுத்தின் முகம்!

டி.செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டி.செல்வராஜ்

பா.ஆனந்தகுமார்

முற்போக்கு எழுத்தின் முகம்!

பா.ஆனந்தகுமார்

Published:Updated:
டி.செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
டி.செல்வராஜ்

லரும் சருகும்' நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்குப் பரவலான அறிமுகத்தைப் பெற்ற டி.செல்வராஜ், நெல்லை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள தென்கலம் என்னும் சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த டி.செல்வராஜின் மூதாதையர்கள், தேவிகுளம், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் கங்காணிகளாக இருந்தனர். கல்லூரியில் படிக்கின்ற காலகட்டங்களில் இடதுசாரி அரசியல் இயக்கத்தோடு தொடர்புகொண்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோழர்ப.ஜீவானந்தத்திற்கு நெருக்கமாக இருந்த டி.செல்வராஜ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வார இதழான ‘ஜனசக்தி’யில் சில காலம் பணியாற்றினார்.

முற்போக்கு எழுத்தின் முகம்!
முற்போக்கு எழுத்தின் முகம்!

அந்த இதழில்தான் அவரது முதல் சிறுகதை வெளியானது. ‘இடதுசாரி இயக்கச் சார்புடைய இளம் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்ந்தார்’ என்று செக் நாட்டுத் தமிழறிஞர் கமில்சுவலபில் தனது ‘தமிழிலக்கிய வரலாறு’ நூலில் குறிப்பிட்டுள்ளார். டி.செல்வராஜ் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது யுகசங்கமம், பாட்டு முடியும் முன்னே ஆகிய இரண்டு நாடகங்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் இடதுசாரி இயக்க மேடைகளில் அரங்கேற்றப்பட்டன.

தமிழில் தொழிலாளர் வாழ்க்கையினை முதன்முதலில் படம் பிடித்துக்காட்டிய நாவல், தொ.மு.சி ரகுநாதனின் `பஞ்சும் பசியும்.' தமிழில் வெளிவந்த முதல் சோஷலிச எதார்த்தவாத நாவல் அது. இதனை அடியொற்றி, தொழிலாளர்களின் போராட்ட வாழ்க்கையினைச் சித்திரித்துக் காட்டிய நாவல் டி.செல்வராஜின் `மலரும் சருகும்.' இந்நாவல் நெல்லை மாவட்டத்தில் இந்திய விடுதலைக்குப் பின் நடைபெற்ற ‘கள்ளமரக்கால்’ ஒழிப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நிலத்தொழிலாளர் வர்க்கத்தின் எழுச்சியைக் காட்டியுள்ளது. இதன் பின்னர் தேவிகுளம், பீர்மேடு, மூணாற்றில் வாழும் காபி, தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை இன்னல்களையும் போராட்டத்தினால் ஏற்பட்ட மாற்றங்களையும் `தேநீர்' நாவல் வாயிலாக டி.செல்வராஜ் எடுத்துக்காட்டியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திண்டுக்கல் நகரத்திலுள்ள தோல் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாழ்க்கையினை எடுத்துக்காட்டும் விதமாக வெளியான அவரது ‘தோல்’ நாவல், சாகித்ய அகாடமி விருது பெற்றது.

80 வயதைக் கடந்தும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர் அவர். அண்மையில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கைப் பின்புலத்தில் தமிழகத்தின் சுற்றுச்சூழல் அழிவினை `அடுக்கம்' எனும் பெயரில் நாவலாக்கியுள்ளார். இந்நாவல் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் வெளியீடாக விரைவில் வெளிவரவுள்ள நிலையில் மறைந்திருக்கும் டி.செல்வராஜ், தமிழக முற்போக்கு இலக்கிய வரலாற்றில் என்றும் வாழ்வார்.