Published:Updated:

ராபர்ட் கால்டுவெல்: தமிழின் வேர்தேடி சென்னையிருந்து நெல்லைக்கு நடந்துசென்ற அயர்லாந்து அறிஞர்!

1814 மே 7-ஆம் தேதி அயர்லாந்தில் பிறந்தவர் கால்டுவெல். ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு வருகிறார் கால்டுவெல்.

ராபர்ட் கால்டுவெல்லைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? பெயரையே கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா! கடந்த இரண்டு நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் திராவிடம் என்ற கருத்தாக்கம் பேசப்பட்டு வருகிறது, கடந்த அரை நூற்றாண்டாகத் திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த திராவிடம் என்ற கருத்தாக்கம், அதனடிப்படையிலான அரசியலுக்கு முன்னோடியாக விதைவிதை்தவராக இருந்த ஒருவரைப் பற்றி அவசியம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்தான் கால்டுவெல், ஒரு அயர்லாந்து அறிஞர்.

ராபர்ட் கால்டுவெல்
ராபர்ட் கால்டுவெல்

1814 மே 7-ம் தேதி அயர்லாந்தில் பிறந்தவர் கால்டுவெல். ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு, குறிப்பாகத் தமிழகத்திற்கு வருகிறார் கால்டுவெல். தமிழகம் வந்த கால்டுவெல்லுக்கு 18 மொழிகள் தெரியும். இங்கு வந்து தமிழ் மொழியையும் கற்க விழைகிறார் கால்டுவெல். தமிழ்மொழியைக் கற்கும்போது, அதனுடைய அழகு, அதனுடைய செழுமை, அதனுடைய தொன்மை மற்றும் அதனுடைய இலக்கிய வளம் ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார் கால்டுவெல். தொடர்ச்சியாகத் தமிழ் மொழியைக் கற்கும்போது தமிழ்மொழியின் வேர் எங்கிருக்கிறது என்பது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார் கால்டுவெல்.

தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சியின்போதுதான் சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு நடந்தே செல்கிறார். இடையே திருச்சி, சிதம்பரம், நாகப்பட்டினம், நீலகிரி எனப் பல ஊர்களுக்கு நடைப்பயணமாகச் சென்று திருநெல்வேலியைச் சென்று சேர்கிறார். அப்படிப் பயணம் செய்த பல இடங்களிலும் அந்த மக்களுடைய வட்டார வழக்கு, அந்த மக்களுடைய வாழ்க்கை, அவர்களது தொழில், அவர்களுடைய பொருளாதாரம், அவர்களுடைய சடங்குகள், நம்பிக்கைகள், மதவழிபாடுகள் ஆகியவற்றைப் பற்றி முழுமையாத் தெரிந்து கொள்கிறார். அதன் பிறகே திருநெல்வேலி அருகேயுள்ள இடையன்குடி என்கிற இடத்தைச் சென்று சேர்கிறார் கால்டுவெல்.

கால்டுவெல்லையும், தமிழகத்தில் அவர் என்ன பணி செய்தார் என்பதையும் விரிவாகத் தெரிந்து கொள்ளக் கீழே இருக்கும் காணொளியைப் பாருங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு