Published:Updated:

கனவுதல்

ரொபெர்ட்டோ பொலனோ
பிரீமியம் ஸ்டோரி
ரொபெர்ட்டோ பொலனோ

ரொபெர்ட்டோ பொலனோ

கனவுதல்

ரொபெர்ட்டோ பொலனோ

Published:Updated:
ரொபெர்ட்டோ பொலனோ
பிரீமியம் ஸ்டோரி
ரொபெர்ட்டோ பொலனோ

தமிழாக்கம்: ஆதிரன்

மூன்று வயதான ‘ஜார்ஜ் பெரக்’ எனது வீட்டிற்கு வந்ததாகக் கனவினேன்.அணைத்துக்கொண்டேன். முத்தமிட்டேன் ‘எவ்வளவு இனிமையானவர்’ என்றேன்.

நாம் இன்னும் முடிக்கவில்லை தந்தையே. வெந்தும் வேகாமலும் இருக்கிறது. பெரும்பரப்பிலான முடிவற்ற இந்தக் குப்பைக்குள் தொலைந்ததுபோல அலைவதும் மேலும் வழிதவறிப்போவதுமாக, கொல்லுவதும் மன்னிப்பு கேட்பதுமாக. உன் கனவில் கிறுக்குத்தனமான அழுத்தம் தந்தையே. உன் கனவிற்கு எல்லையே இல்லை… உருவி எடுத்தோம் ஆயிரம் முறை, லத்தீன் அமெரிக்கத் துப்பறிவாளர்கள் துலக்கமும் கலக்கமும் கொண்டதொரு சிக்கலில் தொலைவதுபோல, மழையில் பயணம் செய்துகொண்டும், வயதானவர்கள் ‘புயல்.. புயல்’ எனக் கத்தும் திரைப்படங்களைப் பார்த்துக்கொண்டும். விசயங்களை அவற்றைப் பார்க்காமலேயே கடைசி முறையாகக் கவனித்துக்கொண்டும், பிசாசுகளைப்போல, கிணற்றின் அடியினில் இருக்கும் தவளைபோல, தந்தையே… உனது உட்டோப்பியக் கனவின் துயரத்தில் தொலைவது… பல வகையான உனது ஒலிகளுக்குள். உனது பேராழத்துக்குள். பித்துப்பிடித்த அழுத்தங்களாலான நரகத்தின் எல்லையற்ற அறையில் சமைத்துக்கொண்டிருக்கும் உன் நகைப்புக்குள்.

கனவுதல்

ன்னும் முடியவில்லை. வெந்தும் வேகாமலும் இருக்கிறது. சூராவளியை சமாளிக்கும் திறன் இரு துருவங்களுக்கு.

ந்தையே… இந்தச் சிதிலங்களில் இருப்பதெல்லாம் உனது சிரிப்பின் தொல்லியல் எச்சங்கள் மட்டுமே.

நாம்… எந்த நம்பிக்கையும் அற்று. எந்த பயமும் அற்று.

பிறகு யாரோ ஒருவர் சொன்னார்:

துணிவு என்பது நினைவுகளின் சகோதரி

அதுபற்றி பேசவேண்டியதில்லை

பயத்தை ஆள்பவன் எப்போதும் தைரியசாலி

நடனமாடலாம்

இந்த இரவு கடந்துகொண்டிருக்கும்போது

பூதாகரமான காலணிப் பெட்டிபோல

மேல்தளத்தில், மலையின் உச்சியில்

யதார்த்தத்தின் மடிப்பில், வாய்ப்பில்

கருணை என்பது ஒரு விலக்கல்ல.

லத்தீன் அமெரிக்கத் துப்பறிவாளர்களின்

நிலையற்ற பிரதிபலிப்புகளின் மீது

நடனமாடலாம்

நமது முகங்களைப் பிரதிபலிக்கும்

மழைக்குட்டையில்

ஒவ்வொரு பதின்ம வருடத்திலும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கனவுதல்

டுத்து ‘அலோன்சோ தே எர்சிலா’வின் அடுக்கு வீட்டிற்குச் செல்வதாகக் கனவினேன். எனக்கு அறுபது வயது. நோயினால் உடைந்திருந்தேன்.(உண்மையில் துண்டு துண்டாகச் சிதறியிருந்தேன்). எரிசிலாவிற்கு தொன்னூறு வயது. தாராளமாய் அகன்ற படுக்கையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். அந்த வயதான மனிதர் அற்பமாக எனைக் கவனிக்கிறார். பின் என்னிடம் ஒரு குவளை மதுவைக் கேட்கிறார். நான் மதுவைத் தேடுகிறேன். தேடித் தேடி நான் கண்டுபிடிக்க முடிந்தது வாகனம் ஓட்டும்போது அணியும் மேலாடையை மட்டுமே.

நியூயார்க்கின் பலகை நடைமேடையில் நடந்துகொண்டிருப்பதுபோலக் கனவினேன். தூரத்தில் என்னால் ‘மனுவேல் ப்யூக்’ஐ காண நேர்ந்தது. வான நீலத்தில் சட்டையும் சலவைக்கு உகந்த இலகுவான காற்சட்டையும் அணிந்திருந்தார். சூழல் சார்ந்து வெளிர் நீலமாகவோ அல்லது அடர் நீலமாகவோ.

மேக வடிவில் நியூயார்க் வானத்தில் ‘மெசடியனோ ஃபெர்னாண்டஸ்’ தோன்றியதுபோலக் கனவினேன். மூக்கும் இல்லாமல் காதும் இல்லாமல் ஆனால் கண்கள் மற்றும் வாயுடன் மேகம்.

ப்ரிகன் சாலையில் நின்றுகொண்டிருந்தபோது சட்டென்று மெக்சிகன் சாலையாக மாறுவதுபோலக் கனவினேன்.

ரு மதியத்தில் அவர்கள் எனது கதவை இடிப்பதுபோலக் கனவினேன். பனி பொழிந்துகொண்டிருந்தது. என்னிடம் அடுப்போ அல்லது பணமோ இல்லை. மின்சாரத்தைத் துண்டித்துவிடுவார்கள் என நினைத்தேன். மாறாகக் கதவின் மறுபக்கம் யார்? ஒரு போத்தல் ஒயின், சிறு பையில் உணவு மற்றும் பெயர் தெரியாத பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பணவிடையுடன் ‘என்ரிக் லின்’.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரொபெர்ட்டோ பொலனோ: சிலியின் சாண்டியாகோவில் ஏப்ரல் 1953-ல் பிறந்தார். கவிஞராக, சிறுகதை எழுத்தாளராக நாவலாசிரியராக இந்த நூற்றாண்டின் செம்மையான ஸ்பானிய எழுத்தாளராகத் தம்மை உருவாக்கிக்கொண்டார். சிலி, மெக்சிகோ, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் தன் வாழ்நாள்களைக் கழித்தார். நீண்டகாலக் கல்லீரல் பாதிப்பின் விளைவாக, ஜூலை 2003-ல் காலமானார். 11 பெரும் மற்றும் குறுநாவல்கள், நான்கு சிறுகதைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள் இவரது பங்களிப்பு. “நாவலாசிரியர் என்பதைவிடக் கவிஞர் என உங்களை எது நம்பவைக்கிறது?” என்கிற கேள்விக்கு, “கவிதை என்னை வெட்கப்படவிடுவதில்லை” என்றார்.

Georges Perec - பிரஞ்சு நாவலாசிரியர்

Alonso de Ercilla - ஸ்பானிய கவிஞர்

Manuel Puig – அர்ஜெண்டினா எழுத்தாளர். 

Macedonio Fernandez – அர்ஜெண்டினா எழுத்தாளர். 

Enrique Lihn - சிலிய கவிஞர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism