Published:Updated:

சாகித்திய அகாதமி விருது பெறும் தமிழின் 4-வது பெண் எழுத்தாளர் அம்பை பற்றிய சில குறிப்புகள்!

அம்பை
News
அம்பை

1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான அம்பைக்கு, 2021-ம் ஆண்டு தமிழ்மொழிக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கப்படுகிறது.
சாகித்ய அகாதமி  விருது
சாகித்ய அகாதமி விருது

1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுவரும் நிலையில், இதுவரையிலான விருதாளர்களில், ராஜம் கிருஷ்ணன் (1973), லட்சுமி திரிபுரசுந்தரி (1984), திலகவதி (2005) ஆகியோரைத் தொடர்ந்து, இந்த விருதைப் பெறும் நான்காவது பெண் எழுத்தாளர் அம்பை ஆவார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சி.எஸ். லஷ்மி என்ற இயற்பெயர் கொண்ட அம்பை, 1944-ல் கோயம்புத்தூரில் பிறந்தார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் இளங்கலைப் படிப்பும், பெங்களுரூவில் முதுகலைப் படிப்பும் கற்ற அம்பை, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வை முடித்தார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியராகவும், கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியவர், திரைப்பட இயக்குநர் விஷ்ணு மாத்தூரைத் திருமணம் செய்துகொண்டார்.

அம்பை
அம்பை

அம்பையின் இலக்கியச் செயல்பாடு, 1960-களில் அவருடைய பதின்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. ‘நந்திமலைச் சாரலிலே’ என்ற நூலின் மூலம் எழுத்துலகில் நுழைந்த அம்பையின் முதல் தீவிர இலக்கிய ஆக்கம், 1966-ல் ‘அந்திமழை’ என்ற பெயரில் வெளிப்பட்டது. 1967-ல் ‘கணையாழி’ இதழில் வெளியான ‘சிறகுகள் முறியும்’ சிறுகதை அம்பையின் வருகையை அறிவித்தது. 1976-ல் இதே பெயரில், அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி வெளியானது. 1988-ல் வெளியான அம்பையின் இரண்டாவது சிறுகதைத் தொகுதி ‘வீட்டில் மூலையில் சமையலறை’ தவிர்க்க முடியாத இடத்துக்கு அவரைக் கொண்டுசென்றது. தமிழின் முக்கியச் சிறுகதையாசிரியராக அம்பை உருவெடுத்தார். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியாக, தமிழ் நவீனப் பெண்ணிலக்கியத்தில் அம்பை உருவாக்கிய தடம் அழுத்தமானது.

விருது பெற்ற அம்பையின் புத்தகம்
விருது பெற்ற அம்பையின் புத்தகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அம்பையின் ‘காட்டில் ஒரு மான்’ நூல், லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கிறது. இந்திய மொழிகளில் புனைவு மொழிபெயர்ப்புக்கான Vodafone Crossword Book Award-ஐ லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராமுடன் இணைந்து 2016-ல் பெற்றார் அம்பை. தமிழிலக்கியத்துக்கான அம்பையின் பங்களிப்புகளுக்கான, கனட இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2008-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

அம்பை
அம்பை

‘SPARROW' (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டுவரும் அம்பை, டாக்டர் சி. எஸ். லக்ஷ்மி என்ற தன்னுடைய இயற்பெயரில் ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

தமிழ்ப் பெண்ணெழுத்தின் முகங்களில் ஒருவரான அம்பைக்கு, இந்த ஆண்டுக்கான தமிழ் மொழியின் சாகித்திய அகாதமி விருது, தமிழின் இளம் பெண் எழுத்தாளர்களுக்கு மிகப் பெரிய உந்துதலாக அமைந்திருக்கிறது!