Published:Updated:

சாகித்ய அகாடமி: எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியத்திற்கு யுவபுரஸ்கார் விருது!

யுவபுரஸ்கார் விருது பெற உள்ள எழுத்தாளர் கார்த்திக்

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சாகித்ய அகாடமி: எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியத்திற்கு யுவபுரஸ்கார் விருது!

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் யுவபுராஸ்கார் விருது குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Published:Updated:
யுவபுரஸ்கார் விருது பெற உள்ள எழுத்தாளர் கார்த்திக்

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 24 மொழிகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் மொழி பிரிவில் 2021-ம் ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற உள்ளார். இவர் எழுதிய நட்சத்திரவாசிகள் என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. விருதுக்கான பதக்கமும் ரூ.50,000 பரிசுத் தொகையும் சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும்.

யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு
யுவபுரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு

கார்த்திக் பாலசுப்பிரமணியன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜபாளையத்தை சேர்ந்த இவர், சென்னையில் மென்பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது நாவலின் களமும் ஐ.டி துறையைச் சார்ந்ததே. இது இவரின் முதல் நாவல். இதற்கு முன்' டொரினோ' என்கிற சிறுகதை தொகுப்பு வெளியாகி இருந்தது. இணைய இதழ்களில் தொடர்ச்சியாக கதைகள் எழுதி வரும் கார்த்திக், 'ஒளிரும் பச்சை கண்கள்' என்கிற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டு உள்ளார்.

2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் அம்பை அவர்களுக்கும், பாலபுரஸ்கார் விருது மு.முருகேஷ் அவர்களுக்கும் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், யுவபுரஸ்காருக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism