Published:Updated:

துரோகம்! – சிறுகதை #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

நானும், என் மாமாவும், கையில் நிறைய துணிகளும், உணவுப்பண்டங்களும் எடுத்துக்கொண்டு, ஆதரவற்றோர் இல்லத்தை நோக்கிச் சென்றோம்.

என் பெயர் ஆனந்த். எனக்கு 21 வயது. மேகமூட்டத்துடன் காணப்பட்ட ஒரு நாளில், நானும், என் மாமாவும், மழை பெய்து நனைந்து இருந்த தெருவில் நடந்து சென்றோம். அந்த இடத்தில், பறவைகளின் பாட்டுச் சத்தம் கேட்டு, பட்டாம்பூச்சிகள் தன் சிறகுகளை அடித்துப் பறந்துகொண்டிருந்தன.

Representational Image
Representational Image

நானும், என் மாமாவும், கையில் நிறைய துணிகளும், உணவுப்பண்டங்களும் எடுத்துக்கொண்டு, ஆதரவற்றோர் இல்லத்தை நோக்கி சென்றோம். நானும் என் மாமாவும், ஆதரவற்றோர் இல்லத்தை நெருங்கியபோது, ஒரு வயதான பாட்டி சத்தமாக அழுதுகொண்டிருந்தாள். பாட்டி வயது 65-க்கு மேலிருக்கும். முடி முழுவதும் வெள்ளையாக மாறி இருந்தது. நான் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றால், அந்தப் பாட்டியிடம் சிறிது நேரம் பேசுவேன். அதேபோல், அன்றும் நான் பேசும்பொழுது, என் மாமா என்னை பேசக் கூடாது என்று வற்புறுத்தினார். நான் அதைக் கேளாமல், பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தேன். என் மாமா துணிகளையும், உணவுப்பண்டங்களையும், எல்லோருக்கும் கொடுக்கும்படி, ஆதரவற்றோர் இல்லத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கொடுத்தார். அன்று குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது, அங்கிருந்த தோட்டம் முழுவதும், பச்சை பசேலென காட்சி கொடுத்தது. தென்றல் காற்றும் ஜோராக அடித்துக்கொண்டிருந்தது.

நான் எப்பொழுதும் பேசும், அந்தப் பாட்டியிடம் பேசும்பொழுது இந்தமுறை பாட்டி என்னிடம் பேச மறுத்தாள். நான் பாட்டியிடம், உங்களுடன் பேச எனக்கு வயது மற்றும் அனுபவம் இல்லை என்றாலும், எனக்கு உங்களிடம் பேச பிடித்திருக்கிறது என்றேன். பாட்டியின் முகம் சிறிது மலர்ந்ததுபோல் காட்சியளித்தது. சற்று நேரத்துக்குப் பிறகு, பாட்டி சிரித்த முகம் என்னை நோக்கித் திரும்பியது. பாட்டி என்னிடம், உனக்கு நான் இன்று ஒரு கதை கூறுகிறேன் என்று ஆரம்பித்தாள்.

Representational Image
Representational Image

அந்தத் தோட்டத்தில் பறவைகளின் பாட்டுச் சத்தம் ஒலித்துக்கொண்டிருந்தது. அது சற்று மௌனம் அடைந்தது. தவளைகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. காற்றில் அசையும் செடிகளின் சத்தம், பாட்டியின் கதை கேட்க ஆர்வமாக இருந்தது. அந்தப் பாட்டி கதையைச் சொல்லத் தொடங்கினாள். என் பெயர் வள்ளி. நான் திருநாவுக்கரசு என்பவரை திருமணம் செய்துகொண்டேன். எங்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எங்களின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் நகர்ந்துகொண்டிருந்தது. நானும், என்னுடைய கணவரும், என் பிள்ளையிடம் ஒரு நல்ல நண்பனாகவே பழகிவந்தோம். என் பிள்ளையின் பெயர் வினோத். எங்களின் வாழ்க்கை காலங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டே சென்றது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியில் சந்தோஷமாக சுற்றி வலம் வருவோம். என் கணவர், என்னை திரைப்படங்களுக்குக் கண்டிப்பாக அழைத்துச் செல்வார். காலங்கள் வேகமாகச் சென்றதால், வினோத்துக்கு கல்யாணம் வயது ஆகி விட்டிருந்தது என்று நாங்கள் அறிந்தோம். பிறகு, வினோத்துக்கு நல்ல பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து வைத்தோம். என் மருமகள், எங்களை அவர்களுடைய பெற்றோர்களாகப் பார்க்கவில்லை. எங்கள் பிள்ளையை எங்களிடமிருந்து அவள் பிரிக்க ஆரம்பித்தாள். இருந்தாலும், என் பிள்ளை வினோத் எங்களை விட்டுக் கொடுப்பதாக இல்லை. அவனுக்கு என் மேல் மிகுந்த அன்பு இருந்தது.

வயது கடந்ததும், எல்லோருக்கும் வரும் நோய்போல் என் கணவருக்கு மூச்சுத் திணறல் நோய் வர ஆரம்பித்தது. எங்கள் மருமகள், ஒருநாள் பெரிய பிரச்னை உண்டாக்கினாள். வினோத், அவளை அடித்தும், திட்டியும் அடக்கி வைத்தான். அவள் திருந்திய பாடில்லை, தற்கொலை முயற்சி மேற்கொண்டாள். நாங்கள் எல்லோரும், அவளைக் காப்பாற்றினோம். அதன்பிறகு வினோத்தின் நடவடிக்கை மாறத் தொடங்கியது. அன்று ஒரு நாள், எனக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது. அதனால், நான் கோயிலுக்குச் சென்றேன். கோயிலிலிருந்து திரும்பி, என் வீட்டுக்கு வந்த பொழுது என் கணவர் இறந்து கிடப்பதை நான் பார்த்தேன். எனக்குச் சொல்ல முடியாது துக்கம் மனதில் ஏற்பட்டது.

Representational Image
Representational Image

சில நாள்களுக்குப் பிறகு, ஒரு நாள் எனக்குப் பிடித்தமான ஒரு புத்தகத்தில், ஒரு கடிதம் இருப்பதைக் கண்டேன். அந்தக் கடிதத்தில், என் கணவர் எழுதியிருந்தார். அது என்னவென்றால், `வினோத்தும் அவனின் மனைவியும் உன்னை பணத்துக்காக கொலை செய்ய இருக்கிறார்கள். நீ தப்பித்துக் கொள்' என்று அதில் எழுதியிருந்தது. இதைப் படித்ததும், எனக்குப் பயங்கரமான அதிர்ச்சி உண்டானது. அதன்பின், இரண்டு வருடங்கள் நான் ஒரு வேலைக்காரியாக, அந்த வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தேன். ஆனால், எனக்கு ஒரே சந்தோஷம், என் பேரப்பிள்ளையிடம் விளையாடுவது மட்டும்தான். என் பேரப்பிள்ளை, எப்போதும் என் கூடவே இருப்பான்.

ஒருநாள், என் பிள்ளையும், மருமகளும், என்னிடம் ஒரு வெற்றுக் காகிதத்தில் கையொப்பம் பெற்றனர். பிறகு, சில நாள்கள் கடந்தது. ஒரு நாள் மாலை வேளையில், நான் தனியாக அமர்ந்து சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது, என் பேரப்பிள்ளையை என் மருமகள் அடித்துக்கொண்டிருந்தாள். நான் அதைக் கேட்டு, அவளிடம் சண்டையிட்டு, என் பேரப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வந்தேன். கொஞ்சம் நேரம் சென்றதும், என் தலையின் பின்பகுதியில் செங்கல் வைத்து, யாரோ அடித்ததுபோல் இருந்தது. அதன் பிறகு, நான்கு வருடங்கள் நான் கோமாவில் இருந்தேன். என்னை, என் பிள்ளையும், என் மருமகளும், இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டுவந்து சேர்த்துவிட்டார்கள். இப்படி அந்தப் பாட்டி பேசிக் கொண்டிருக்கையில், அங்கு வேலை செய்பவர் பாட்டியை கூப்பிட்டுச் சென்றுவிட்டார். என்னை விட்டு பாட்டி நகர்ந்து சென்றாள்.

Representational Image
Representational Image

தோட்டத்தில் இருந்த பறவைகள், மெதுவாக பாடத் தொடங்கின. என்னுடைய மாமா, என்னை ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அழைத்துச் சென்றார். தவளைகளின் சத்தம் நின்றது. மழை ஜோராக பெய்யத்தொடங்கியது. நான் வானத்தைப் பார்த்துக் கொண்டே நினைத்தேன், அந்தப் பாட்டியின் கதையை, இந்த இயற்கையும் கேட்டுக்கொண்டிருந்தது என்று. அதன்பின், சில வாரங்கள் கழித்து, நான் ஆதரவற்றோர் இல்லத்துக்கு, உணவுப் பண்டங்கள் உடன் சென்றேன். பாட்டியின் பேரப்பிள்ளையை கண்டுபிடித்துக் கொண்டு அழைத்து வந்தேன். ஆசிரமத்துக்கு நாங்கள் நுழைந்ததும், இந்தப் பாட்டி, எப்பொழுதும் இருக்கும் இடத்தில் இல்லை. பிறகு, நான் அங்கே வேலை செய்பவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டேன். அந்தப் பாட்டி, அவளின் கணவருடன் படத்துக்குச் சென்றுள்ளார் என்று.

-வினோத் குபிரிக்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு