Published:Updated:

மயக்கம்! - த்ரில் சிறுகதை #MyVikatan

ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலை குறித்து விக்னேஷ், காவல் ஆய்வாளர் பழனிவேலிடம் தனக்கு நினைவிலிருந்தவற்றை ஒவ்வொரு காட்சியாக விளக்கினான்...

Representative Image
Representative Image

ரயில் நிலையத்தில் நடந்த பெண் கொலை குறித்து மனநல மருத்துவமனையிலிருந்து வந்த விக்னேஷ், காவல் ஆய்வாளர் பழனிவேலிடம் தனக்கு நினைவிலிருந்தவற்றை ஒவ்வொரு காட்சியாக விளக்கினான்...

காட்சி:1

விக்னேஷ் செல்போனில்...வினயா 

``ஹாய்டா, எங்க இருக்க? ஊர்ல இருந்து வந்தாச்சா? ”

``ஹூம்… இப்பதாண்டி வந்தேன்.”

``ஆபீஸ் கெளம்பணும்…?

`` அப்பாகிட்ட பேசிட்டியா? என்ன சொன்னார்?”

``என்ன சொல்றாரு...இன்னும் கொஞ்ச நாள் நா ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு...கடுப்பேத்திகிட்டு இருக்காரு”

``நீ இப்போ நல்லாதானடா இருக்க? உனக்கு முன்னமாதிரி ஏதும் மயக்கம்? யார்மேலையும் கோவம் வருதா?”

``சேச்சே…இப்போலாம் அப்டி ஏதும் எனக்குத் தோனல... நீதான் பாக்கறல்ல”

``அவரு ஓகே சொல்லவே இல்லன்னா?”

``கொஞ்சநாள் பாப்போம், சரிவரலன்னா நாம மேரேஜ் பண்ணிக்கிட்டு இங்கியே இருப்போம். அவருக்கு எப்போ தோணுதோ அப்போ வந்து பாக்கட்டும்”

``ஓகே பேபி... லவ் யூடா…”

``ஓகே, பாய்”

``அவ்ளோதானா? ச்சே… நீ சொல்லமாட்டியா?”

``என்ன?”

``லவ் யூ”

``அய்யோ… லவ் யூடி எரும. போன வச்சித்தொல எனக்கு லேட் ஆவுது”

``நானும் ஹாஸ்பிடல் கெளம்பணும் பாய்”

Representative Image
Representative Image

காட்சி:2

விக்னேஷ் செல்போனில்... வினயா

``ஹலோ...ஹ்ம்ம் சொல்லு”

``....”

``ஆபீஸ்ல…, இப்போ வெளிய வந்துட்டேன் சொல்லு”

``ஆபீஸ்ல வருணோட தொல்லை தாங்கமுடியல. இப்போகூட முன்னாடி வந்து வழியறான்”

``சரி நா பாத்துக்கறேன்.. நீ எப்பவும் போல இரு… என்ட்ட சொன்னதா காட்டிக்க வேணாம்”

``ஹ்ம்ம் ஓகே…, எங்க வெளிய இருக்கியா?”

``ஆமா கலெக்சனுக்கு வந்தேன்... பாய்”

காட்சி:3

விக்னேஷ் செல்போனில்... வினயா

``ஹ்ம்ம் சொல்லுடி..”

``நா ஈவினிங் ஊருக்கு கேளம்புறேண்டா..”

``என்னடி திடீர்னு?”

``தெரியல… வர சொன்னாங்க.. ரெண்டு நாள் லீவ்தான..  போயிட்டுவர வேண்டிதான். நீயும் என் தொந்தரவு இல்லாம ஜாலியா இருக்கலாம்ல!?”

``ச்சே... ரெண்டுநாள் நல்லா மிஸ் பண்ணப்போறேன்”

``அட... சும்மா நடிக்காதடா…”

``சரி இப்போ கொஞ்சம் வேல இருக்கு… அப்பறம் பேசலாம்… பாய்”

காட்சி:4

விக்னேஷ் செல்போனில்... வினயா

``ஹலோ...எங்க இருக்க?”

``ஒரு வேலையா வெளிய வந்துருக்கேன்ப்பா... எப்போ ஊருக்கு கெளம்புற?”

``தொ கெளம்ப வேண்டிதான்… நீ ஊர் சுத்திட்டு இருக்காத என்ன?”

``ஓகே பாத்து போயிட்டு வா…” என்று கூறிக்கொண்டே அந்த காபி ஷாப்பின் முன் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே செல்கிறான். உள்ளே சென்றவன் சட்டெனத் திகைத்து நின்றான். அங்கே வினயாவின் கையை வருண் பிடித்து இழுக்கவும், அவள் உதறிவிட்டு வெளியே கிளம்புகிறாள். இதைப் பார்த்த விக்னேஷ் கோபம் தலைக்கேறி அவனருகில் சென்று மிருகத்தனமாக அவனை உதைத்தான். வருண் சற்று நிலைகுலைந்து சரிந்தான். பின் அவன் எழுந்து தாக்க இருவரும் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தனர். இப்போது விக்னேஷ் வருணின் மேலிருந்துகொண்டு தாக்க அவனுடைய தலையில் ஓங்கி குத்துவிட அவன் நினைவிழந்தான். அவனது சட்டைப் பையிலிருந்த செல்போன் வெளியில் நழுவ, அதை எடுத்து தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறான். இப்போது விக்னேஷ் எழ முயல அவனது பின்மண்டையில் பலமான ஒரு அடி விழுகிறது. அவன் அப்படியே நிலைகுலைந்தபடியே திரும்ப… அங்கே ஒரு பெண்ணின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. அவன் அப்படியே மயங்கிச் சரிகிறான்.

காட்சி:5

விக்னேஷ் லேசாக கண்ணைத் திறக்க முயன்றான், சற்று கடினமாக இருந்தது. சில முயற்சிகளுக்குப்பின் திறந்தான். இடது கையில் ஊசி குத்தியதுபோல வலி இருந்தது. ``இப்போ எங்க இருக்கேன் தெரியலையே” என்று தனக்குள் முனங்கினான். அருகில் யாரும் இல்லை. பின் சற்று எழுந்து பார்த்தான். அப்போது தன் பேன்ட் பாக்கெட்டில் தட்டுபட்ட செல்போனை எடுத்து அதன் திரையை பார்க்கிறான். அதில் வினயாவின் எண்ணிலிருந்து ஒரு குருஞ்செய்தி…

அதைப் படித்தவுடன் பரபரப்பு தொற்றிக்கொண்டது அவனை. ``என்ன மெசேஜ் இது“ என்று அந்த குறுஞ்செய்தியின் விவரத்தை அறிந்துகொள்ள முனைந்தான். அந்த மயக்க நிலையிலும் சரசரவென நடந்தான். ``வினயா வொர்க் பண்ற ஹாஸ்பிடல் தான இது. அவ எங்க?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான்.

மயக்கம்! - த்ரில் சிறுகதை #MyVikatan

காட்சி:6

முன்புறம் இருந்த வரவேற்பறை பெண்ணிடம்...

``வினயா இருக்காங்களா?”

``நீங்க?”

``நா அவளோட ஃபிரெண்டு. எங்க அவ?”

``அவ இன்னிக்கி டே ஷிப்ட் தான்... பட் அஞ்சு மணிக்கெல்லாம் கெளம்பிட்டாளே”

```6:30 மணிக்கு தானே ஷிப்ட் முடியும்?”

``ஏதோ ஊருக்கு கெளம்புறதா சொன்னா, வீட்டுக்குப் போயிட்டு கெளம்பனும்னு சீக்கிரமா கெளம்பிட்டா ”

``ஓகே தாங்க்ஸ்” என்று கூறிவிட்டு வெளியேறினான்.

சற்று தூரத்தில் இருந்த காபி ஷாப்பின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை நிதானமற்ற நிலையில் அவசரமாக எடுத்தான். சட்டென முடுக்கவும் எதிரிலிருந்த தூணில் மோதி பைக்கின் முன்புற விளக்குகளில் ஒன்று முறிந்தது. அதைக் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி பைக்கை வேகமாக செலுத்தினான்.

காட்சி:7

விக்னேஷ் தெளிவற்ற நிலையில் தனது பைக்கை அந்த குறுகலான தெருவின் வழியே வேகமாக செலுத்தியவாறு `ச்சே என்ன தெரு இது... அந்த மூதேவி இங்கதான் தங்கியிருக்காளா ?“ என்று சலித்துக்கொண்டு அங்கிருந்த வீடுகளின் எண்களைப் பார்த்துக்கொண்டே வந்தான். ஒரு வீட்டின் எண்ணைப் பார்த்து நிறுத்தினான். அவன் கையிலிருந்த சிறு அட்டையை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டின் வாயிலில் நுழைந்து வண்டியை நிறுத்தினான். பைக்கின் முன்புறம் முறிந்து தொங்கிய விளக்கை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு வீட்டின் முன்பகுதிக்கு சென்றான் இடது கையில் லேசான வலி இருந்தது.

``ஹலோ... யாரு இருக்கீங்க?” என்று சத்தமாக கேட்க… ஒரு பெண் வெளிப்பட்டாள். இவன் சற்று தெளிவற்று இருப்பதைக்கண்டு சற்றே எச்சரிக்கையுணர்வுடன்…

``ஹலோ விக்னேஷ் எப்டி இருக்கீங்க? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சே பாத்து”

``வினயா இங்க வந்தாளா?”

``அவ ஊருக்கு கெளம்பிட்டாளே…”

``எப்போ கெளம்புனா?”

ஒன்னவர் இருக்கும்… ஹாஸ்பிடல்ல இருந்து வந்தா. டைம் ஆய்டுச்சின்னு உடனே கெளம்பிட்டா ரயில்வே ஸ்டேஷனுக்கு...”

“ஓ… ஓகே நா வரேன்” என்று கூறிவிட்டு பைக்கை விரட்டுகிறான் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி. 

காட்சி:8

மடார்…!

அவளின் பின் மண்டையைப் பிடித்து பலமாக சுவற்றில் மோதினான் விக்னேஷ்.  அவள் அப்படியே சரிந்து விழுந்தாள். அவன் தெளிவற்று காணப்பட்டான். அந்த ரயில்வே ஸ்டேஷனின் அந்த ஒதுக்குப் புறமான இடத்தை மேலும் கவனமாக சுற்றிப் பார்க்கிறான். இடது கையில் லேசான வலி வெகு நேரமாக. இப்போது அவளது மூக்கு காதுகளிலிருந்து ரத்தம் வழிந்தோடியது. விக்னேஷ் அவளைச் சுற்றிவந்து ஏன் அவளைக் கொன்றோம் என்பதுபோல ஒருமுறை முகத்தைப் பார்த்தான்.

வருண் செல்போனில் இருந்த குறுஞ்செய்தி:

[ ஹ்ம்ம்.. டன். ஹேலோதென் ஹைடோஸ் போட்ருக்கேன். ரெண்டு நாளைக்கு அவன்  எழுந்திருக்கவே முடியாது, ஃபுல்லா மயக்கமும் குழப்பமும்தான். அதுக்குள்ள நாம பெங்களூர் போயிட்டு வந்துடலாம். நா ஸ்டேஷன்ல வெயிட் பண்றேன், வந்துடு. பாய்]

இவ்வாறாக விக்னேஷ் சொல்லிய சம்பவங்களில் எவை உண்மை என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார் காவல் ஆய்வாளர் பழனிவேல்.

கதை : தியாகராஜன்