Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

எத்தனை இடர்களையும் தாக்குப் பிடிக்க வளர்ந்துவிட்டிருக்கும் வேரின் முகபாவனையை எப்போது

சொல்வனம்

எத்தனை இடர்களையும் தாக்குப் பிடிக்க வளர்ந்துவிட்டிருக்கும் வேரின் முகபாவனையை எப்போது

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

தியானம் கலைக்காதீர்

குடுவைக்கு

வெளியே நீந்தும் மீன்களுக்கு

உறக்கத்தில் நீர்க் கனவுகள்

வாஸ்து மீனுக்கு இரையாக

கொட்டப்படும் தங்கமீன்களுக்கு

பசியேயில்லை

சிறு குடுவையில்

தனியே சண்டைமீன்

உணவுத் துகள்களைக் கொட்டி

கலைக்கவேண்டாம் அதன் தியானத்தை

குட்டிக் குட்டியான

கபீஸ் மீன்கள்

குட்டிக் குட்டியாகக்

குட்டிகளை ஈனுகிறது

ஒரு நிலாவைப் போல வட்டமாக நீந்தும் அவை

நீர் வானின் நட்சத்திரங்கள்

கண்ணாடிச் சிறையில்

மீன்கள்

தண்ணீர்க் கம்பிகளை

நீந்தியே எண்ணுகின்றன

கடைகளிலிருந்து

நெகிழிப்பைகளில் பயணப்படும்

அலங்கார மீன்களின் ஆட்டமெல்லம்

ரப்பர் சுருக்கை விடுவிக்கும் வரைதான்

குடுவை உடைந்து சிதறி

மீன்கள் துடிப்பதைக்

காணச் சகியாமல் ஓடிவிடுகிறது

தண்ணீர்.

- வலங்கைமான் நூர்தீன்

நீர்க்குமிழி

மேடைகளில் விரும்பிய ஆடைகளில்

நேசத்துக்குரியோரின்

வேறுவேறு கோணங்களில்

சென்டிமீட்டரில் மாறுபடும் புன்னகைகளோடு

தோளணைந்து எடுத்துக்கொண்ட நிழற்படங்களென

அலைபேசிக் கோப்புகளில் நிறைந்துகிடக்கின்ற தற்படங்கள்

எழில்கொஞ்சும்

அருவிகள்

வானுயர்ந்த மரங்கள்

சிதைந்த கோட்டைகள்

உயர்ந்த கோபுரங்கள் எனக்

கையகப்படுத்தி நம்மையும் உடனிருத்தி

அழியாத கோலங்களாக்கி

சேமிப்போம்

நோயில் நைந்து புன்னகை நீங்கி

வெளிறிய முகம் கொண்டு

ஒருநாள் படுத்துக்கிடப்போம்

குளிரூட்டப்பட்ட பெட்டியில்

யார் அறிவார்கள்

சட்டகத்துள் மாலை மணக்க

சிரிக்கும் நிழற்படம் எதுவென

நுணுகி நோக்கியும் கண்டறிய முடியவேயில்லை

கண்ணீர் அஞ்சலிக்காக

ஒட்டப்படும் நிழற்படத்தில்

சாவின் நிழலை.

- தமிழரசி. இரா

சொல்வனம்

தவிர்த்தல்

பென்சிலைத் தவிர்க்கும் பொருட்டு

ஓவியமாய் வரையாமல்

கைகள் வீசி

அகலக் கண் விரித்து

உதடு துடிதுடிக்க

ஒவ்வொரு காட்சியையும்

தத்ரூபமாய் விளக்குகிறாள் மகள்

மரத்தைக் காப்பாற்றிய

பேரானந்தத் திருப்தியோடு.

- துரை.நந்தகுமார்

சன்னல் தாண்டும் வேர்கள்

டுக்ககத்தின் பூங்காவில்

முரட்டுத்தனமாய்

பந்தெறிந்து விளையாடும்

சிறார்களுக்கு பயந்து

பால்கனித் தொட்டியில்

நடப்பட்டிருக்கிறது

சின்னஞ்சிறு

நந்தியாவட்டைச்செடி

ஒளிக்கற்றைகளை

சன்னல் தாண்டி

எட்டிப் பிடிக்கும்

கிளையின் பார்வை

இப்போதெல்லாம்

மைதானத்தில் உருளும்

விளையாட்டுப் பந்தின்மீதே

படர்கிறது

எத்தனை இடர்களையும்

தாக்குப் பிடிக்க

வளர்ந்துவிட்டிருக்கும்

வேரின் முகபாவனையை

எப்போது

கவனிக்கப்போகின்றன

இந்த

போன்சாய் குடித்தனங்கள்?

- தி.கலையரசி.

பெய்யும் மழை

ரே மழை

எல்லாவற்றிருக்கும் காரணமாக இருக்கிறது

குழந்தையின் காய்ச்சலுக்கு

மரத்தின் கிளை உடைந்ததற்கு

குருவி ஒன்று அடைக்கலமானதற்கு

பூச்செடி ஒன்று சிதைந்துபோனதற்கு

மகன் வழுக்கி விழுந்து

கையை உடைத்துக் கொண்டதற்கு

விரும்பிப் படிக்கும் புத்தகம் நனைந்து போனதற்கு

இப்போது எழுதி முடித்த

இந்தக் கவிதைக்கு!

- மு.முபாரக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism