குறுக்கே பாயத் திட்டமிடுதல்

ஒருமுறையாவது

அந்த சூப்பர் மார்க்கெட் போய்விடவேண்டும்

முகத்தில் படாடோபமில்லை

எல்லா வேகத்தடைகளையும்

இலகுவாகக் கடந்து

பின்னிருப்பவரோடு

காதை ஒட்டிக்கொண்டு

பேசியபடி

இடதிலிருந்து வலதிற்கு மாற

வேகத்தடையில்லாத

பரந்த வெளியில் வண்டியின் முன்சக்கரத்தைக்

கொஞ்சம் கோணலாக வைத்தபடி நிற்கிறேன்

ஒரே பாய்ச்சலாகப் போக

இடதிலிருந்து வாகனங்கள்

நெருங்க

வலதிலிருந்து

வருகிறான் ரேஸ்வண்டி

இப்டிலாம் வந்தா ஒரே அடியா

அடிச்சுத் தூக்கிட்டுத்தான்

போவாங்க

வன்முறையற்றவனாம்

நின்று மிரட்டிவிட்டுப் போகிறான்

இனி இடதுமில்லை

வலதுமில்லை

தலைவிதிதான்!

-க.சி.அம்பிகாவர்ஷினி

அவள் சுமக்கும் சிலுவை

சிலுவையில் அறையப்பட்ட

தேவனைப்போல கைகளை நீட்டி

பலகையில் சாய்ந்து நிற்கிறாள்

நிறைமாதக் கர்ப்பிணியான

கழைக்கூத்தாடி

எதிரிலிருந்து வீசப்படுகிற கத்திகள்

தலைக்கு மேல்

மார்பின் பக்கவாட்டில்

கழுத்துக்கு அருகில்

இடுப்பின் இரண்டு ஓரங்களிலும் என

நூலளவு இடைவெளிதான்

உடலில் படாதவாறு

ஒவ்வொன்றாய்க் குத்தி நிற்கின்றன

வயிற்றில் உதைக்கும் குழந்தையை

உயிருக்குள் ரசித்தபடி புன்னகைக்கிறாள்

அசையாது நின்று

இப்போது சொல்லுங்கள்

எதிரிலிருந்து வரும் கத்திகளின்மேல்

அவள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை விடவா

பெரிதாய் இருக்கப்போகிறது

நீங்கள் என்மீது வைத்திருக்கும்

அல்லது

நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

- கணியன் செல்வராஜ்

பழையன கழிதல்

யாரோ எப்போதோ

சொன்ன வார்த்தையை

கிறுக்கல்களைக்

காலத்துக்கும் சுமந்து நிற்கும்

பாழடைந்து இடிந்த சுவர்களைப்போல

இன்னும் எண்ணிக்கொண்டே

வாழ்கிறீர்கள்

மற்றபடி

வாடகை வீட்டின்

சுவர்கள்

ஆண்டுக்கொரு முறையாவது

வண்ணங்கள் பூசிக்கொள்கின்றன

எல்லாவற்றையும்

அழித்துவிட்டு

புதுசு புதுசாக

- வெள்ளூர் ராஜா

நகல்

அவர்கள் வாடகைக்கு

எடுக்கப்பட்டிருந்த

வாசல் வரவேற்பாளர்கள்

உணர்வற்ற புன்னகையை

நேர்த்தியாக உதிர்க்கத் தெரிந்த

உயிருள்ள சிலைகள்

ஒட்டவேயில்லை மனதில்

முலாம் பூசிய முகத்தில்

ஒளித்து வைத்த

கவலை ரேகைகளைக்

கண்டுபிடித்தல் சாத்தியமற்றது

ஒப்புக்குத் தெளித்த

பன்னீர்த் துளிகளில்

கடமைக்காக இருந்தது

மணந்த வாசம்

வெள்ளித் தட்டில்

குங்குமமும் சந்தனமும்

தொட்டுக்கொள்ளக்

கூறிய மொழியில் செயற்கையின் கூடு

மொய்யெழுதித்

திரும்பி வருகையில்

நின்று களைத்து

நீட்டினர் தாம்பூலத்தை

பதிலுக்கு நன்றியுரைத்து

கேள்வி தொடுத்தேன்

சாப்பிட்டீர்களா..?

கனகா பாலன்

குறுக்கே பாயத் திட்டமிடுதல்

ஒருமுறையாவது

அந்த சூப்பர் மார்க்கெட் போய்விடவேண்டும்

முகத்தில் படாடோபமில்லை

எல்லா வேகத்தடைகளையும்

இலகுவாகக் கடந்து

பின்னிருப்பவரோடு

காதை ஒட்டிக்கொண்டு

பேசியபடி

இடதிலிருந்து வலதிற்கு மாற

வேகத்தடையில்லாத

பரந்த வெளியில் வண்டியின் முன்சக்கரத்தைக்

கொஞ்சம் கோணலாக வைத்தபடி நிற்கிறேன்

ஒரே பாய்ச்சலாகப் போக

இடதிலிருந்து வாகனங்கள்

நெருங்க

வலதிலிருந்து

வருகிறான் ரேஸ்வண்டி

இப்டிலாம் வந்தா ஒரே அடியா

அடிச்சுத் தூக்கிட்டுத்தான்

போவாங்க

வன்முறையற்றவனாம்

நின்று மிரட்டிவிட்டுப் போகிறான்

இனி இடதுமில்லை

வலதுமில்லை

தலைவிதிதான்!

-க.சி.அம்பிகாவர்ஷினி

அவள் சுமக்கும் சிலுவை

சிலுவையில் அறையப்பட்ட

தேவனைப்போல கைகளை நீட்டி

பலகையில் சாய்ந்து நிற்கிறாள்

நிறைமாதக் கர்ப்பிணியான

கழைக்கூத்தாடி

எதிரிலிருந்து வீசப்படுகிற கத்திகள்

தலைக்கு மேல்

மார்பின் பக்கவாட்டில்

கழுத்துக்கு அருகில்

இடுப்பின் இரண்டு ஓரங்களிலும் என

நூலளவு இடைவெளிதான்

உடலில் படாதவாறு

ஒவ்வொன்றாய்க் குத்தி நிற்கின்றன

வயிற்றில் உதைக்கும் குழந்தையை

உயிருக்குள் ரசித்தபடி புன்னகைக்கிறாள்

அசையாது நின்று

இப்போது சொல்லுங்கள்

எதிரிலிருந்து வரும் கத்திகளின்மேல்

அவள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை விடவா

பெரிதாய் இருக்கப்போகிறது

நீங்கள் என்மீது வைத்திருக்கும்

அல்லது

நான் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை.

- கணியன் செல்வராஜ்

பழையன கழிதல்

யாரோ எப்போதோ

சொன்ன வார்த்தையை

கிறுக்கல்களைக்

காலத்துக்கும் சுமந்து நிற்கும்

பாழடைந்து இடிந்த சுவர்களைப்போல

இன்னும் எண்ணிக்கொண்டே

வாழ்கிறீர்கள்

மற்றபடி

வாடகை வீட்டின்

சுவர்கள்

ஆண்டுக்கொரு முறையாவது

வண்ணங்கள் பூசிக்கொள்கின்றன

எல்லாவற்றையும்

அழித்துவிட்டு

புதுசு புதுசாக

- வெள்ளூர் ராஜா

நகல்

அவர்கள் வாடகைக்கு

எடுக்கப்பட்டிருந்த

வாசல் வரவேற்பாளர்கள்

உணர்வற்ற புன்னகையை

நேர்த்தியாக உதிர்க்கத் தெரிந்த

உயிருள்ள சிலைகள்

ஒட்டவேயில்லை மனதில்

முலாம் பூசிய முகத்தில்

ஒளித்து வைத்த

கவலை ரேகைகளைக்

கண்டுபிடித்தல் சாத்தியமற்றது

ஒப்புக்குத் தெளித்த

பன்னீர்த் துளிகளில்

கடமைக்காக இருந்தது

மணந்த வாசம்

வெள்ளித் தட்டில்

குங்குமமும் சந்தனமும்

தொட்டுக்கொள்ளக்

கூறிய மொழியில் செயற்கையின் கூடு

மொய்யெழுதித்

திரும்பி வருகையில்

நின்று களைத்து

நீட்டினர் தாம்பூலத்தை

பதிலுக்கு நன்றியுரைத்து

கேள்வி தொடுத்தேன்

சாப்பிட்டீர்களா..?

கனகா பாலன்