Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

களத்துமேட்டைப் பள்ளி மைதானமாக மாற்றிவிட்டார்கள்

சொல்வனம்

களத்துமேட்டைப் பள்ளி மைதானமாக மாற்றிவிட்டார்கள்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

டெமாக்ரசி சப்ளை

ன்லைனில்

கொஞ்சம் டெமாக்கரசி

ஆர்டர் செய்திருந்தேன்

ஆதார் சரிபார்க்கப்பட்டு

செக் அவுட் செய்கிறீர்களா

எனக் கேட்டார்கள்

ஐந்து வருடமாகச் செயல்படாத

வங்கிக்கணக்கு பற்றிச் சொன்னேன்

இந்த முறை

எனக்கு விலையில்லா

இலவச சேவைதான் எனச்

சொல்லி ஆர்டர்

கன்பார்ம் செய்தார்கள்

ஓடிபி வருமா எனக் கேட்டேன்

ஆள்காட்டி விரல் போதுமென்று

சொல்லியிருக்கிறார்கள்

இவர்களின் கருணை பற்றித் தெரியும் எனக்கு

இருந்தும் நான்

அந்த நாளுக்காக

ஆவலாகத்தான்

காத்திருக்கிறேன்..!

- ரா.பிரசன்னா

இழந்த பசுமை

பேத்தியின்

இரண்டாம் வகுப்பு புராஜெக்ட்டிற்கு

சிறுபானையில்

கேழ்வரகு நாற்றுகளை

ஓரளவு உயரத்திற்கு

வளர்த்தாயிற்று

இதற்கொரு தலைப்பு வேண்டுமென

அவள் நச்சரித்தபோது

முளை விட்ட நினைவுக்குள்

மெல்ல நெளிகிறது

ஆதி மண்புழு ஒன்று

அதன் அசைவைப் பசை போட்டு

மறைத்து

`கோ கிரீன்’ என நடுங்கும் கரத்தில்

எழுதி ஒட்டித் தருகிறார்

தன் பூர்வீகப் பச்சையை

தேசிய நெடுஞ்சாலைத் தாருக்குள்

தொலைத்துவிட்ட தாத்தா.

- தி.கலையரசி

சொல்வனம்

மாறாதது

ந்தாறு ஆண்டுகள்

ஆகிவிட்டன ஊருக்கு வந்து

ஐயனார் கோயிலில்

ஐம்பதடி அரிவாள்

சாத்தியிருக்கிறார்கள்

ஏரிக்கரையோரம்

சிமெண்ட் கரை

புதிதாகக் கட்டப்பட்டு

இருக்கிறது

களத்துமேட்டைப்

பள்ளி மைதானமாக

மாற்றிவிட்டார்கள்

நிறைய மாறியிருக்கிறது ஊரில்

பேருந்து நிறுத்தத்தில்

முழுப் போதையில்

எச்சில் ஓழுக

ஊரா காலனியா

என்று கேட்கும்

பெரிய தெரு

ஆறுமுகம் மட்டும்

அப்படியே இருக்கிறார்

மாறாமல்.

- மணிவண்ணன் மா

வேறுவேறு

ர் அடர்ந்த காட்டின்

மிகப்பெரிய புலி கொண்ட சபதம்

எல்லா உயிர்களையும்

தனக்கு இரையாக்கிக்கொள்வது

அதே காட்டின்

மிகப்பெரிய மான் கொண்ட சபதம்

எந்த உயிரினத்துக்கும்

தான் இரையாகாமல் இருப்பது.

- நல முத்துகருப்பசாமி