சாமி சேவல்

கோழிகளின் வாசமற்ற

ஒற்றை வேப்பமரக் கோயில்

நேர்ச்சை சேவலுக்குக் கடும் பசி

ஏப்பம் விடுகிறது சாமி

ஐயோ

சின்ன வெடைச் சேவலை விரட்டிய அம்முனிக்கு

முட்டையைவிட கோழி

முக்கியமாய் இருந்தது

சேவலுக்கு ஆறுதல் சொல்வதாய்

கோழி அறுத்த நாளில்

தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்

அம்மா

ஒவ்வொரு கோழிக்கும்

பெயர் வைக்கும் பாட்டி

கோழிகளை சிநேகிதிகளாகப் பார்க்கிறாளா இல்லை

சிநேகிதிகளே கோழியா

தம்பிக்கு ஆன்லைன் தேர்வு

மொத்த வீட்டையும்

ம்யூட்டில் போட்டார் ஆசிரியர்

கொக்கரிக்கும் சேவலின்

குரல்வளை நெரித்தாள் அம்மா!

- அ.நிர்மலா ஆனந்தி

நேர்கோட்டுப் பயணம்

இரை பழகும் ஆட்டுக்குட்டி

இலைகளில் வரைகிறது

விதவிதமாய்த்

தன் பசியின் ஓவியங்களை

நடைபயிலும் குழந்தையின்

குறிப்பிட்ட எல்லைக்குள்ளான

பயணங்கள்

ஒருபோதும் அலுப்பதேயில்லை

எழுதக் கற்கும் சிறுமி

தீட்டுகிறாள்

ஒவ்வொரு எழுத்தும்

உருவான வரலாற்றை

முதல் முதலாய்

சமைக்கப் பழகும்

ஒருவன் உணர்கிறான்

இதுவரையிலான

தான் சுவைக்க

விரும்பிய சுவைகளை.

- சாமி கிரிஷ்

காத்திருக்கும் எருக்கம்பூ

எருக்கம் பூவில்

நனைந்த

அவளின் வியர்வை வாசம்

வெயிலையும் நனைக்கிறது

ஆடும் தொரட்டியும்

விட்டுப் போன மீதங்களில்

தன்னொத்த பூக்களைத்

தேடியலைகிறது

எருக்கம்பூ

அவள் அறுத்துச் சென்ற

தளைகளுக்கிடையே

அரிவாளுக்குத் தப்பிப் பிழைத்த

மலராத ஒற்றை எருக்கஞ்செடி

வீட்டிற்கும் காட்டிற்கும் இடையில்

காணாமல்போன

மரிபோல பாதை மாறுவதில்லை அது

பூத்தே இருக்கிறது

கரிசலில் எருக்கு

நாளை

மரியின் வருகைக்காக.

- வீரசோழன். க.சோ.திருமாவளவன்

சாமி சேவல்

கோழிகளின் வாசமற்ற

ஒற்றை வேப்பமரக் கோயில்

நேர்ச்சை சேவலுக்குக் கடும் பசி

ஏப்பம் விடுகிறது சாமி

ஐயோ

சின்ன வெடைச் சேவலை விரட்டிய அம்முனிக்கு

முட்டையைவிட கோழி

முக்கியமாய் இருந்தது

சேவலுக்கு ஆறுதல் சொல்வதாய்

கோழி அறுத்த நாளில்

தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறாள்

அம்மா

ஒவ்வொரு கோழிக்கும்

பெயர் வைக்கும் பாட்டி

கோழிகளை சிநேகிதிகளாகப் பார்க்கிறாளா இல்லை

சிநேகிதிகளே கோழியா

தம்பிக்கு ஆன்லைன் தேர்வு

மொத்த வீட்டையும்

ம்யூட்டில் போட்டார் ஆசிரியர்

கொக்கரிக்கும் சேவலின்

குரல்வளை நெரித்தாள் அம்மா!

- அ.நிர்மலா ஆனந்தி

நேர்கோட்டுப் பயணம்

இரை பழகும் ஆட்டுக்குட்டி

இலைகளில் வரைகிறது

விதவிதமாய்த்

தன் பசியின் ஓவியங்களை

நடைபயிலும் குழந்தையின்

குறிப்பிட்ட எல்லைக்குள்ளான

பயணங்கள்

ஒருபோதும் அலுப்பதேயில்லை

எழுதக் கற்கும் சிறுமி

தீட்டுகிறாள்

ஒவ்வொரு எழுத்தும்

உருவான வரலாற்றை

முதல் முதலாய்

சமைக்கப் பழகும்

ஒருவன் உணர்கிறான்

இதுவரையிலான

தான் சுவைக்க

விரும்பிய சுவைகளை.

- சாமி கிரிஷ்

காத்திருக்கும் எருக்கம்பூ

எருக்கம் பூவில்

நனைந்த

அவளின் வியர்வை வாசம்

வெயிலையும் நனைக்கிறது

ஆடும் தொரட்டியும்

விட்டுப் போன மீதங்களில்

தன்னொத்த பூக்களைத்

தேடியலைகிறது

எருக்கம்பூ

அவள் அறுத்துச் சென்ற

தளைகளுக்கிடையே

அரிவாளுக்குத் தப்பிப் பிழைத்த

மலராத ஒற்றை எருக்கஞ்செடி

வீட்டிற்கும் காட்டிற்கும் இடையில்

காணாமல்போன

மரிபோல பாதை மாறுவதில்லை அது

பூத்தே இருக்கிறது

கரிசலில் எருக்கு

நாளை

மரியின் வருகைக்காக.

- வீரசோழன். க.சோ.திருமாவளவன்